Saturday, June 03, 2006

குண்டாக இருப்பது தப்பா?

Posted by Picasaஇப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக,
எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.
ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை. எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!!
அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.
ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ, ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை.
அப்பா அம்மாவிடம் கலந்து பேசி,
ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார்.
சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான்.
பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.
எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன். "ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே.
உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார். ( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு)
அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்,புக்கைக் கண்டா கண்,
ஹிண்டு பேப்பரில கண்,
ஆனந்தவிகடன்லெ கண்ணு,
மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு
என்று பாடாத குறையாகச் சொன்னார்.
திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான்.
பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி.
எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது.
அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.
இவ்வளவு கதை இப்போது எதற்கு/ தெரியுமா?
இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் மாமி ஏன் நீ இளைக்கவே இல்லை?
வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா.
வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன். அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)
(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?)
எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.
பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன்.
48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம்
இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு. எல்லாம் காலம் செய்யும் கோலம். எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு.
பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?

நீங்களெல்லாம் எப்படி?






Sunday, May 28, 2006

அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்-தேன்கூடு போட்டி

மலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம்? உண்டு. அசைக்க முடியாத குணம், . ,
கனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம், அது என்ன அம்மாவையும் கூட இழுக்கணும் என்று பெண்கள் யோசிக்கலாம். எப்படி இது உண்மையாகும்?உண்டும்மா உண்டு. கருத்து என்னவோ ஆதாரமாக இருந்த என் மாமியாரைப் பற்றீத்தான்.
நல்ல படிப்பாளி. அழகு, அடக்கம் என்று நிறைவான மனுஷி .
திருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு என்னை வரவேற்று அழைத்த அந்த நிமிடத்திலிருந்து
தன் சிகித்சைக்காக ஆம்புலன்சில் மாற்றப்பட்ட அந்த நிமிடம் வரை எங்களுக்கு நிழல் கொடுத்தவர் எங்கள் கமலம்மா தான்.

மாண்பு மிகுந்த மாமியார்கள் எனக்கு மிகப் பழக்கம். ...எனக்கு இரண்டு மாமியார்கள்.
அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.
ஒஹோ. பாலச்சந்தர் படம் போல் தோன்றுகிறதோ?
அதுவும் இல்லை. இவர்கள் இருவருடனும்தான் என் இல்வாழ்க்கை (கணவரும் கூட) ஒரு மங்களகரமான நாளில் ஆரம்பித்தது.

ஏன் கணவர் கூட என்று தானேசொல்ல வேண்டும்/ அவர்தானே முதலில்? அதுதான் எல்லோருக்கும் தெரியுமே.
திருமணமான புதிதில் எங்களுக்கு (அந்த காலத்தில்)
கணவர் எல்லாம் ஜுஜஜூபி. ஏனென்றால் அவர்கள் பக்கம் நாம் போவது காப்பி வேணுமா?
சாப்பிடக் கூப்பிடறங்க.
சொல்லத்தான்.

நான் சொல்வது கற்காலம் இல்லை. ஒரு 40 வருடங்கள் முன்னால்.
அவர்கள் மலை மாதிரி திடமாக இருந்து எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். ஒரு மொஃfஅசில் பெண்ணுக்கு என்ன தெரியுமொ அதைவிட ரொம்ப குறைவான அறிவுள்ள ஜீவன் நான்.
திருமணத்தன்னிக்கே " ஓ, இந்தப் பொண்ணு இவ்வளவு சிரிச்சுப் பேசறதே "என்று சொன்ன விருந்தினர் நடுவில் எனக்கு ஆதரவாகப் பக்கத்தில் நின்று கொண்டு எனக்கு பலம் கொடுதது என் அம்மாமியார் தான்.

எனக்கு அவரை அம்மா என்று கூப்பிடுவதில் தயக்கம் துளியும் வரவில்லை.
நீ எப்போ வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் போகலாம். ஒரே ஒரு வார்த்தை பாட்டி(அவங்களொட மாமியார்) கிட்டே சொல்லிட்டு போ.//
//அது அவர்களுக்குப் பழக்கமாகிப் போன வார்த்தை. அவ்வளவு மரியாதையும் தானும் அந்தப் பாட்டியிடம் வைத்து இருந்ததால் எனக்கும் வேறு நினைப்பு வரவில்லை..
எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)
பக்கத்தில் வந்து இப்படி பண்ண வேண்டாம்பா. நான் பார்த்துக்கிறென், என்று காப்பாத்துவார். ஏன் அந்த வார்த்தை?
அவருக்கும் மருமகளாக வந்த போது இருந்த சூழ்நிலை நினைவு வந்ததோ?
திருமதி எம்.எல்.வி பாடிய பாடலோடு 60 களில் ஒரு படம் வந்தது. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்ற படம்.
அதைப் பார்த்து மனம் திருந்தியவர்கள் எத்தனையோ பேர்கள்.
அதாவது இந்த மாதிரியும் நாம் இருக்கலாமே என்று நினைத்தவர்கள் இருந்தார்கள்
எங்க அம்மா ,
எங்கள் வீட்டில் எதுவுமே (personal management) பயிற்சி எடுக்காமல் தன் நல்ல குணத்தினாலேயெ எல்லோரையும் அரவணைத்து சென்றவர் எங்கள் கமலம்மா.
எந்த வித டென்ஷனாக இருந்தாலும் முகத்தில் காண்பிக்காமல் தீர்வு கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை.
ஒரு பெரிய குடும்பத்தின் ஊடல்கள் கூடல்கள் எல்லாவற்றையும் சமாளிப்பதைப் பார்த்து நான் அதிசயப்படுவேன்.
இவ்வளவையும் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டிய அவசியம்?
நானும் ஒரு மாமியாராக ப்ரொமோட் ஆகிவிட்டதால்.
குற்றம் காணாமல் குணம் மட்டும் கண்டு சிரிப்போடு வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்த என் அம்மாமியாரை இன்றும் என்றும் வணங்குகிறென் .

அவர் அவ்வளவு இல்லாவிட்டாலும் பத்து சதவிகிதம் இருந்தால் கூட போதும்.





Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...