Wednesday, June 21, 2006

ராம லக்ஷ்மண ஜானகி ஜய் போலோ ஹனுமானு கி

Posted by Picasa "தசாபுக்திகளும் ராமாயண பாராயணமும்" என்ற புத்தகம் ஒன்று கிடைக்கிறது..அதில் சொல்லி இருக்கிற முறைப்படி நாம் ராமாயண காண்டங்களைப் படிக்க நமது குறைகளைப்போக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
எனக்கு இந்தப் புத்தகத்தில் பிடித்தது, எல்லா அத்தியாயங்களும் சிறியதாகப் படிக்கக் கூடியதாக இருந்ததுதான்.
ராமாயணத்தில் எல்லா விதமான பிரச்சினைளுக்கும் பதில் இருப்பதாக எனக்குத் தோன்றும்.
திருமணம் ஆகாதவர்கள் படிக்க சீதாராம விவாகம்.
குழந்தை பிறக்க ச்ரிராம் ஜனனம்.
பிரிந்தவர் ஒன்று சேர சுந்தர காண்டம்,
தேடும் பொருள் கிடைக்க, ச்ரிஹனுமான்,இலங்கையில் சீதை அம்மாவைத் தேடியது,
நியாயமான ஆசைகள் நிறைவேற ,ஹனுமன் தேவியைத் தரிசனம் செய்தது.
மனம் கலங்காமல் உறுதியோடு இருக்க,, அனுமன் பல அழகிகளை ராவணனின் பள்ளியறையில் பார்த்தபோதும் தன் ப்ரம்மச்சரிய உறுதி கலங்காமல் இருந்த ஆச்சர்யம்,
ஆபத்துக் காலங்களில் சீதை மனம் உடையாமல் ராம நாமத்தை ஜபித்தது போல்,அதை நிரூபிப்பது போல் த்ரிசடை சொப்பனம் காண்பது, அதனால் ஒரு திண்ணம் நம்பிக்கை கிடைப்பது,
இராவணனே தன் பட்ட மகிஷிகள் சூழ வந்து பயமுறுத்தி
ஆசை வார்த்தைகள் பேசினாலும் அஞ்சாமல், துணிவுக்கு அரசியாக ஒரு புல்லைக் கிழித்து தனக்கும் அவனுக்கும் இடையே போட்டு அதை பார்த்து, அற்பப்பதரே
என்று விளிக்கிறாள்.
எல்லாத் துன்பங்களுக்கும் முடிவு உண்டு என்று தெரிவிப்பதற்கு சீதையின் கைகளில் ச்ரிராம மோதிரம் வந்து சேர்கிறது.
அனுமனின் விடா முயற்சியைத் தெரிவிக்க, நமக்கு உணர வைக்க, விஸ்வரூபம் எடுத்தல்,விண்ணில் ஏகுதல்,
மைனாக மலையை ஒதுக்கி விட்டு
விரைதல்,சுரைசையின் எதிர்ப்பை சமாளித்து அவள் ஆசி பெறுதல்,
சிம்ஹிஹா என்னும் அரக்கியை வெல்ல ,அவள் இதயத்தையே கிழித்து வெளிவருதல்,
இறுதியாக லங்கை வந்ததும்
விஸ்வரூபம் ,சாமானிய சிறிய வானரம் ஆவது
என்று நம்பிக்கை ஒன்றே சாதனை புரிய வைக்கும் என்ற் உண்மையையும் பக்தி விலாசத்தையும்
காணக் கிடைக்கிறது ஒரே புத்தகத்தில்.
அனுமனே கதாநாயகன் இங்கே.
சுந்தர காண்டம் முழுவதும் அனுமனின் ஆற்றல் வெளிப்படுகிறது.
ஆனால் யாராலும் பேசப் படாமலேயே போய் விடுகிறது.
தான் சீதையைத் தேடிய கதை சொல்கிறான்.
பார்த்ததை சொல்கிறான்.
அவள் மாண்மையைப் பேசுகிறான்.
ஆனால் தான் ஒருவனாக அரக்கர்களைக் கொன்று குவித்ததையோ நூறு யோஜனை தூரத்தைத் தாண்டிய
வீரத்தையோ அவன் பேசவே இல்லை.
அதனால் தான் அவன் சுத்த சுந்தர (காண்ட)ஆஞசனேயன் ஆகிறானோ? ஆமாம், சொல்ல மறந்து விடடேனே.
திரேதாயுக ராமன் 86" உயரம்.
இந்த ராமனை சீதை இலக்குவனுடன் பார்க்கலாம்.
8' அடி உயரத்தில் எளிமையாக மரவுரியோடு காட்சி அளிக்கிறான்.,
திருவள்ளூர் பக்தவத்சலம்,செங்கமலத்தாயார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள ஏரிகாத்த ராமன் கோவிலில் இருக்கிறான்.மதுராந்தகம் போலவே இங்கெயும்
ஏரியைக் காத்ததினால் இந்தப் பெயர். மறக்காமல் தரிசனம் செய்யவும்.

9 comments:

துளசி கோபால் said...

நம்ம நேயடு ச்செல்லம் போல இருக்கார். என்ன பணிவு! அடடா....

வல்லிசிம்ஹன் said...

துளசிம்மா வாங்க.நீங்க அவரைக் கூப்பிடற பேரே செல்லமா தான் இருக்கு.

ஜயராமன் said...

ராமாயண பாராயண கிரமம் (முறை) உமா ஸம்ஹிதை முதலான பழைய நூல்களில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

முழு ராமாயணத்தில் பகுதிகளை தேர்வு செய்து ஒவ்வொரு விருப்பத்திற்கும் ஏற்றவாறு பாராயண பகுதிகளும், முறைகளும் பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு இல்லாமல், சுந்தரகாண்டம் மட்டுமே அடங்கி, அதில் உள்ள பகுதிகளையே ஒவ்வொரு விருப்பத்திற்கும் பாராயண வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.

இதில் வால்மீகி ராமாயணம் வடமொழியில், துளசி ராமாயணம் இந்தியில், கம்ப ராமாயணம் தமிழில் பாராயணங்கள் பழக்கத்தில் உள்ளன.

ராமாயணகாதை கேட்டதை வழங்கும் சிந்தாமணி என்று பெரியோர்களால் அனுபவ பூர்வமாக தெரிந்துகொள்ளப்பட்டது. இதில் இஹ சுகங்களை விரும்புவர்கள் பட்டாபிஷேக பகுதி வரையிலும், முக்தியை விரும்புவர்கள் உத்தர காண்ட பகுதியையும் பாராயணம் செய்யவேண்டும் என்பது விதி.

அனுமனின் ஒவ்வொரு செயலும் இன்றைய behavioural scientists ஆல் மிகவும் ஆராயப்பட்டு அது ஒரு management lesson ஆக இருப்பதை நிரூபித்து இருக்கிறது.

அனுமன் ஒவ்வொரு கட்டத்திலும் தான் எப்படி யோசிக்கிறான், எப்படி முடிவெடுக்கிறான் என்பதை வால்மீகி விளக்குகிறார். அதில் ஒரு காரியத்தை எவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற பிராக்டிகல் அட்வைஸ் அதிகம் தெரியும்.

அனுமனின் சாதுர்யமான பேச்சு ஒவ்வொரு கட்டத்திலும் ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

இராம, இலக்குவர்களை காட்டில் முதலில் சந்தித்து அவன் பேசுவதிலிருந்து அவன் கடைசியில் வந்தார் இராமர் என்று பரதனிடம் பராக் சொல்லும்வரை அனுமனின் வா வெண்மை இராமாயணத்தின் இன்றியகலாத பகுதி.

இந்த சிறந்த விஷயத்தை பதிவாக போட்டதற்கும், தங்கள் மேலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

நன்றி

வல்லிசிம்ஹன் said...

வணக்கம். ரொம்ப நன்றி ,நீங்கள் இந்தப் பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு.
முழுமையாக எழுத ஆசைதான்.ஆதியோடந்தம் எழுதும்போது அசதியினால் தவறு நேர வாய்ப்பு அதிகம். முடிந்ததை எழுதினேன்.தீராத ஆசைதான் ராமயணத்தின் சுந்தரகாண்டத்தில்... என் சிறியஅளவு காணிக்கை. , எங்கள் உறவினர் ஒருவரின் வால்மீகி சுந்தரகாண்டப் பதிப்பிலிருந்து சில வார்த்தைகளும் எழுத முடிந்தது ராகவனின் கருணையினால் தான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

சீதையின் முழு சோகத்தையும் பிரதிபலிக்கும் காண்டத்திற்கு சுந்தர காண்டம் என்று பெயர் ஏன் தெரியுமா சுந்தரபுருஷனான நவவ்யாகிரத பண்டிதானான ஹனுமானைப்பற்றியது,அதுமட்டும் அல்லாது சீதைக்கு நெடுநாளைக்கு பிறகு சந்தோஷத்தைக் கொடுத்த காண்டம்.தினமும் சுருக்கமான சுந்தரகாண்டத்தைப்படிக்கும்போது "கிருஹித்த்வா பேக்ஷமானாய'என்ற வரிகளை கண்ணீர்கண்களுடந்தான் படிப்பது வழக்கம் ஜயராமன் அவர்களே பாராட்டியபின் வேறு சான்றிதழ் எதற்கு. தொடர்ந்து எழுதுங்கள். அன்பன் தி ரா ச

வல்லிசிம்ஹன் said...

நன்றி தி.ரா.ச.
இதில் எனக்கென்ன பெருமை இருக்கிறது?அவர்கள் நடத்திய காவியத்தில்,எழுதின வால்மீகி,கம்பன் எழுதியதைப் படிக்க கண்கள் கொடுத்த்வன் அவந்தான்.எழுத்தறிவித்தது பெற்றோர்.வாழ்க்கையில் பல வேறு சந்தர்ப்பங்களைக் கொடுத்து நீ என்னைப் படி என்று ஆணை இட்டதும் அவன் கருணை.
அவர்களையே ஸ்மரித்தபடி அவர்களிடமே போய் சேர்ந்த எங்கள் பெற்றோர்,என்றும் துணைவரும் ராமநாமம் இந்தத் தமிழ்மணத்தைக் கண்டுகொண்டது எல்லாமெ என்னைப் பொறுத்தவரை உலக மகா அதிசயம்தான்.வெறும் நன்றி போதாது உங்கள் இருவருக்கும்.ஆசீர்வாதங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கட்டும்.

Geetha Sambasivam said...

ராமாயண சாகரத்திலே மூழ்கி முத்தெடுக்கும் மனுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா,வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
ராம(சீதா)நாமத்தின் மகிமை.

Rajkumar Pandian said...

அம்மா,
எனக்கு ஒரு சந்தேகம்.ஸ்ரீ ராமன் 8 அடிக்கு மேல் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.சீதா தேவி எவ்வளவு உயரம்?.ராமனை விட சீதை வயதில் மூத்தவர்களா?. தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

நன்றி,
ராஜ்குமார்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...