Saturday, June 03, 2006

குண்டாக இருப்பது தப்பா?

Posted by Picasaஇப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக,
எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.
ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை. எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!!
அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.
ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ, ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை.
அப்பா அம்மாவிடம் கலந்து பேசி,
ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார்.
சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான்.
பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.
எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன். "ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே.
உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார். ( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு)
அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்,புக்கைக் கண்டா கண்,
ஹிண்டு பேப்பரில கண்,
ஆனந்தவிகடன்லெ கண்ணு,
மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு
என்று பாடாத குறையாகச் சொன்னார்.
திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான்.
பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி.
எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது.
அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.
இவ்வளவு கதை இப்போது எதற்கு/ தெரியுமா?
இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் மாமி ஏன் நீ இளைக்கவே இல்லை?
வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா.
வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன். அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)
(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?)
எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.
பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன்.
48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம்
இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு. எல்லாம் காலம் செய்யும் கோலம். எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு.
பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?

நீங்களெல்லாம் எப்படி?






9 comments:

Machi said...

சில பேருக்கு உடல்வாகே அப்படிதான், அவங்க ஒன்னும் செய்யமுடியாது.
"ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்லை ஃபார்மசி" என்ற மருத்துவ கருத்துப்படி உடல் எடையை குறைத்துக்கொண்டோமானால் நலம்.
வயசாக ஆக உடல்பருமனால் தொல்லை அதிகமாகிடும், அதுக்கு பல காரணங்கள், முடிந்தவரை காலை, மாலை வேக நடை பயிலுங்கள் மிக நல்லது, சர்க்கரை நோயாளி பண்ணிக்கிட்டு தான் இருப்பீங்க இருந்தாலும் சும்மா சொல்லி வைத்தேன். :-)

//அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன்//
இந்தி & ஆங்கில படம் அதிகம் பார்ப்பீர்களோ?
அப்புறம் ஊசி மாதிரி இருந்தா தமிழ்நாட்டு சனங்களுக்கு பிடிக்காது. கொஞ்சம் பூசுனாப்ல இருக்கனும். :-))

வல்லிசிம்ஹன் said...

ஹெலோ குறும்பன், வாருங்கள். வந்ததுக்கு நன்றி. ஆமாம் ஆங்கிலப் புத்தகங்கள் நிறையப் படிக்கப் பிடிக்கும். அதோட பாதிப்பு தெரிகிறது என் பேச்சிலும் எழுத்திலும்.
பூசினாப்பிலெ இருந்தால் நல்லதுதான். இப்பொ நான் இரண்டு மூணு தரம் பூசின மாதிரி இருக்கேன்:-)) நடையும் உண்டு. பசியும் அதை விட அதிகம். பார்க்கலாம் யார் விட்டா.நானாச்சு என்னோட ஃபாட் ஆச்சு. கைகலப்பு தான்.மறுபடியும் தான்க்ஸ்.

சந்தர் said...

சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய அத்திம்பேர்: என்னிடம் “சந்துரு உடம்பைக் கொஞ்சம் கவனி. இளைக்கப்பார் என்றதுக்கு, நான், “குண்டாக இருப்பதால் நான் என்ன ஆரோக்கியகுறைவாக இருக்கிறேன். ஒல்லியாக இருப்பதால் நீங்க என்ன ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?”(அவருக்கு sugar, BP, cholesterol இத்யாதிகள்) என்று கேட்டது ஞாபகம் வருகிறது. என்னைப் பொருத்ததவரையில் குண்டாக இருக்கிறீர்களோ ஒல்லியாக இருக்கிறீர்களோ - ஆரோக்கியமாக இருந்தால் சரி!

பி.கு. என் அத்திம்பேர் குண்டு ஒல்லி என்று என்னிடம் பேசியது அதுவே கடைசி!

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா,.இதுவல்லவோ பதில்.இந்த ஒல்லியா இருக்கிறவர்களுக்கு குண்டாக இருப்பவர்களைப் பார்க்கும்போது ஏதோ ஆகிவிடுகிறது. நமக்குத்தான் நல்ல மனசு ஆச்சே. அதனாலே விட்டு விடலாம்.பூனைக்கு ஒரு காலம் வந்தால் யானைக்கு ஒரு காலம் வராதா?:-))

துளசி கோபால் said...

கணக்குச் சரியா வருதான்னு தெரியலையே மானு.

48- 40- 74 வச்சுப் பார்த்தா,

37.5 - 32- 72 சரியா?

பூனைக்கு ஒரு காலம் வந்துருச்சு. இன்னும் 'யானை'க்குத்தான் வரலை:-)))

குண்டோ ஒல்லியோ மனசு சந்தோஷமா இருந்தாச் சரி. ஒல்லியா இருந்துக்கிட்டு, ஒண்ணும் திங்காம,
'கண்ணுலே பசி'யோடு இருக்கற நிறையப்பேரைப் பார்த்து மனசு சமாதானப் பட்டுருது:-))))

கொஞ்சமாத் தின்னாலும், மனசுலே களங்கம் இல்லாதபடியாலே உடம்புலே ஒட்டுது,
மத்ததெல்லாம் ஒரே வினை.

வல்லிசிம்ஹன் said...

அடி சக்கை. என்னா கணக்கு. !!!!
திருமண நாளுக்கு 1 நாள் தான் பாக்கி. பொண்ணு இன்னும் ரெடியாகலியா? பார்லர் போணும். மெஹந்தி வைக்கணும்.திருமண நாள் வாழ்த்துக்கள் துளசி.
ரொம்பவே சரிதான்.வயசும் கம்மி. எடையும் கம்மி.
கல்யாணம்+32===72
கல்யாணம்+40---76கிலொ
நீங்க எடை குறைவாக இருக்கிறிர்கள்.மலை நாட்டில் இருப்பதால் இத்தோடு போச்சு.:-)))) கண்ணில் பசி. கை கொடுங்க துளசி. நான் சாப்பிடாவிட்டாக் கூட வெயிட் ஏறுதும்மா. பாட்டி என்று என்னை தாராளமாகக் கூப்பிடலாம்.மதர் நேச்சர். வாகு அப்படி.

Maayaa said...

Hi
indha kavalai ennakum undu..minna ellam naan " naan enna kundaa irundha enna ". endru nenaipen..

ippo ellam en attitude maari iruku..aanaa poosinaapila irukomnnu nenaippadhu and illaikanum apdingradhum oru concernaa irukalaam - aana adhuve oru paina manasula iruka koodadhunnu oru thelivu irukku..

irundhaalum unga posta pathavudane oru nalla aarudhal dhaan!!! And healthyaa irundhaa podhumnnu nalla padradhu..

Maayaa said...

Hi
indha kavalai ennakum undu..minna ellam naan " naan enna kundaa irundha enna ". endru nenaipen..

ippo ellam en attitude maari iruku..aanaa poosinaapila irukomnnu nenaippadhu and illaikanum apdingradhum oru concernaa irukalaam - aana adhuve oru paina manasula iruka koodadhunnu oru thelivu irukku..

irundhaalum unga posta pathavudane oru nalla aarudhal dhaan!!! And healthyaa irundhaa podhumnnu nalla padradhu..

வல்லிசிம்ஹன் said...

dear Priya, thank you for your comments. it is true, a fact I am over my allowed weight. I know that. I am trying to lessen my intake and increase my exercise routine. I want that to remain my own problem. it hurts when my own sontha bantham(enappaduvarkaL) keliyaa ka
pesumbothuthaan kobam varukirathu.neenga chinnavanga thaane . you will settle down fast.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...