Tuesday, May 12, 2015

Dream merchants


இத்தனை படங்கள்
இவ்வளவு நட்சத்திரங்கள், எல்லோருமே என் விஷயத்தில் மிகவும்
நன்மை செய்தவர்கள். இந்தப் பதிவிலும் இதற்கு முந்தின பதிவிலும் எனக்கு உள்ள சினிமா (மெமரி) டைரக்டரியிலிருந்து
சில நபர்களின் புகைப்படங்கள்,திரை ஸ்டில்கள் என்று முடிந்த வரை (எனக்குப் பிடித்த நடிக நடிகையரின்) கொடுத்து இருக்கிறேன்.

எத்தனையொ ஆயிரக்கணக்கான முகங்கள் திரையில் மின்னி நமக்கு இன்பத்தையும் ,நிறைவையும் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இவர்கள்.






Posted by Picasaஇவர்களில் முதல்வர் வேறு யாரக இருக்க முடியும். நம்ம சிவாஜி சார் தான்.
அடுத்தது.எஸ்.வீ.ரங்கராவ். எப்போதுமே இனிமையான கம்பீரம். நாகரீகமான தோற்றம்.பண்பட்ட நடிப்பு. நமது சொந்தப் பெரியப்பாவையோ மாமாவையோ நினைவு படுத்தும் கனிவு.
எப்போதுமே ஆனந்தம் த்ும் கல்யாண சமையல் சாதம் இவர்.
அலுக்கவே அலுக்காத குரல். இறைவன் இவரை இன்னும் கொஞ்ச நாள் விட்டு வைத்து இருக்கலாம்.
இவருக்கு அடுத்தாற்போல் நம்மைக் கவருவது பானுமதி அம்மாவும் சாவித்திரியும் தான்.
ஒரு பாசமலர் தங்கை, ஒரு அன்னை, ஒரு மயங்குகிறாள் ஒரு மாது பாட்டு,
'சொன்ன பேச்சை கேக்கணும் முன்னும் பின்னும் பாக்கணும்"
பூவாகிக் காயாகி.//
வெங்கடாசல நிலையம் வைகுண்டபுர வாசம்//
இதே போல் மறக்க முடியாத வாய்த்துடுக்கு,சிவாஜி சாருக்கு இணையான நடிப்பு.
அவரது எழுத்துக்கள் , பன்முகத்திறமை

எல்லாமே இவரைப்போல் பெண்கள் இன்னும் நிறைய
திரை உலகுக்கு வரவில்லையே என்று தோன்றும்.
சாவித்திரி அம்மாவும் இதே போல்,
ஆனால் பாச மழை,காதல் ரசம் கண்ணாலெயே பேசுவது
அந்தக் காலத்தில் கண்களுக்கு யார் ஒப்பனை செய்தார்களோ தெரியாது.
உடல் வளம் எப்படி இருந்தாலும் முகம் நினைவில்
நிற்கும்படியாக மேக்கப் செய்து இருப்பார்கள். அவை அழியாத சித்திரங்கள் ஆகி நம் மனதை நிரப்பும்.
இதே போல் பத்மினியும், வைஜயந்தி மாலா,சரொஜாதேவி அம்மாவும் நடிப்பினாலும் திரை அழகினாலும் எங்களை மயக்கினவர்கள்.
Add caption
THoo  pyaar kaa  saagar hai. Balraj   Sahni.
Add caption

14 comments:

மா சிவகுமார் said...

மிஸ்ஸியம்மா படத்தில் சாவித்திரிதானே நடித்திருப்பார்கள்? என்ன ஒரு மிடுக்கு, என்ன ஒரு காதல். ஜெமினி கணேசனுடன் சேர்ந்து ஒரு புதிய உலகையே காட்டியிருப்பார் அந்தப் படத்தில்.

நல்ல புகைப்படத் தொகுப்புகளை வெளியிருகிறீர்கள். நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்.சிவகுமார்.
வாராயோ வெண்ணிலாவே பாடலின்போது அவர் திண்ணையைத் துடைத்து ஜெமினிக்குப் படுக்கை போடும் அழகே தனி. முக பாவம் அவர் போல் நான் பார்த்ததில்லை.

துளசி கோபால் said...

உடல் வாகு என்ன உடல் வாகு?
அப்பெல்லாம் கொஞ்சம் பூசுனமாதிரி இருந்தால் நல்லதுன்னு இருந்தோம்.
இப்பத்தான் ஒல்லிப்பிச்சானா இருக்கணுமுன்னு நிர்பந்தம்.
அதாலே எல்லாம் சீக்குக் கோழிகளா இருக்குதுங்க.

எத்தனைப் பொண்ணுங்க அநோரெக்ஸியா வந்து கஷ்டப்படுது பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

அட ஆமாம்பா.துளசி,
மனசு சுத்தம். உடம்பு அறிவு, சொன்ன பேச்சைக் கேக்கறவரை எப்படி இருந்தால் என்ன.

பாக்கறவங்க கண்ணிலே இருக்கு காதல்.
நான் சினிமாவைத்தான் சொல்லறேன்:-)

நானானி said...

துள்சி சொன்னா மாதிரி அக்காலத்தில் நாற்பது வயதுக்கு மேல் தான் காதலும் டூயட்டும் உண்டு போல என்பது போல் ஒரு மாயையை நம்முள் நிரப்பியிருந்தார்கள். ஒரு ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் வந்துதான் அம்மாயையிலிருந்து நம்மை வெளியே இழுத்து வந்தார்கள்.

சாவித்திரியின் அழகும் நடிப்பும் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு பாடல் நடுவிலும் அவர் காட்டும் உதட்டுச் சுழிப்பு ஒன்று போதுமே!!!
நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி,
உதட்டுச் சுழிப்பை நீங்க சொன்னதும்தான் நினைக்கிறேன்.
என்ன் ஒரு இன்னொஸென்ஸ் இல்ல/??
நன்றி ம்மா..

Geetha Sambasivam said...

அருமையான நினைவஞ்சலி. நான் ட்ரீம் மெர்ச்சன்ட்ஸ் புத்தகம் பற்றி ஏதோ விமரிசனம்னு நினைச்சுட்டு வந்தேன். :)

Geetha Sambasivam said...

அது என்ன மானு என்று பெயரில் பதில் கொடுக்கறீங்க? புதுசா இருக்கே!

Geetha Sambasivam said...

ஏற்கெனவே பார்த்துக் கருத்தும் சொல்லி இருக்கேன் போல! :)

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

மெளலி (மதுரையம்பதி) said...

Nalla ninaivanjali....btw, what is this new avathar - manu

வல்லிசிம்ஹன் said...

Mouli
thanks for dropping by. This is an old avathar before Naachiyaar blog.:)2005 nu ninaikkiREn.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா. வேலை மெனக்கிட்டு இங்கே பின்னூட்டமிட வந்ததற்கு ரொம்ப நன்றிமா.
பழசு. அதிலும் அரதப் பழசு.அதையும் படிக்க என் நண்பர்கள். அன்புக்கு மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, வரவுக்கு மிக நன்றி மா. முன்பே படித்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். வாழ்க வளமுடன் அம்மா.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...