Wednesday, October 01, 2014

1970 லிருந்து 83 வரை 6-27-2006







காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ் எல்லொரும் மகிழ்விக்க வந்தது ஆஸ்டரிக்ஸ் காலத்தில் தான். நான் இவர்களை நினைவு படுத்திக்கொள்வது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான்.
நன்றி மறக்கக் கூடாது.
1977,78 காலங்களில் மழைக்காலம் என்றால் மழை பெய்யும்!!!!1
அப்பொது செப்டம்பர் விடுமுறையும் சேர்ந்து கொள்ளும்.
பசங்க விளையாட வெளியே போக முடியாது. அது போல் ஒரு நச நசா மழை. எத்தனை நேரம் காரம்பொர்ட் விளையாட? எத்தனை நேரம் வேகவச்ச கடலையைக் கொறிக்க.?

சக்தியை செலவழிக்க ஒரு வழி வேணுமே.
அப்போது மவுண்ட் ரோடு தான் அடைக்கலம்.
கொஞ்ச நேரம் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)
அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெடுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின் டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெசல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு  ஆங்கிலம்  கற்றுத் தேர்ந்த சின்னப் பாட்டியிடம் சொல்ல வேண்டும்.
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் மிஸ்டீரியசாகக் காணமல் போகும்.
டுயூ டேட் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பிறகு, நான்  தானெ
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நாந்தான் லைபிரரி உமன். பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரி ஓனர்.
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்? புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டது.
அதுவும் இந்த மாதிரி புத்தகங்கள்,
லியான் யுரிஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹைலி,
இயன் fஃலெமிங்,
மேலும் சிலருடைய புத்தகங்களை கிலொ கண்க்ில் கொடுக்க வேண்டி வந்தது. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதனப்படுத்திக் கொண்டோம்.

2 comments:

ரிஷபன் said...

இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்//

என்ன சமர்த்தாய் நம் கூடவே இருக்கும்.. எந்தப் பக்கம் பிரிச்சாலும் அழாது.. அது மட்டுமல்ல.. வாசிக்கும்போதே அந்த உல்லாசத்தை எல்லாத் தடவையிலும் கொடுத்து விடும்..

ஐ லவ் யூ புக்ஸ் !

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.ரிஷபன் ஜி. நீங்கள் இந்தப் பதிவுக்கு வந்தீர்களா. நன்றி. உண்மைதான். அழாத புத்தகங்கள் காமிக்ஸ் புத்தகங்கள். மனசில் பாரம் ஏற்றும் கதைகளும் உண்டு.சிவகாமியைப் போல. எழுதுபவரைப் பொறுத்து அவரது புத்தகங்கள்னு கொள்ள் வேண்டியதுதான்.மிக நன்றி ரிஷபன் ஜி.சிரிக்கும் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளலாம்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...