மலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம்? உண்டு. அசைக்க முடியாத குணம், . ,
கனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம், அது என்ன அம்மாவையும் கூட இழுக்கணும் என்று பெண்கள் யோசிக்கலாம். எப்படி இது உண்மையாகும்?உண்டும்மா உண்டு. கருத்து என்னவோ ஆதாரமாக இருந்த என் மாமியாரைப் பற்றீத்தான்.
நல்ல படிப்பாளி. அழகு, அடக்கம் என்று நிறைவான மனுஷி .
திருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு என்னை வரவேற்று அழைத்த அந்த நிமிடத்திலிருந்து
தன் சிகித்சைக்காக ஆம்புலன்சில் மாற்றப்பட்ட அந்த நிமிடம் வரை எங்களுக்கு நிழல் கொடுத்தவர் எங்கள் கமலம்மா தான்.
மாண்பு மிகுந்த மாமியார்கள் எனக்கு மிகப் பழக்கம். ...எனக்கு இரண்டு மாமியார்கள்.
அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.
ஒஹோ. பாலச்சந்தர் படம் போல் தோன்றுகிறதோ?
அதுவும் இல்லை. இவர்கள் இருவருடனும்தான் என் இல்வாழ்க்கை (கணவரும் கூட) ஒரு மங்களகரமான நாளில் ஆரம்பித்தது.
ஏன் கணவர் கூட என்று தானேசொல்ல வேண்டும்/ அவர்தானே முதலில்? அதுதான் எல்லோருக்கும் தெரியுமே.
திருமணமான புதிதில் எங்களுக்கு (அந்த காலத்தில்)
கணவர் எல்லாம் ஜுஜஜூபி. ஏனென்றால் அவர்கள் பக்கம் நாம் போவது காப்பி வேணுமா?
சாப்பிடக் கூப்பிடறங்க.
சொல்லத்தான்.
நான் சொல்வது கற்காலம் இல்லை. ஒரு 40 வருடங்கள் முன்னால்.
அவர்கள் மலை மாதிரி திடமாக இருந்து எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். ஒரு மொஃfஅசில் பெண்ணுக்கு என்ன தெரியுமொ அதைவிட ரொம்ப குறைவான அறிவுள்ள ஜீவன் நான்.
திருமணத்தன்னிக்கே " ஓ, இந்தப் பொண்ணு இவ்வளவு சிரிச்சுப் பேசறதே "என்று சொன்ன விருந்தினர் நடுவில் எனக்கு ஆதரவாகப் பக்கத்தில் நின்று கொண்டு எனக்கு பலம் கொடுதது என் அம்மாமியார் தான்.
எனக்கு அவரை அம்மா என்று கூப்பிடுவதில் தயக்கம் துளியும் வரவில்லை.
நீ எப்போ வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் போகலாம். ஒரே ஒரு வார்த்தை பாட்டி(அவங்களொட மாமியார்) கிட்டே சொல்லிட்டு போ.//
//அது அவர்களுக்குப் பழக்கமாகிப் போன வார்த்தை. அவ்வளவு மரியாதையும் தானும் அந்தப் பாட்டியிடம் வைத்து இருந்ததால் எனக்கும் வேறு நினைப்பு வரவில்லை..
எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)
பக்கத்தில் வந்து இப்படி பண்ண வேண்டாம்பா. நான் பார்த்துக்கிறென், என்று காப்பாத்துவார். ஏன் அந்த வார்த்தை?
அவருக்கும் மருமகளாக வந்த போது இருந்த சூழ்நிலை நினைவு வந்ததோ?
திருமதி எம்.எல்.வி பாடிய பாடலோடு 60 களில் ஒரு படம் வந்தது. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்ற படம்.
அதைப் பார்த்து மனம் திருந்தியவர்கள் எத்தனையோ பேர்கள்.
அதாவது இந்த மாதிரியும் நாம் இருக்கலாமே என்று நினைத்தவர்கள் இருந்தார்கள்
எங்க அம்மா ,
எங்கள் வீட்டில் எதுவுமே (personal management) பயிற்சி எடுக்காமல் தன் நல்ல குணத்தினாலேயெ எல்லோரையும் அரவணைத்து சென்றவர் எங்கள் கமலம்மா.
எந்த வித டென்ஷனாக இருந்தாலும் முகத்தில் காண்பிக்காமல் தீர்வு கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை.
ஒரு பெரிய குடும்பத்தின் ஊடல்கள் கூடல்கள் எல்லாவற்றையும் சமாளிப்பதைப் பார்த்து நான் அதிசயப்படுவேன்.
இவ்வளவையும் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டிய அவசியம்?
நானும் ஒரு மாமியாராக ப்ரொமோட் ஆகிவிட்டதால்.
குற்றம் காணாமல் குணம் மட்டும் கண்டு சிரிப்போடு வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்த என் அம்மாமியாரை இன்றும் என்றும் வணங்குகிறென் .
அவர் அவ்வளவு இல்லாவிட்டாலும் பத்து சதவிகிதம் இருந்தால் கூட போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
Rangamama-3
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...
-
முதுமை எப்போதுமெ இனிமை. ஜூலை 29 குழந்தைகளுக்கு , சீக்கிரமே பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும். வேலைப் பளு தாங்க மு...
-
எங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...
-
தேன்கூடு-போட்டி/மரணம்--5/7/2006 அவன் அதுவரை மரணத்தைப் பற்றி பயப்படாதவன். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போகும் என்ற வாக்குவாதம் வேறு. அவன் ...
8 comments:
///நானும் ஒரு மாமியாராக ப்ரொமோட் ஆகிவிட்டதால்.
குற்றம் காணாமல் குணம் மட்டும் கண்டு சிரிப்போடு வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்த என் அம்மாமியாரை இன்றும் என்றும் வணங்குகிறென்///
பொதுவாக எனக்குத்தெரிந்து எந்த நல்ல மாமியாரும் தங்கள் மருமகளிடம் குற்றம் காண்பதில்லை. அவர்களுடைய அடவைஸ் இவர்களுக்கு குற்றமாகப் படுகிறது அவ்வளவே.
உங்களுடைய புரமோஷனுக்கும் வாழ்த்துக்கள். மென்மேலும் புரமொஷன் பெறவேண்டுகிறேன்.
மானு,
'வெற்றி மீது வெற்றி' வந்து உங்களைச் சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்
கமலம்மாவைச் சேரும்.
தமிழ்மணத்துலே முகப்புலெ வந்துட்டது இந்தப் பதிவு.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே.
நான் ஒரு அரை மாமியார் ஆகப்போறேன்:-))))
ஊஹூம், இத படிச்சிப் பாருங்க.
http://www.appusami.com/HTML/htmlv110/main/kamala_comments.asp
நன்றி சந்தர்.னீங்க சொல்லுவது மிகச் சரி. ஆனால் என்ன இருந்தாலும் நான் மாமியார் ஆனதினாலே குற்றம் நிஜமாகவே இருந்தாலும், நாம் சொல்லும்போது எடுபட சான்ஸ் இல்லை.அதனாலே stratigical retreat.:=)
அன்புள்ள அரை மாமியாருக்கு, நன்றி.சிரிப்பும் கலகலப்பும் மாமியார் வடிவத்தில் வருவதை அறிந்த மாப்பிள்ளை வர வாழ்த்துக்கள். துளசி.
உஷா படித்தேன்.
அவரை மாதிரி என்னால் எழுத முடியுமா?என்ன இருந்தாலும் அவர்கள் வீட்டு மாமியைக் கேக்கலாமா?:-)
மிகவும் கொடுத்த வைத்த மருமகள் நீங்கள், உங்கள் மருமகள்களும் தான்.
வாங்க அமித்து அம்மா.
ரொம்ப நன்றி இந்த நல்ல வார்த்தைகளுக்கு.
இந்த மனம் இருக்கிறது பாருங்கள் அதை அப்ப அப்பத் த்ஹட்டிக் கொடுக்கணும். உன்னை மாதிரி உண்டான்னு.அப்புறம் தானே சமர்த்தாயிடும்:)
Post a Comment