Wednesday, May 17, 2006

ஒரே வழிசல்

வழிவது என்ற சொல் எப்படி வந்து இருக்கும்.?பாத்திரம், பண்டம் நிரைந்து விட்டால் வழிந்து ஓடும் அதே மாதிரி அணைக்கட்டு, பால் பொங்கி வழிவது எல்லாமே நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்.இப்பொது நான் சொல்ல வந்தது அந்த வழிவது இல்லை. பழங்கால வழிசல். எப்போதெல்லாம் இந்த அனிச்சை செயலை நாம்,இல்லாவிட்டால் மற்றவர்கள் செய்கிரார்கள் என்று பார்த்தால்,முதல் காரணம் நம் புத்திசாலித்தனத்தின் மேல் நமக்கு இருக்கும் அபார நம்பிக்கை தான். ஒரு உற்சாக வேளையில், ( எங்களுக்கெல்லாம் புடவைகள், சினிமா, சாப்பாடு (சர்க்கரை ரத்ததில் இருந்தால் அதை பற்றியே பேசத்தோணுமாம்) பற்றிப்பேசும்போது தனியாக ஒரு உற்சாகம் பிடித்துக்கொள்ளும்).என் தோழி தான் வாங்கின கைத்தறி புடவையை சிலாகித்துப் பேசி எல்லாரையும் அசத்தினாள். அந்த ஊரில் நெசவாளிகள் கஷ்டப்படுவதையும் தான் எல்லோருக்கும் அங்கிருந்து தறி விலைக்கே தருவித்துக் கொடுப்பதாகவும் உணர்ச்சி பொங்கக் கூறும் போது தான் மாட்டிக்கொண்டாள். இதோ அவள்,"" இந்த மாதிரி நீங்க பார்த்தெ இருக்க முடியாது.நீலத்திலெ ப்ளூ ஸ்பாட்ஸ்,ப்லாக்கிலே கருப்பு பொட்டு,சிவப்பிலே ரெட் பார்டெர் "" என்று அடுக்கிக் கொண்டே போனாள்.எங்களுக்கு அவள் பேச்சின் தீவிரம் உரைத்ததே ஒழிய அதிலிருந்த காமெடி,முரண் புரியவில்லை.உண்மையாகவா? எல்லாம் புதுப் புது அமைப்பாக இருக்கிரதே. நீலத்திலே ப்ளூ!!. ரேர் காம்பினஷன்ந்ம்ம எல்லோரும் சேர்ந்து வாங்கினால் அந்த தறிக் குடும்பத்துக்கு உதவி. செய்த மாதிரி இருக்கும். ,என்று ஆளுக்கு 2 கருப்பிலே ப்லாக் புட்டா, ரெட்டிலே சிகாப்பு பார்டர் என்று அவரவர் கற்பனையில் மூழ்கின போதுதான்,அடச்சே என்று விழித்துக்கொண்டோம். அவள் சொன்னதைதிருப்பிச் சொல்லும்போது நாங்கள் செய்த வண்ணக் கனவு புடவைகள் சாயம் இழந்தன.ஓ, இந்த வெய்யில் என்னை குழப்பி விட்டது. உங்களுக்குப் பிடித்த எப்போதும் உடுத்தும் துணிமணிகளே வாங்கலாம் என்று அவசர அவசரமாக நடையைக் காட்டினாள். அதிலிருந்து நாங்கள் அவளை " அ ரேர் காம்பொ " என்றுதான் அழைக்கிறோம்.

2 comments:

துளசி கோபால் said...

ஆஹ்ஹாஆஆஆஆஆஆ.
இப்பத்தெரிஞ்சு போச்சு எனக்கு என்னக் கலர் புடவை வேணுமுன்னு!

க்ரீன்லே பச்சைக் கட்டம் போட்டது வேணும்:-))))

வல்லிசிம்ஹன் said...

அட படிச்சுட்டீங்களா.
அதுக்கென்ன இலைப் பச்சை நிறத்திலே பாட்டில் க்ரீன் கட்டம் போடலாமெ?அப்படியே சிகப்பும் ஜரிகையும் பார்டெர்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...