Sunday, July 09, 2006

மென்மைப் பூக்கள்

பெண்மையும் மென்மையும் ஒன்றா/?
பெண்களைக் கடினமாக்குவது எது? வாக்குவாதம் செய்யும்,எதிர்த்துப் பேசும், சண்டைபோடக் காத்திருக்கும்
ஜீவன்களாக மாறுவது எப்போது?
நல்லது சொல்ல வருபவர்களைக்கூட
அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சிந்தையை மறைப்பது எது?
யோசிக்கும்போது வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்து பெறும் அனுபவங்களே அவர்களை மாற்றுப் பாதையில் மனம் போக வைக்கின்றன என்றுதான்
எண்ணம் வருகிறது.
யாருமே பிறக்கும்போது மனசில் கறுவிக் கொண்டு பிறப்பதில்லை.


இதமான தென்றலாகத்தான், பூவாகத்தான் பிறக்கிறாள் பெண்.
இதெல்லாம் என் மனசில் எழுந்த எண்ணங்கள் ,எங்க வீட்டு குப்பு அம்மா(உதவிக்கு இருப்பவர்) ஒரு புது செய்தி சொல்லும் வரை.

;அம்மா, மினிம்மாவை மருமவ அடிச்சுப் புட்டாம்மா!'

'அட, என்னாச்சு, ஏதாவது பண விவகாரமா? அந்தப் பொண்ணு முழிச்சுக்கூடப் பாக்காதேனு" நான் சொல்ல
குப்பு இன்னும் அதிர்ச்சியில் இருந்தாள்.
அவளே தொடருவாள் என்று தெரியும்.
காப்பியை மட்டும் பக்கத்தில் வைத்துவிட்டு
உள்ளே வந்துவிட்டேன்.

எனக்குத் தெரிந்தவரை குப்புவின் தோழி மினிம்மாவும் வம்பு செய்யாத பழைய காலத்து மனுஷி.

அவளுக்கு வந்த மருமவளும் அதே வந்தவாசிக்
கூப்பிடு தூரக் கிராமத்திலிருந்து 15 வயசில் வந்தவள் தான். பேரு வனமல்லி.
புருஷன் தாமோதரன் மனசு அறிந்து, 2இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் பசங்களும் பிறந்து, பிறகு
கணவனுக்கு சங்கடம் வரவேண்டாம் என்று தானே குடும்பக் கட்டுப்பாடு (ஆபெரஷன்) செய்து கொண்டாள்.
நல்ல குடும்பமாக நடந்து வந்தது, தான்.

புது விருந்தாளி சிங்கப்பூரிலிருந்து வரும் வரை.
அவன்நம்ம குப்புவோட மச்சினன். கிட்டி என்கிற கிட்டிணசாமி .
நாலு வருஷம் முன்னால் எதோ ஏஜண்டுக்குப் பணம் கொடுத்து சிங்கப்பூர் போனவன்.
போகும்போது இருந்த பதவிசு இல்லை.

எனக்கு என்னமோ அவனைப் பார்த்தால் சிவாஜி பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதாவை கூப்பிடுவது போல் டேய், சிங்கப் பூரான் என்று கூப்பிடத் தோணியது.
அவன் வருவதற்கு முன்னாலே சென்ட் மணம் தூக்கியது.

எங்க பசங்க வெளில வரும்போது அவனை uneasy ஆகப் பார்த்துவிட்டு ஓடிவிட்டார்கள்

நான் பார்க்கும்போது அவன் உள்ளே வந்து சோfஃஆவிலும் உட்கார்ந்து விட்டான்,.


எனக்குக் கொஞசம் தயக்கமாக இருந்தாலும், என்னப்பா விஷயம் என்று ஆரம்பித்தேன்
சும்மதான்மா பாத்துட்டு கிப்ஃட் கொடுக்கலாமுனு வந்தேன். ''
என்றான்.
இவன? கிப்ஃடா// என்று நினைக்க
இரண்டு மூன்று பென்சில்,கலர் பென்சில் சாக்கலேட் என்றூ கொடுத்தான்.
பிறகு தன் வேலை, தன் வீடு எல்லாவற்றையும் வானளாவப் புகழ்ந்தான்.
அத்தோடு போயிருந்தால் சேதியே இல்லை.
நம்ம அய்யாவுக்குக் கூட இதை விட நல்ல வேலை கிடைக்குங்க,.
நான் டிரை செய்யரென்" என்று சொன்னதும்

எனக்கு சுரு சுரு என்று குடைய ஆரம்பித்தது.
அது கோபமாக மாறுவதற்கு முன்னால்

சமாளித்துக்க் கொண்டேன்.
"நாங்க ரொம்பவெ நல்லா இருக்கொம்பா
எங்களுக்கு அங்கெல்லாம் போக ஆசையில்லை.
நீங்க நல்லா இருங்கொனு சொல்லி அவனை ஒரு வழியாக அனுப்பினேன்.
//என்ன ஆச்சு, இந்தப் பையனுக்கு 4 வருஷம் இப்படி மாத்துமா ஒருத்தனை?? //
மாமியார் உள்ளேயிருந்து
'இடுப்பிலே நாலு காசு சேர்ந்தா வாயிலே நாலு வார்த்தை வரும்னு சொல்லிக் கொண்டே வந்தார்
.இது நடந்து நாலு நாட்களில் குப்பு வந்து சொன்ன சேதிதான், மினிம்மா
அடி வாங்கிய சேதி.

இந்த கிட்டி, மினியம்மா மகனையும் ஆசை
காட்டி நல்லபடியாக வேலைக்குப் போனவனை அழைத்துப்போய்ப்

பணம் பிடுங்கிக் கொண்டு சோமபானக் கடையிலே அம்போனு விட்டுப்போய் விட்டான்.
வீட்டிலே ஒன்றும் தெரியாது.

குப்புவுக்கும் மினிம்மாவுக்கும் இந்த விஷயம்அரசல் புரசலாகத் தெரியும். மல்லிக்குத் தெரியாது.

வேலைக்குப் போன புருஷனைக் காணொமேனு படாத பாடு பட்டுத் தேடி இருக்கிறாள்
அவளுக்குத் தெரிந்து(அந்த) தாமுக்குப் பழக்கம் ஏதும் கிடையாது.

ஏதோ நடந்தூவிட்டது என்று ஊருக்குச் சொல்லி அனுப்பி எல்லோரும் ஓடி வந்து
மினிம்மாவையும் குப்புவையும் விசாரித்ததில் உண்மை வெளிவர,
அதற்குள் போதையும் தெளிந்து, பசி காதை அடைக்க, கையில் பணமும் இல்லாமல் நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் தாமு..

முதலில் அவனைப் பார்த்துவிட்டு அழுது ஓய்ந்த மல்லி,
விஷயம் தெரிந்ததும் எடுத்தாள் காளி வேஷம்.
ஆற்றாமையும், கோபமும் பசியும்
அந்தப் பசுவைப் புலியாக்கி விட்டது.

'எனக்கே தெரியாமல் என் புருஷனை இப்படி செய்து விட்டியே' என்று ஆத்திரம் தாங்காமல்
போட்டாள் ஒரு போடு மினிம்மாவின் முதுகில்.

கூட்டமே வெல வெலத்துவிட்டது.
பாய்ந்து வந்து அவளை விலக்கித் ,திட்டி கடுமையான வார்த்தைகளைப் போட ஆரம்பிக்கவும்தான் ,

அவளது ஆத்திரம் அடங்கி அழுகையோடு தன்னோட தருமரை (புருஷனை)க் கெடுக்க ஒருத்தன் வந்து அதற்குத் துணையாகப் பணமும் கொடுத்த மாமியாரை என்ன சேஞ்சால் தகும் என்று பிரலாபித்து, ஒய்ந்தாள்.

மணவாளனையும், அவனைப் பெற்றவளையும் ஒன்றாக்
உட்காரவைத்து வென்னீர் சுட வைத்து,
உடம்பு பிடித்துவிட்டு,
ஆகாரம் கொடுத்தாள்.

அப்படியே அவள் தூங்கவும் போய்விட்டாளாம்.
இவ்வளவையும் சொல்லி முடித்த குப்புவும் , பின்னால் போய் நிழலாகப் பார்த்து முந்தானைத் தரையில் விரித்து படுத்து விட்டாள் அசந்து.

எனக்கு இந்தப் புது நரசிம்ம அவதாரத்தை யோசிக்கவே முடியவில்லை.
புருஷன் பேரே சொல்ல மாட்டாள்.
அவிங்கே வந்தாங்கதான்.
அப்படிப பட்டவளுக்குத் தன் சொத்தே பறி போக இருந்தது என்னும் செய்தி ஒரு பெரிய அதிர்ச்சி.
அதுவும் தனக்குத் தெரியாமல்;
நடந்தது. தன் புருஷனை இன்னோருத்தன் ஏமாற்றினானெ என்கிற கோபம் எல்லாம் அந்த க்ஷ்ண்த்தில் அவளை ஆட வைத்து விட்டன.
அதாற்கப்பறம் வனமல்லி படு ஜாக்கிரதையாகி விட்டாள்.

க்லொபல் டிடெக்டிவ் ஏஜென்சி தான்
கூப்பிடவில்லை.

அதற்கு பதில் மத்தப் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம்
செய்து விட்டாள்.

இந்த நிகழ்ச்சிதான் என்னை இந்தப் பதிவு ஆரம்பத்தை எழுத வைத்தது. இப்போ கேட்டா கூட எல்லோரும் அசடு வழிய சிரிப்பார்கள்.


10 comments:

துளசி கோபால் said...

மானு,

'வேண்டிவந்தால் சக்கை வேருலேயும் காய்க்கும்.'

உண்மையான கோபம் வந்தால் பொண்ணு ராட்சஸியா மாறிடுவாள்.

இதுதான் நிஜமான உண்மை.

கோபம் எப்படிப் பொங்கி வருதோ அதே போல அது அடங்குனதும் குணம் திரும்பவரும்.
அதான் வெந்நீர் போட்டு உபசரிப்பு.

கண்ணகியின் கோபம் நினைவுக்கு வருதா?

manu said...

ஆஹா, நினைவில் நிற்பதற்கே செயலபட்டார்கள், அது தீராக்கோபம்.
இதெல்லாம் சாதுக் கோபம்:-))

manu said...

டெஸ்ட்

தேவ் | Dev said...

நல்லா இருந்துச்சுங்க.. பல நுட்பமான விஷ்யங்களைப் படு யதார்த்தமாச் சொல்லியிருக்கீங்க.

வல்லிசிம்ஹன் said...

தேவ், முதல் வருகைக்கு நன்றி.

சுற்றி நடக்கும் வினோதங்களே உறவுகளைச் சுற்றீத் தான் நடக்கின்றன.

எல்லோருக்கும் நூற்றுக்கணக்கில் சூழும் சுற்றம் நல்ல தலைப்புதான்.
கசக்காத வரையில்.

வல்லிசிம்ஹன் said...

தேவ், முதல் வருகைக்கு நன்றி.

சுற்றி நடக்கும் வினோதங்களே உறவுகளைச் சுற்றீத் தான் நடக்கின்றன.

எல்லோருக்கும் நூற்றுக்கணக்கில் சூழும் சுற்றம் நல்ல தலைப்புதான்.
கசக்காத வரையில்.

Anitha Pavankumar said...

ennanga idhu
ippadi kooda iruppangala

elephantcom said...

Keep up the good work. thnx!
»

manu said...

அனிதா,வாங்கப்பா.
இப்படியும் இருக்காங்க.

நல்லவங்க இருக்கிறதுனாலே
தானே நம்ம பூமி
ஓடுது. சுத்துது.
ஒரு சிங்கப்பூரானுக்கு ஒரு மல்லி வேண்டாமா/?
நன்றி.பார்த்து,
பின்னூட்டம் இட்டதுக்கு.

manu said...

elephantcom,
வணக்கம். வாங்க.
உங்க ப்ளாகுக்குப் போக முடியலியே!
நன்றி. வந்ததுக்கு.

கி.இராஜநாராயணன் அய்யா--1

எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...