Thursday, May 18, 2006

ஒரு அம்மா பாட்டியாகும் கதை

அந்த நாளும் வந்தது. எங்கள் பேரன் எங்கள் கைக்கு வந்து சேரப்போகும் நாள்.
வேப்பிலை இல்லியே, பேசாமல் நம்ம அம்மாவை அழைத்து வந்து இருக்கலாமோ/எனக்கு இந்த மாதிரி பிரசவம் நெருங்க்கும் நேரம் என் அம்மா,அப்பா எப்படி நடந்துகொண்டார்கள்? பயந்தார்களா?


எல்லா நேரத்திலேயும் அவர்கள் அமைதியாக இருந்த மாதிரி தான் எனக்கு நினைவு.
இங்கே மருமகனும், பெண்ணும் அதெ அமைதியோடு செயல் பட்டார்கள்அவர்களூக்கு மருத்துவர்கள் சொல்லித் தந்த முறைப்படிநிதானமாக, வேண்டும் பொருட்களையெல்லாம் ஒரு பெட்டியில் அடுக்கி வைத்தார்கள்.

 நான் மூணாம் பேஸ்து(இதுவும் ஒரு வார்த்தை குமரனைத்தான் கேட்க வேண்டும்.)அடித்த மாதிரி எப்போதும் வாயில் ஆபத்துக் காலஙளில் (எனக்கு ஆபத்து என்று தோன்றும்) முணுமுணுக்கும் ஆபதாம் அபகர்த்தாரம், கந்தசஷ்டி கவசம்,எதுவும் நினைவுக்கு வராமல் அவர்களையெ வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தேன். மருமகனுக்குத் தோன்றி இருக்க வேண்டும், ஒருவேளை 10 நாட்கள் முன்னால்வந்த மாதிரி பி.பி. எகிறிவிட்டதோ?


படபடப்போ? அம்மா, பொண்ணு இரண்டு பேருக்கும் வைத்யம், காவல் இருக்க வேண்டுமோ என்று நினைத்தாரோஎன்னவோ,என்னிடம் வந்து மெல்ல"அம்மா  இது ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஹாஸ்பிடல்,டாக்டர்எல்லோரும் ரெடியாக இருப்பார்கள். கவலையெ இல்லை, நீங்கள் வேணுமானால்,கெடொரேட் (ரஸ்னா மாதிரி) சாப்பிடலாமெ/ தெம்பாக இருக்கும் என்று சமாதானப் படுத்துவதாக எண்ணிஆரம்பித்தார்.அதற்குள் பெண்ணிற்கு அவசரம் ஆகவே காரில் போய்க்கொண்டே பேசலாமெ, அம்மா வரியா, என்று கேட்க
எப்போதும் சொல்வது போல் நீங்க போய்விட்டு குழந்தை பிறந்ததும் எனக்கு சொல்லவும்என்று பதில் கொடுக்க ஆசை தான்.என்ன செய்வது, அன்னையருக்கு என்று கடமை இருக்கிறதே,

அதனால் வரவழைத்துக்கொண்ட அசட்டு தைரியத்துடன் முருகனைப் பார்த்து கும்பிடு போட்டு விட்டுமருத்துவ மனையை நோக்கி பயணித்தோம்.
எப்போதும் கேட்கும் 'பால் வடியும் முகம்"திரு மஹாராஜபுரம் சந்தானத்தின் பாடல் கொஞ்சம் தெம்பு கொடுத்தது. எண்ணீ 20 நிமிடப் பயணத்தில் செயிந்ட் மெரி மருத்துவ மனையும் வந்துவிட்டது. இந்தக் குழந்தைகளுக்கெல்லாம் எப்படித்தான் இரவு நேரம்தெரியுமோ. எல்லா அம்மாக்களுக்கும் வலி என்பது அப்போதுதான் ஆரம்பிக்கும்,அதே போல் மருத்துவமனை
செவிலிகளுக்கும் அது பழக்கமாகி விட்டது.

அப்படியெ தாயாகப் போகும் அவஸ்தையில் இருக்கும் பெண்ணையும்அவளுடன் வந்த எங்களையும் நிலைப்படுத்தி சிகித்சையை ஆரம்பித்தார்கள்.
நாங்கள் ஏற்கனவே பதிவு செய்த அறைக்குப் போனோம்.

முதலில் டாக்டர் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னது யாரைத் தெரியுமா? என்னைத்தான்.
பத்து மணி நேரம்  கழித்து,  பத்து பவுண்ட் எடையில் காலை 10.10க்குப் பிறந்தான்  

 அது முதல் என் தூக்கம் என்னைத் தொந்தரவு செய்யாதது எல்லாமெ தனிக்கதை. அவன் முகம் என் எல்லா சோர்வையும் விரட்டி விட்டது.

புது சுறு சுறுப்பு,சக்தி எல்லாம்வந்து நான் முழுமையாக இயங்க ஆரம்பித்தது அப்புறம்தான். பாட்டி இல்லயா? இப்போதும் எங்களுக்கு அரு மருந்து குழந்தைகள்தான்.
அது எப்படி ஒரு உலகையே வெற்றி கொள்ளும்,
பள்ளி, ,கல்லூரி சீட் வாங்கும் அம்மா,
ஒரு தைரிய புலி,சிங்கம்
தன் மகளின் வலிக்கு முன்னால் பூனையாகி விடுவது ஏன்?

13 comments:

துளசி கோபால் said...

அதுதான் தாய் உள்ளம்.

உண்மையாவே இந்தப் பதிவு சூப்பர்.
அருமையா வந்துருக்கு.

வாழ்த்து(க்)கள்.

நல்லா இருங்க.

jeevagv said...

ரொம்ப நல்லா இருந்தது, தொடர்ந்து எழுதுங்க!

வல்லிசிம்ஹன் said...

மிகவும் நன்றி துளசி. ஜீவா. மீண்டும் என் பேரன் பிறக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது உங்கள் பின்னூட்டம் பார்க்கும் போது. வணக்கம் நண்பர்களே. இதை விட யார் உத்சாகப் படுத்த முடியும்?இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.மனு,வல்லி

Blogeswari said...

Very well written

வல்லிசிம்ஹன் said...

Thank you blogeswari.manu

சிங். செயகுமார். said...

அதான் டீச்சர் சொல்லிட்டாங்கள்ள வெறென்ன சொல்ல:)

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் சிங்.செயக்குமார்.ஆமாம் ,துளசி டீச்சர் தான் பிள்ளயார் சுழி.நீங்க எழுதும் முறை எனக்கும் படியக் கொஞ்ச நாளாகும். அது வரை என் தமிழ் எழுத்தில் பிழை வரும்போது பொறுத்துக் கொள்ளவேண்டும். நன்றி.செயக்குமார்.

பரஞ்சோதி said...

வாழ்த்துகள் அம்மா.

மகிழ்ச்சியான செய்தி சொல்லியிருக்கீங்க. பாட்டி ஆனதால் இனிமேல் உங்க பேரக்குழந்தையை கொஞ்சவே நேரம் சரியாக இருக்கும்.

என் மகள் பிறந்த போது என்னை விட என் தாயார் தான் அதிக மகிழ்ச்சி அடைந்தார். முதல் ஆறு மாதங்கள் எங்க கூடவே இருந்து இரவும் பகலும் என் மகளை பூப் போல பார்த்து கொண்டார்.

Geetha Sambasivam said...

.மனு, இரண்டு ப்ளாக் வச்சுச் சமாளிக்கிறதே கஷ்டம், இதிலே பேரனும் வந்தாச்சு. ரொம்ப பிசினு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

மனு, கணினி தகராறு. வேறே ஒருத்தருக்குக் கொடுத்த பின்னூட்டம் உங்களுக்கு வந்திருக்குனு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பரஞ்ஜோதி,
எங்கள் பேரன் பிறந்து 7 வருடங்கள் ஓடி விட்டன. மற்ற பேத்திகளுக்காகக் காத்திருக்கிறேன்.
வந்ததும் முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டும். நன்றி.நானும் அங்கெ அவர்களொட இருந்து விட்டுத்தான் வந்தேன்.அருமையான காலம் அது.

வல்லிசிம்ஹன் said...

கீதா. நன்றி. பேரன் பிறந்த போது நடந்ததைத் தான் எழுதினேன்.7வருடக் கதை.

வல்லிசிம்ஹன் said...

திரு பாஸ்டன் பாலா அவர்களுக்கு நன்றி.தேன்கூடு.காம் பதிவில் பொருனைகரையிலே அம்மா பாட்டியாகும் கதைக்கு ,சிபாரிசு செய்து இருக்கிறார். தனி பதிவு தான் போட வேண்டும்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...