பச்சை நிறம் என்றாலெ நினைவுக்கு வருவது கிளியும் மீனாட்சியும் தான். இந்த கிளியும் கோதை கிளியும் கொஞ்சும் கிளிகள் .என்ன இங்கே இருக்கிற கிளி அம்மா சொக்கா என்றூ கூவும். ஆண்டாளம்மா கையில் இருப்பவஙக ரங்கா, ரங்கா என்பார்கள்.சிறு வயதில் புதுமண்டபம் போவதே வளயலுக்கும், கிளிஅம்மா பார்க்கவும் தான்.நேற்று யேதொ சினிமாவில் சிரிவில்லிபுதூரில் செய்த கிளி காண்பித்தார்கள். அவர்களுக்கு நன்றி. இப்போது எங்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை. கிளியே என்ற பாடல்கள் ஆயிரம்.
சிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமியின் துணை ஒரு கிளியும் மானும் தான். கல்கி அழகாக சுக மஹரிஷி என்பார்.




