Sunday, June 18, 2006

ஆனந்தம் (கோபத்திற்குப் பிறகு)



ஆனந்தம்,அனந்தம்.மஹாலக்ஷ்மியுடன் இருக்கும்போதுதான்.
தனியாக இருந்த ராமனுக்குத் தான் எத்தனை கோபம்.
நாங்கள் திருப்புல்லணை என்னும் திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதபெருமாள் கோவிலுக்குப் போனபோது தான் பார்த்தோம்.
வெறும் தரையில் புல்லால் ஆன இருக்கையில் ராமன் படுத்து இருக்கும் கோலம். கடலரசன் வருகைக்குப் ப்டுத்துத் தபம், செய்கிறான்.மூன்று நாட்களாகப்பசியோடு காத்து இருக்கிறான்.
அவன் நினவோ கடலுக்கு அந்தக் கரையில் காத்திருக்கும்,, ஜானகியிடம்.
தவிப்புடன் இருக்கும் தனது மனைவியிடம் என்று மட்டும் இல்லாமல்,"உங்கள் அரசாட்சியில் நானும் குடியிருப்பவள் இல்லையா. ராமா உனக்கு அதுகூட நினைவு இல்லையா".உன் ஆளுமைக்கு உட்பட்டவளிடம் நீ அலட்சியமாக இருக்கலாமா,?" என்று அனுமனிடம் சொல்லி அனுப்பினாளே, அவள் துயரம் தீர்க்க நான் உடனே போகவிட்டால் என்னை ஒரு கணவன் என்றோ, ஒரு அரசன் என்றொ, சொன்ன சொல் காப்பவன் என்றோ எப்படி நினைக்க முடியும் என்று பரிதவிக்கிறான்.
இயற்கையாகக் கோபத்திற்கு இடம் கொடுக்காதவன்.
அவன் கோபித்த கணங்களை எண்ணி விடலாம்.
தன்னை நம்பியவர்களை யாராவது துன்பப் படுத்தினால்,
உடனே காக்க வந்து விடுவான்.
சீதையைக் காகாசுரன் குத்திக் கிழிக்க முற்படும்போது,
அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்த ராகவன், சீற்றத்துடன் எழுந்திருக்கிறான்.
"படுத்திருந்த ஐந்து தலைக்கருநாகத்தை எழுப்பியவன் யார்' என்ற கேள்வியுடன்."/
சுற்றிப் பார்க்கிறான்.அப்போது அவன் பார்வையில் ஜயந்தன் என்ற, காக ரூபம் எடுத்தவன் (இந்திரன் மகன்) படுகிறான்.
ஆக்ரொஷத்துடன், சீதை மேலிருந்த இரத்தத்துளிகளைப் பார்த்த மறு வினாடி பறக்கிறது ஒரு புல்.ராமனின் அஸ்திரமாக. துரத்துகிறது.அவனும் எல்லா உலகத்திலேயும் அடைக்கலம் கேட்டு, தந்தையிடமும் அது கிடைக்காமல் ராமன்சீதையிடமே வந்து விழுகிறான்.
தன்னைத் துன்புறுத்தியவனிடமும் இரக்கமே
பிறக்கிறது தாய்க்கு. சீதை.
விழுந்த கிடந்த காகத்தின் தலையை இராமன் கால்கள் பக்கமாக திருப்பி விடுகிறாள். இராமன்
விடுத்த அஸ்திரம், வீணாகாமல் அந்த அசுரனின் ஒரு கண்ணை மத்திரம் வாங்கிக் கொள்கிறது. இப்படி அவளைப் போற்றிப் பாதுகாத்தவன்,
தன் சீதாவைக் காப்பாற்ற முடியாமல், கடலரசின் தாமதத்தை எப்படிப் பொறுப்பான்?
மூன்று நாட்கள் பொறுமை காக்கிறான். நான்காம் நாளும் அழைப்புக்கு வராத கடலரசனைக் குறித்து அஸ்திரம் பூட்ட,புல்லணையைவிட்டு எழுந்து, தயார் ஆகிறான்.
அவன் கம்பீரமாக நிற்கும் அழகுதான் எப்படி இருக்கிறது!
நிமிர்ந்த பார்வை, அதில் வைராக்கியம்,மூண்ட கோபம், தண்டிக்கத் தயார்நிலையில் கோதண்டம்.
கதறிக்கொண்டு சரணம் அடைகிறான், சமுத்திரராஜன்.
அவனுடன் கூட வந்த அவனது மனைவியரும் சரண் கேட்டு கை கூப்பி நிற்கின்றனர்.
தன்னிலைக்குத் திரும்பும், ராமனின் கோபம் தணிந்து
சேது அணையில் கவனம் திருப்புகிறான்.

"விபீஷணின் நட்பைக் கொண்டான்,
ராவணனை வென்றான்//
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்க செய்தான்.
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று
அயோத்தி நகர் மீண்டான்,
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் அரசுரிமை
கொண்டான்."//
இந்தக் கடைசி வரிகள் "லவகுசா" என்னும் படத்தில் லவனும் குசனும் ராமனின் எதிரே வால்மீகியின் நூலை அரங்கேற்றம் செய்யும்போது பாடும் பாடல்.
கேட்கும்போதே நம் மனம் உருகும்.
ஆனந்த ராமனாகச் சீதையோடு எழுந்தருளி இருக்கும்
தாசரதியை வணங்குவோம்.





5 comments:

துளசி கோபால் said...

படமும், ராமன் பெருமையும் அப்பப்பா..... சொல்ல வார்த்தையே இல்லைப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி.நன்றிப்பா. மானிடப் பிறவி என்றால் நினைக்கத் தோணுவது, ராமனைத்தான்.நம்மிடம் இல்லாதது எல்லாம் அவனிடம் இருப்பதனாலியானு தோணும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமனுக்கு பெருமையெ சீதையால்தான். இதை நான் சொல்லவில்லை தியாகராஜர் கூறுகிறார். "மா ஜானகி சடபெட்டக மகராஜுனி." எந்தாயார் ஜானகியின் கைபிடித்த பின்னால்தான் நீ மகராஜன் ஆனாய். அன்பன் தி ரா ச

தி. ரா. ச.(T.R.C.) said...

ராமனுக்கு பெருமையெ சீதையால்தான். இதை நான் சொல்லவில்லை தியாகராஜர் கூறுகிறார். "மா ஜானகி சடபெட்டக மகராஜுனி." எந்தாயார் ஜானகியின் கைபிடித்த பின்னால்தான் நீ மகராஜன் ஆனாய். அன்பன் தி ரா ச

வல்லிசிம்ஹன் said...

TRC,
வாருங்கள்.
ஆமாம் தியாகராஜர் சொல்கிறார்.
சுந்தரகாண்டத்தில், அனுமனும்
வியக்கிறான், இந்த அன்னையை விட்டுவிட்டு ராமன் எப்படி ஜீவித்து இருக்கிறான் என்று. இரண்டுபேரும் நமக்கு வேண்டும்:-)
ரவிவர்ம படத்தில் இந்த ராமனைப் பார்த்தேன்.எழுதத் தோன்றியது.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...