Sunday, May 14, 2006

சித்திர பௌர்ணமி

Posted by Picasa பௌர்ணமி,அழகர்,அபிராமி எல்லாமே பார்தததுமே மனதைக் குளிரவைக்கும் நிகழ்வுகள், கடவுளர்கள்.
சித்திரை ,வைகாசி ,ஆவணி பௌர்ணமியும் கார்த்திகை பவுர்ணமியும் சிறப்பாகப் பேசப்படுகின்றன.
இப்படிப் பார்த்துகொண்டெ போனால் எல்லா நாளும் எதொ ஒரு விஷயத்தில் நமக்கு முக்கிய நாளாகப் போகின்றன.
பௌர்ணமியை அனுபவிக்க நமக்கு பவர்கட் வந்தால் தேவலை என்று எனக்குத் தோன்றும்.
வேரு வழியில்லாமல் எல்லொரும் வெளியெ வந்துதானே ஆக வேண்டும்.
சினிமாவால் இருந்தால் அது வேறு, சாப்பாடு,பாட்டு ,ஆட்டம். எல்லாம் வரும்.
எப்போதும் நினைக்க வைப்பது "அற்றைத் திங்கள்" என்று வள்ளல் பாரியின் மக்கள் பாடும் பாடல் தான்.
அது சோகம்.
னம்ம எம் ஜீ ஆரும் சரொஜா தேவியும் பாடிய வால்ட்ஸ் டைப் சாங்" அன்று வந்ததும் அதெ நிலா.'
பிறகு பாரதியும், சரொஜா தேவியும் பாடிய அன்றொருநாள் இதெ நிலவில் அவன் இருந்தான் பாடல்.
இப்போதும் நிலவு பாடல்கள் உண்டு.
னினைவுக்கு வர நேரமாகிறது.....:-)))



Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...