Saturday, September 27, 2014

,முதுமை எப்போது ஆரம்பமா.ஆரம்பித்துவிட்டது.

முதுமை எப்போதுமெ இனிமை.  ஜூலை 29


குழந்தைகளுக்கு , சீக்கிரமே  பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும்.

வேலைப் பளு தாங்க முடியாமல் பொருமும் 40 வயது அம்மாக்களும், அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில் நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும் இன்னும் பிற சிலருக்கும் முதுமை ஒரு வரம்.

தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தங்கள் அம்மா அப்பா எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும்.


அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும்

. மனைவிகள் சிந்தனை,
மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு, தாயார்கள் சொன்ன வார்த்தைகள் , மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?) நம்மைக் கண்டுகொண்டவர்கள், தோழமை பேசினவர்கள், சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள் இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் நினைவுக்கு வரும்.


கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம்,
மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை ,
புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள், மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்.


குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகளும் வரும் என்று நினைக்கிறேன்.

இது :-)) நமக்குத் தெரியாத டாபிக்."-))

இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை.
பெண்ணுக்குப் பையன் தேடும் போதும், பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும். என்ன தெரியுமா?



நாம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ நிலைமை மாறி, பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும், இல்லை பையனோட அம்மா, அப்பாவாகத் தெரியும்போதும், "அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்." வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன். நம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.

இல்லாவிட்டால்(நம்) பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்) சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ ஃfஃஒகஸ் பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி,

பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும். 'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.'

"ஏன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் ,எல்லோரும்". சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது,
இது மட்டும் இல்லை
,
நம்ம பையனுக்காகப் (பெண் பார்க்கப்) போகும்போதும்,
நிறைய சோதனைகள் வரும்.

அப்போது புரியும் ஒன்று, நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு.... அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம்.

கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு நாம் மனித வேடம் போட்ட பூதம். 'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.' இது இருக்கு பாரு, ....(என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்") .


நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும் ,அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி அதுபோல்,

உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது.
பிராண்டட்..!....------- மாமியார்.
அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை.
சரி இப்போ பழைய கேள்விக்குப் போவோம். நீங்கள் எல்லாம் மாடர்னா? என்று கேட்ட அம்மாவின் தொனி எனக்குப் புரியவில்லை. என் குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது. அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. அது அந்த அம்மாவுக்குத் தெரியாதே.


இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் ,
சார் எப்பவுமே பாண்ட் தானோ. என்னதான் இருந்தாளும் நம்ம வேஷடி அங்கவஸ்திரம் மாதிரி ஒரு டிக்னிடி இந்த மாடர்ன் டிரெஸ்ல வரலை சார்.
இந்த மாதிரிக்கேள்விகள் , வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும், எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%) அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.


ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)


55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.
கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு,
சபாவில் மெம்பராகித்,


தவறாமல் டை (தலை) போட்டுக் கொண்டு ,
சிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா ,பிட்ஸ்பர்க்,கோவில்,மாப்பிள்ளை (இல்லாட்ட) பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹப்பிரவேசம் செய்தது,
என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள். வரணும். !!!!!!இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/

'அய்யோ பாவம் நமம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா, அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது இந்தச்சத்தம் கேட்ட நினைவில்லை) என்று விழுந்து விடுகிறாராம். ம்ம் இந்தப் பொண்ணு தான் எல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.

'இது சொந்தக் கதை இல்லை.'
இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா?
அப்படியே சொல்கிறேன். இது கற்பனை.
அப்படி இப்படி போயி,, எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?

41 comments:

Geetha Sambasivam said...

கடோத்கஜன் என்ன ஆனான்? பாயும் புலி வந்துட்டதே? என்ன? என்னை நினைவு வச்சிருக்கீங்களா?

Geetha Sambasivam said...

இது ஏற்கெனவே படிச்ச மாதிரி இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் கீதா. ஊர் எல்லாம் போய் வந்தாச்சா?
கடோத்கஜன் லீவில போயிருக்கார்.

இது ஒரு மீள் பதிவுதான். இன்னும் மேக்கப் போட்டு அனுப்பினேன்.

ப்ளாகர் படுத்தல் நிறைய. ஒருதரம்+நூறுதரம் பார்த்தாலும் ஒன்னும் முடியலை.
ஓய்ஞ்சே போச்சு,.நன்றிப்பா.
நல்லா இருக்கா இல்லியா?

கதிர் said...

வாழ்க்கைய நான் உங்க அளவுக்கு இன்னும் புரிஞ்சுக்கலை. உங்களின் இந்த கட்டுரையை படித்த பிறகுதான்
தெரியுது. இப்படியெல்லாம் எல்லாரும் சொல்றதினால கல்யாணத்தின் மேல எனக்கு நம்பிக்கையே இல்ல. பயம் கூட காரணமா இருக்கலாம்.

//ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்லாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)//

சின்ன பசங்கன்னா சும்மாவா?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

அன்புடன்
தம்பி

வல்லிசிம்ஹன் said...

தம்பி,
நாங்க சொல்றதெல்லாம் சீரியசாக எடுத்துக்க முடியுமா?

ச்சும்மா போது போக்கா சொல்றதை நம்பக்கூடாது.

இப்படியே போனால் நான் திருமண வாழ்க்கையின் பெனிஃபிட்
பத்தி போஸ்ட் போட வேண்டியதுதான்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
பயமா? இந்தக் காலத்துப் பசங்களுக்கா?

ஒண்ணும் சொல்றதுக்கு இல்லைப்பா.

Jazeela said...

உங்க பதிவுல காய்கறி மனம் தூக்கலா இருக்கு. அதுவும் அந்த கூட்டு பிரமாதம். இந்த இடத்துல புலி பாய்ந்து பாய்ந்து ஓடி என்ன பண்ணப் போவுது?

வல்லிசிம்ஹன் said...

ஜெஸிலா, எங்களுக்கு, காய் கறி சாப்பிட்டுப் போதுமான
வீரம் வராததால்தான் பாய்ந்து ஓடிப் பயம் காட்டுறோம்.:-00)))
என்ன கூட்டு? புரியலையே?

வல்லிசிம்ஹன் said...

புலியை மாத்திட்டேன் ஜெசிலா.:-0)

பாயறது எல்லாம் பயந்து ஓடறதைக் காமிக்கத்தான்.

கூட்டு எங்கே படிச்சிங்க?
நன்றிப்பா.
வந்து பின்னூட்டம் போட்டதுக்கும்.

Jazeela said...

காய்கறி மனம் என்று நான் சொன்னது உங்க எழுத்து மொழி நடையைப் பற்றி. கூட்டுன்னு சொன்னது உங்க உறவு கூட்டை பற்றி ;-)

உங்க சிந்தனையைப் போல் மீன்களும் ஜோரா துள்ளுதே!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துள்ளாத மனமும் துள்ளும்.
ஏயப்பா, கூட்டுக்கு இது அர்த்தமா?

நான் இந்த ஆங்கிலப் பதிவில தெரியாம ,
தளர்ந்த கறிக் கூட்டு பத்தி எழுதினேனா.
ஒரு வேளை (ரிசல்ட்) சரியா வரலியோனு பார்தேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள். என்ன உங்களுக்கும் வயது குறைந்து விட்டதா தோழியைப்போல. புலியைப்போல் பாய்கிறீர்கள் மீனாய்த்துள்ளுகிறீர்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

vote pottaachu. thanks

Geetha Sambasivam said...

எல்லாப் பதிவும் திரும்ப வந்தாச்சா? அப்புறம் ஒண்ணும் எழுதலையா? கடோத்கஜன், புலிக்கு இந்தக் குழந்தை பரவாயில்லை.

Anu said...

I just read this...
Nice one

வல்லிசிம்ஹன் said...

hi geetha,
thank you for yr comments.
wil write to you.

வல்லிசிம்ஹன் said...

hi geetha,
thank you for yr comments.
wil write to you.

குமரன் (Kumaran) said...

அருமையா எழுதியிருக்கீங்க அம்மா.

Ayyanar Viswanath said...

****for your eyes only*****

துபாய் வந்திருக்கிங்களா?இல்ல துபாய் லதான் இருக்கிங்களா? பதிவர் சந்திப்பிற்க்கு ஏற்பாடு பண்ணிடலாமா?
:)

கோவை விஜய் said...

முதுமையின் வருகை யாவர்க்கும் இவ்வுலகில்
பழைய நினவுகளின் சிந்தனை ஓட்டம்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான எழுத்துக்கள்
உங்கள் எழுத்துக்களை இப்போதுதான் படிக்கிறேன்
முதுமை உங்களுக்குதான்
உங்கள் எழுத்துக்கள் இளமையாகத்தான் இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.

சில பேருக்கு வயசே ஆகதாமே. அந்த டைப் போல இருக்கு நான்.:)

இதையே மெச்சூரிடி போறாதுன்னும் என் உறவில நக்கலா சொல்லுவாங்க:)))
பின்னூட்டத்துக்கு நன்றிப்பா.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ப்ரியமுடன் வசந்த் said...

//55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.
கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு,
சபாவில் மெம்பராகித்,//

சிரித்து சிரித்து..கொண்டிருக்கிறேன்..

இவ்ளோ நாளா இவ்ளோ அழகா எழுதுற உங்களை மிஸ் பண்ணிட்டேனே வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு வசந்த்,
இந்த ஃப்ளோ அப்ப நல்லாவே இருந்தது.:)
முதுமை கொஞ்சம் சீக்கிரமா இனிக்கும் ரத்தத்தை என்னுடலில் சேர்த்ததில், கொஞ்சம் தளர்ச்சி..ரெண்டாம் இன்னிங்க்ஸ் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கலாம். நல்ல வார்த்தைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா .. இன்னும் சிலவருடங்களில் நான் மாமியாராகலாம்.. அதுக்கு தயார் பண்ணுகிறீர்கள் போல வல்லி சிம்ஹன்.. நடத்துங்க.. உபயோகமாதான் இருக்கு .. ஆனா என் வயசு 55 இல்லை.. பத்து கம்மி..

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தேன்.
இப்ப அநேகமா எல்லாருக்கும் வகுப்பு எடுக்கற அளவுக்கு அனுபவம் கூடிப் போச்ச்சுப்பா:)
இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் வருவதே அதிசயமாக இருக்கு.!மிகவும் நன்றிம்மா.

சிவகுமாரன் said...

படிக்கவே சந்தோசமாக இருக்கு. முதுமையை வரவேற்பவர்கள் மிகவும் குறைவு.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சிவகுமாரன். மிக நல்ல பெயர் உங்களுடியது. ரசித்ததற்கு மிகவும் நன்றி. எல்லோருடைய படிப்பு ஆர்வத்தைப் பார்க்கும் போது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி மா.

Thenammai Lakshmanan said...

ஆமா படிச்ச மாதிரி இருக்கு. மீள் பதிவா.:))

வல்லிசிம்ஹன் said...

இது நல்லா இருக்கே!!! நான் பதிவு போட்டதே 2007ல. அப்பவே அது மீள் பதிவு. இப்ப ரெண்டாவது தடவை தேனம்மா படிச்சுட்டு மீஈஈஈஈஇள் பதிவான்னு கேக்கறாங்களே:)))))))
தேனம்மாவுக்கும் ,'சார் யார் தெரியலையே'' வந்துட்டதா:)))நன்றி தேன். இந்தப் பதிவை எடுத்தடறேன். பழசெல்லாம் எதுக்கு.

Thenammai Lakshmanan said...

haahaahaa :)))

குறையொன்றுமில்லை. said...

இப்பதான் உங்க எல்லாபதிவும் படிக்க வந்தேன். நம்ம கடமைகளை எல்லாம்
சிறப்பாக நிறைவேற்றி, வயதான பிறகு நம்க்குன்னு நாம கொஞ்ச்ம் தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டால் அதற்கும் ஸெல்ஃபிஷ்னு பேர்வச்சுடராங்க.

வல்லிசிம்ஹன் said...

thanks Thenamma. you boost my spirits.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் லக்ஷ்மி.
எப்பவும் நம் நடவடிக்கைகளுக்கு பட்டம்
கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்.
நமக்குதான் பக்குவம் வேணும் போல.

இராஜராஜேஸ்வரி said...

சிந்தித்து சீர்தூக்க வேண்டிய விஷயங்கள்.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Thanks Irajarajesvari.
these once in lifetime posts:)
Thanks for identifying the good post of my blog.
shall try to keep up my spirits.

ஸ்ரீராம். said...

இந்த ப்ளாக் நான் பார்த்ததே இல்லையே...

வயதாவதின் குறியீடுகள் லிஸ்ட் படிக்க சுவாரஸ்யம்தான்.

Jaleela Kamal said...

karpanai kathai yathaarththamavee irukku.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். இந்தவலைப்பூ ஆரம்பகாலத்தில் நான் தமிரபரணியிலிருந்து வந்தவள்ன்னு சொல்லிக்க வைத்த பெயர். அப்புறம் நாச்சியாரில் எல்லாம் சங்கமித்துவிட்டன.:)

வல்லிசிம்ஹன் said...

எல்லாமே சந்தித்த நிகழ்ச்சிகள் தான் ஜலீலாமா.சில கற்பனைப் பொடி அங்கங்கே தூவி இருக்கிறேன்.:)

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...