Wednesday, June 07, 2006

சந்தோஷம் இது சந்தோஷம்!!

' சந்தோஷம் இது சந்தோஷம், இந்தப் பொன்வீணை தரும் உல்லாசம்"இதே மாதிரி எத்தனையோ பாடல்கள். மனதின் நில்லாத குணத்தை ஒரு நல்ல உற்சாகமான
நிலைப்புக்கு கொண்டு வருகின்றன.ஒரு நிலைக்கு அழைக்கின்றன.
அதே போல் தான் வேறு வகையான இசையும்.அந்த இசை எந்த மொழியில் இருந்தாலும் ஒரு உலக இணைப்பாக செயல் படுவதைத்தான் நான்உணர்கிறேன்.
அதனால் தான் இளைய தலைமுறை வெஸ்டர்ன் ஜாஸ் கேட்கும்போதும், எங்கள் தலைமுறை ஹிந்தி திரைப்பாடல்களைக் கேட்டபோதும்,எனக்கு முந்திய தலைமுறை அரியக்குடி திரு ராமனுஜ ஐயங்காரின் குரல்வளத்தை அனுபவித்தபோதும்
எங்களால் சேர்ந்து ரசிக்க முடிந்ததது. .முடிகிறது.அந்த வகையில் எம்.எஸ் அம்மாவின் இசை எங்கள் எல்லோரையும் ஒரே தளத்தில் நிறுத்தியதுதான் அதிசயம்.இதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான்.
ஒரு தெய்வத்தின் குரலுக்குக் கட்டுப்படாமல் கூட இருக்க முடியுமா.?எத்தனை நாட்கள் காற்றினிலே வந்த கீதத்தைக் கேட்டுத் தூங்கி இருப்போம்!!எத்தனை வருடங்கள் திருவேங்கடத்தானைத் துயில் எழுப்பும் போதெ நம் மனத்தையும் தட்டி எழுப்பி இருக்கிறார்கள்! எத்தனையோ சிரம காலங்களில்
அந்த ஸஹஸ்ரநாமம் தானெ எங்களைக்கரையை நோக்கி அணைத்துக் கொண்டு வந்தது.ஆமாம், சுப்ரபாதத்துக்கும், ஸ்ரி அன்னமய்யா பாடல்களும், ஸஹஸ்ரநாமமும், தானாகவே தன்வசத்திலேயே நம்மை அரவணைக்கும் தன்மை கொண்டவை தான்.
ஆனால் இன்று வரை,எப்போதுமே எம்.எஸ்.அம்மா இசைத்த வண்ணம்தான் அவை நம் மனத்தில்குடியேறுகின்றன.தெலுங்கு மொழி என்ன என்று தெரியாது. ஆனால் அம்மா குரலில் பெருமாளிடமே முறையிட முடிகிறது. தாலாட்ட முடிகிறது. அன்னையின் அருள்
திருமஞ்சனம் காண முடிகிறது. மஹா பெரியவாள் கருணையை உணர முடிகிறது. காமாட்சியைக் காஞ்சிபுரம் போகாமலேயெ
வீட்டிலிருந்து என்னம்மா, என் அம்மா என்று கேட்கலாம்.என் அம்மா மாமியார் கமலம்மாவுக்கு கடைசி 4 வருடங்கள் புறக்கண் தெரியாமல் போன போது,கைப்பிடித்து நடத்தினது எம்.எஸ் அம்மாவின் குரல் தான்.ஏற்கனவே சுபாவத்தில் மிக உறுதி படைத்தவர் தான் என் கணவரின் அம்மா. இருந்தாலும்மனம் உடையாமல் பார்த்துக் கொண்டது இசைதான். ஜேசுதாஸ் சாரின் குருவாயூரப்பன் பாடல்களும், திரு பாலமுரளி கிருஷ்ணாவின் பத்ராசல ராமர்பாடல்களில் நிறைந்த பக்தி ரசமும்தான்.
இதைத்தான் எந்தரொ மஹானுபாவலு என்று இசைத்தார்களோ?அவர்களுக்கு வந்தனம்.மீண்டும் வந்தனம்

4 comments:

துளசி கோபால் said...

ஹய்யோ.... எம்.எஸ். அம்மாவின் குரலுக்கு மயங்காதவர்கள் உண்டோ?

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எத்தனையோ பேர்களோட சி.டி. வந்தாலும் எல்லாத்துக்கும்
மேலே அத்தாரிட்டி எம்.எஸ். அம்மாதுதான்.

அவங்களை ஒரு தரமாவது நேரில் பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு வாய்க்கலை.

துளசி கோபால் said...

ஹய்யோ.... எம்.எஸ். அம்மாவின் குரலுக்கு மயங்காதவர்கள் உண்டோ?

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எத்தனையோ பேர்களோட சி.டி. வந்தாலும் எல்லாத்துக்கும்
மேலே அத்தாரிட்டி எம்.எஸ். அம்மாதுதான்.

அவங்களை ஒரு தரமாவது நேரில் பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு வாய்க்கலை.

manu said...

அன்பு துளசி, சும்மாவா கொடுத்து இருக்காங்க பட்டம். பின்னூட்ட அரசீனு? நன்றி. நமக்கு பார்த்தீங்களா
எத்தனை அம்மாக்கள்!
எம்.எஸ் அம்மா மாதிரி யாரு.?

Priya said...

chance illa.. avanga..
avangala pathi ezhuthina unga postum chance illa..
arumai !!

கி.இராஜநாராயணன் அய்யா--1

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...