Saturday, August 29, 2015

கி.இராஜநாராயணன் அய்யா--1


எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும் நடக்குமா என்று இன்றுவரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் என் அம்மா..அம்மாவுக்கு தமிழ் மேல் ஆர்வம். அவரும் அப்பாவும் எப்போதும் புத்தகங்களுக்குச் செலவு செய்வதை மறுக்க மாட்டார்கள்.4 அணா ஆனந்தவிகடன் எப்போதும் உண்டு.
கலைமகள் 8அணா,.மஞ்சரியும் அதே விலை.அக்கம்பக்கம் கிடைக்கும் கல்கியும் குமுதமும்..ஒரு பக்கம் வீணாகாமல் படிப்போம். படித்தபிறகு, புத்தகங்கள் பேப்பர் வியாபாரியிடம் போகாது. அப்பவின் ஞாயிறு விடுமுறைகள் வாரைதழ்களைப் பிரிப்பது. கட்டுவது.தொடர்கதைகளை அடுக்குவது.
ஒரு வாரம் கூட விட்டுப் போயிருக்காது.சிறுகதைகள் தனியாகப் பிரிக்கப் படும். எல்லாம் இப்போது போல் பைண்டிங் கடைக்குப் போகாது.
கோணி ஊசி என்று ஒன்று எப்போதுமே இருக்கும் வீட்டில்.பொறுமையாக உட்கார்ந்து ஒரு ஒரு தொடர்கதையையும் டிவைன் நூலால் சேர்த்துத் தைப்பார்.
அப்படி சேர்த்த, தில்லானா மோகனாம்பாள், சேவற்கொடியோனின் உன் கண்ணில் நீர் வழிந்தால்,,சுப்பு சார் நாவலில் வரும்சிங்காரம், செங்கமலம் எல்லோரும் எங்களுக்கு உயிரோடு உலாவிய பாத்திரங்கள்..செங்கமலத்தின் சீரும், அவளின் சீறிய காளையும் அவர்கள் வெட்ட வெளியில் அமைக்கும் குடிசையும்கோபுலு சார் கைவண்ண வாரவாரம் நடமாடிப் புத்தகத்தில் புகுந்தார்கள்.
காலப்போக்கில் அந்தப் புத்தகங்கள் காணாமல் பொனதுதான் எங்கள் வருத்தம். அதன் பிறகு புதிய நாவல்களை அப்பா  அம்மாவுக்கு லெண்டிங் லைபிரரியில் இருந்து எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார்.அப்பாவும் திருநாட்டுக்குச் சென்றபோது அம்மாவுக்கு நானும் தம்பிகளும் புத்தகங்கள் பரிசளிக்க ஆரம்பித்தோம்.
அம்மாவுக்கு ரொம்ப பொறுமை.எங்கள் விருப்பத்திற்காக வாங்கிய புத்தகங்களை அவள் படிப்பதை நிறுத்த 4 வருடம் ஆனது.
பிறகுதான் வாய் திறந்து எனக்கு ராஜநாரயணன் கதைகள் பிடிக்கும் வாங்கித்தர முடியுமா என்றாள்!!! ஏம்மா இதை முன்னாடியே சொல்லலை என்று கேட்டால் நீங்களும் நல்ல புத்தகங்கள் தான் கொடுத்தீர்கள்.எனக்கு இப்போது அவைகள் வேண்டி இருக்கவில்லை.எளிமையாகப் படிக்க ஆசையாக இருக்கிறது என்றார்..
அப்போது அரம்பித்தது இப்போது நான் எழுதும் பதிவு.அம்மாவுக்கும் படித்து முடித்து இனிமேல் கையில் புத்தகம் பிடித்து படிக்க முடியாத பலவீனம் வந்தது,.என்னைக் கூப்பிட்டார். நான் வாங்கிப் பரிசளித்த திரு. அய்யா அவர்களின் " கதைகள்" புஸ்தகத்தைஎன்னிடமே கொடுத்துவிட்டார். சில நாட்களில் அம்மாவும் அப்பாவை சேர வேண்டிய நாள் வந்தது.அப்போதுதான் அவர் கொடுத்த புத்தகத்தை பார்த்தேன்.அதில் சில குறிப்புகள்,சில தகவல்கள் எழுதி வைத்திருந்தார்.கடைசி பக்கத்தில் தன் மணீயான கையெழுத்தில் திரு ராஜநாரயணனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எழுதி இருந்தது.
இதை எப்படி நிறைவேற்றுவது என்று பார்த்தபோது புத்தக முதலிலேயே அவர்கள் குடியிருக்கும் இடமும், தொலைபேசி எண்ணும்கொடுத்து இருந்தார்கள்.அய்யாவைப் பற்றீப் பத்திரிகைகளிலும் படித்து இருக்கிறேன்.
அவருடைய சில கதைகளை விகடன், குமுதம் இவைகளில் வெகு ரசனையுடன் வெலிவந்தன. அதனால் அவரது உயர்வும் பெருமையும் கொஞ்சமாவது தெரியும்.அதனால் அவரிடம் பேச பயம்தான்.
நாட்களைத் தள்ளிப் போட்டேன்.பிறகு ஒருவாறு முனைப்புடன் அவர்கள் வீட்டுக்கு டெலிபோன் செய்தும் விட்டேன்.
அய்யாவின் வீட்டுஅம்மாதான் எடுத்தாரகள். யார் தெரியுமா, அய்யா அவர்களின் சில கதைகளில் வரும் அவருடைய இல்லத்து அரசி. அம்மா கணவதி. அருமையான இல்லாள்.அய்யாவைத்தவிர வேறு எதுவும் அம்மாவுக்குத் தெரியாது. நல்ல படிப்பாளி.நிறைய சொல்ல வேண்டும் அவர்களைப் பற்றி,,
நான் இன்னார் , அய்யாவுடன் பேச வேண்டும் என்றதும், "அதுக்கென்ன இதோ பேசுங்க." என்னாங்க யாரோ சென்னையிலிருந்து ஒரு பொண்ணு பேசுது' என்று அய்யா அவர்களிடம் கொடுத்து விட்டார்......தொடரும்...

13 comments:

கோவி.கண்ணன் said...

கி.இராஜநாராயணன் அய்யாவின் கதைகளை படித்திருக்கிறேன். மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும். அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நன்றாக சுவைபட எழுதுகிறீர்கள்.

மொத்தமாக ஒரே பத்தியில் எழுதாமல், பத்திப் பத்தியாக எழுதினால் மேலும் நன்றாக இருக்கும்

வல்லிசிம்ஹன் said...

முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி, கண்ணன்.
காப்பி செய்துவிட்டேன். கொஞ்சம் நிதானமாக எடிட் செய்து இருக்க வெண்டும்.
நேரில் பழகுவதற்கும் இனிமையானவர். நிறைய நகைச்சுவையோடு அவரும் அம்மாவும் பேசி சிரிப்பது கண்கொள்ளாக்காட்சி. அடுத்த பதிவும் படித்துவிட்டு சொல்லுங்கள்.

துளசி கோபால் said...

மானு,

எளிமையா எழுதற அவரோட எழுத்துக்கள் அப்படியே மனசுலே 'பச்சக்'ன்னு ஒட்டிக்கிது.இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி.ஒரே கதையைத் திருப்பிப் படிக்கும்போதும்
அலுப்பு ஏற்படுவதே இல்லை.அப்படியே கிராம வழக்கு படிந்து இருக்கு.

ramachandranusha(உஷா) said...

நீங்களா அத்துழாய் மேடம்?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். usha.நானேதான்.உங்க கதை வளர்சிதை மாற்றம் பற்றீப் படித்தேன். ரொம்ப நன்றாக இருந்தது.வாழ்த்துக்களும் போட்டு இருந்தேன்.

ramachandranusha(உஷா) said...

அட கடவுளே, "மனு" நீங்களா?புரோபைல வேற பேரூ, இன்னும் வேற எத்தனை இருக்கு :-))))
மேடம், ஜூலை கடைசில சென்னை வரேன். அப்ப ஒரு மீட்டிங் போட்டுடலாம். சரியா?

வல்லிசிம்ஹன் said...

நாமேதான்.ரொம்ப நாள் ஆசைப்பட்ட பேரெல்லாம் வைத்துக் கொண்டு விட்டேன்.:-))
கட்டாயம் பார்க்கலாம் Usha,தமிழில் ஆ வரலை என் கீபோர்டில்.ஏனம்மா மேடமா? வயசே ஆகலியே எனக்கு.இருந்திருந்தா 34.:-))
நன்றி உஷஆ.

Geetha Sambasivam said...

பரவாயில்லை மனு,
கடைசியில் நீங்களும் சின்னப்பெண்ணாகி விட்டீர்கள். ராஜநாராயணன் பற்றிய பதிவு இர்ண்டும் நன்றாக இருக்கிறது. என்னிடம் "கோபல்ல கிராமம்" இருந்தது. தொலைந்து விட்டது. அப்புறம் வாங்கவே முடியவில்லை. மறக்கவே முடியாத கதாபாத்திரங்கள். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

Geetha Sambasivam said...

தமிழில் "ஆ" வருவதற்கு "A" வையே இரண்டு தரம் தட்டுங்கள். அல்லது shift போட்டு "A" அழுத்துங்கள். "ஐ" வேண்டுமென்றால் "AI" சேர்த்து அழுத்தினால் "ஐ" வரும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா வாங்க. அகரம் வெளியீட்டுக்கு எழுதினால் புத்தகம் அனுப்புகிறார்கள்.ஐயாவை விட அய்யா எனக்குப் பிடிக்கிறது.அவர்கள் இருவருக்கும் என்னைப் பார்க்கும் வரைதான் ஒரு பெண். அப்புறம் நான் அம்மா ஆகிட்டேன்.

சிவகுமாரன் said...

ஆகா. அய்யாவை சந்தித்தீர்களா ? பாக்கியம் பெற்றவர் நீங்கள்.

Unknown said...

புதிய‌ தமிழன் திரட்டி(http://www.tamiln.in)

கி.இராஜநாராயணன் அய்யா--1

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...