Thursday, May 11, 2006

பெண் குழந்தை

Posted by Picasaஎவ்வளவு பேருக்கு உங்களுக்கு பெண் ,பிறந்திருக்கிறது, அம்மா! என்றோ அல்லது சார்.! என்றோ கேட்கும் பாக்கியம் கிடைக்கும்?
எங்கள் தலைமுறையில் நிறைய பேருக்கு அது கிடைத்தது.
அப்புறம் தான் பிறக்கப்போகும் குழந்தையின் ஜென்டர் டெஸ்ட் வந்தது.
தொடர்ந்த விளைவுகள் எல்லாம் நமக்குத் தெரியும்.
இப்போது உள்ள புது கணக்கெடுப்பின் அளவுப்படி பெண்கள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து விட்டதாம்.
இந்த குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்ததும் இத்தனை களங்கமில்லாத சிரிப்பை பார்த்ததும்,
எனக்குத் தோன்றிய நினைவுகள் இவை. எவ்வளவோ நியாயம் கற்பிக்கப் படலாம் பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கு. கடவுளே வேண்டாம் என்று தீர்மானித்து இருந்தால் நான் இங்கே இப்படி ஒரு கணிணி முன்னால் உட்கார்ந்து என் சுற்றத்திற்காக இதை எழுதிக்கொண்டு இருக்க மாட்டேன்.

"மங்கையராகப் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா"
இந்த சொல்லே உண்மையாக வேண்டும்.

9 comments:

துளசி கோபால் said...

ஹய்யோடா.......

sooooooooo cute.

manu said...

டெஸ்ட்

Muthu said...

உலகத்தில் எல்லாருமே அப்படி இல்லை. பெண்குழந்தை வேண்டும் என்று தவமாய்த் தவமிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

manu said...

முத்து, நன்றி.வந்ததற்கும்.சொன்னதற்கும்.இருக்கிரார்கள். இதில் பெற்றோர்களை விட,அவர்களைப் பெற்றவர்களின் ஆசை வேறு குறுக்கே வருகிறது.அதையும் நான் சொல்லி இருக்க வேண்டும்.உ-ம் அவர்கள் அம்மாவுக்கு பிறந்ததெல்லாம் ஆண் என்றால் ஒரு பெண் பேத்தியாக வரவேண்டும் என்றும், வைசி வெர்ஸ் ஆண் ,வேண்டும் என்றும் எண்ணுபவர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.அது பெறப்போகிறவர்களின் மன நிலையையும் பாதிக்கிறது.அதைத்தான் சொல்ல வந்தேன்.

கீதா சாம்பசிவம் said...

மனு, இரண்டு ப்ளாக் வைத்திருக்கிறீர்களா என்ன? இரண்டும் பதிந்து தமிழ் மணத்தில் வருகிறதா? நேரம் எப்படிக் கிடைக்கிறது? வாழ்த்துக்கள். ரொம்ப பிசியாக இருப்பதால் நம்ம வீட்டுக்கு வர நேரம் கிடைப்பது இல்லை. அப்படித்தானே. எனக்கு முதலில் பெண்தான். ஆனால் நீங்கள் சொல்வது போல" பாக்கியம் பெண் பிறப்பது" என்று சொல்வது எனக்குத் தெரிந்து தென் மாவட்டங்களில் தான்.

பரஞ்சோதி said...

அம்மா,

நான் உங்களை என் சிறுவர் பாடல்கள் பதிவில் அய்யா என்று சொல்லிட்டேன்.

நானும் என் மனைவியும் பெண் குழந்தை தான் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினோம், குழந்தைக்கு சக்தி என்ற பெயரையும் முன்பே தேர்வு செய்து வைத்து விட்டோம். பெயருக்கு ஏற்ப சக்தியுடையவராக வளர்த்து வருகிறோம், இப்போ 1 ½ வயது ஆகிறது, படுசுட்டி பெண்.

3 மாதங்கள் சென்னையில் என் அம்மாவுடன் தங்கியிருந்து நேற்று தான் வந்தார், ஆகா என்னமா பேசுகிறார் தெரியுமா? பெரிய மனுஷி மாதிரி நடந்து கொள்கிறார். என் மகளின் ஒவ்வொரு செயலையும் ரசிக்கிறேன்.

manu said...

எதாக இருந்தால் என்ன பரஞ்சோதி.சக்தி என்ன அழகான பெயர். நல்ல படியாக வளாந்து, படித்து நல்ல பெயர் எடுக்கணும்.உங்களுக்கும் மனைவிக்கும், சக்திக்கும் எங்கள் அன்னையர் தின வாழ்த்துக்கள்.உங்கள் அன்னைக்கும் தான்.

manu said...

கீதா, இரண்டும் வேற சப்ஜெக்ட் டீல் பண்ணனும்னு நினைச்சேன். சில சமையம் மாறி விடுகிறது. 2 வீட்டுக்கே இந்த கதி. குமரன் 20 வீடு-ப்லொக்ஸ் எப்படி ஹாண்டில் செய்கிராரோ.ரொம்ப சிரமம்.நன்றி.உங்களுக்கு தனி மெயில் அனுப்புகிறென்.

aaradhana said...

பெண் சிசு என்று தெரிந்ததும்..அப்பப்பா...இந்த மாமியார்கலள் படுத்தும் பாடு..

கி.இராஜநாராயணன் அய்யா--1

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...