Friday, June 23, 2006

ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் &other gauls








மேலெ உள்ள அனைத்து உருவங்களும் எங்கள் குடும்பத்தில் ஒன்றியவை.
காசினி,உடர்சோ என்ற ப்ஃரென்ச் நண்பர்கள் உருவாக்கிய காமிக் காரெக்டர்கள் புத்தக வடிவிலும் இப்போது திரையிலும் உலா வருகிறார்கள்.
இவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் குழந்தைகளின் பள்ளிப்பருவத்தில்.
அப்போது இந்தப் புத்தகங்களின் விலை 25ரூபாய் என்று நினைக்கிறேன்.
மாதம் ஒரு புத்தகம் என்ற கணக்கில் வாங்க முடிந்தது அவ்வளவுதான்.!
லாண்ட்மார்க் வருவதற்கு முந்திய காலம்.
அதுவரை ஹிக்கின்பாதம்ஸ்,கென்னடி புக் செண்டர்,PAI&CO
என்று எங்கள் புத்தக வேட்டைகள் நடக்கும்.
பிறந்த நாள் பரிசு அனேகமாகப் புத்தகங்கள் தான்.
பிறகு வருடாந்திர விழாவாகப் புத்தகக் கண்காட்சி வரத் தொடங்கியது.
அந்தப் பத்து நாட்களும் ஒரே பரபரப்புதான்.
எல்லொருக்கும் பொருந்தி, சரிவரும் நாட்களில் மதியத்திலிருந்து இரவும் மார்கழிக்காற்றும் கூடவே பசியும் வீட்டை நினைவுக்குக் கொண்டு வரும்போது
கிளம்பி விடுவோம்.
மனம் வராமல் இனிமேல் அடுத்த வருடம்தானா என்ற ஏக்கத்தோடுதான் திரும்புவோம்.
இப்போது நிலைமை வேறு.
குழந்தைகள் வளரும் நேரம் சுவைகளும் மாறின. அவர்களுக்குப் படிப்பு கூடியபோது பொழுதுபோக்கு ,நண்பர்கள், கல்லூரி கல்ச்சுரல், என்று மாறியது.
படிக்கும் புத்தகங்களும் சுய மேம்பாடு என்று அழைக்கப்படும் வகையில் திரும்பின.
ஆனால் நாங்கள் இன்னும் விரும்பும் பல நண்பர்களில் மேலெ படத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.இவர்களைத்தவிர இம்பெடிமெண்டா,ஜீரியாடிரிக்ஸ்,

ககாfஃனிக்ஸ், எப்போதுமே சண்டை போடும் மீன் விற்பவர்,முக்கிய உறுப்பினரான போர்(பன்றி,வராகம்)........

எல்லாருடைய படங்களும் போடவில்லை.

மீண்டும் பார்க்கலாமே.

2 comments:

பரஞ்சோதி said...

அம்மா,

கார்ட்டூன் படங்கள் போட்டிருக்கீங்க, ஏதேனும் தகவல் உண்டா?

எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள், சமீபத்தில் கூட படமாக கூட வந்தது.

- பரஞ்சோதி

வல்லிசிம்ஹன் said...

பரஞ்ஜோதி,
நான் தகவல் போடுமுன்னரே நீங்கள் பார்த்ததுதான் ஆச்சரியம்.

மின்தடை வந்ததால் பாதியில்
நின்றது என்று விட்டு விட்டேன்.
இப்போது பார்த்தால் பின்னூட்டமே வந்துவிட்டது.

நாங்களும் ஒரு ஆஸ்டெரிக்ஸ் படம் இரு வருடங்களுக்கு முன்னால் துபாயில் பார்த்தோம்.

காமிக்ஸை ரசித்த அளவுக்குப் படத்தை ரசிக்க முடியவில்லை. தகவல் இன்று போட முயற்சிக்கிறேன்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...