Wednesday, May 24, 2006

வெள்ளீக்காக ஒரு பதிவு

Posted by Picasa இங்கே இருக்கும் குட்டிப் பூனையும் குட்டிப்பொண்ணும் நகல். நடக்கிற கதை நிஜம், அசல்.
சாதரணமான ஒரு நாளில், மழைப் பெய்ய வேண்டாத,மழை நின்னால் போதும் என்று தோணும் நேரத்தில் குட்டிப் பூனை அம்மாவைத் தொலைத்து விட்டது,.
அம்மா சொன்ன இடத்திலேயே இருந்து பார்தது பசி பொறுக்காமல் வெளியில் வந்துவிட்டது. அம்மாவைப் பற்றிக் கவலையில்லை, பசிதான் தாங்க முடியலையென்னு யோசிச்சு தான் இருந்த பால்கனிக்கு வெளியே எட்டிப் பார்த்தது.
பொட்டு பொட்டுனு தெரிக்கிற மழைத்துளிக்கு கொஞசம் சிலிர்த்துக் கொண்டு மேலேயும் சுத்தியும் பர்த்தது. அந்த விளிம்புக்கு கீழே இருந்த வீட்டில் ஒரு அம்மா தன்னோட குட்டிப் பொண்ணோட அவங்க வீட்டு செல்லத்தை தேடிகொண்டு இருந்தாள்." பென்னி,பென்னி'' என்று கூவியும் பென்னி வரும் வழியாகக் காணொம்.
குட்டிப்பொண்ணொ அழுகையை சுருதி கூட்டி அழைத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு பென்னி திரும்பி வருமென்று ந்ம்பிக்கையில்லை. அம்மாதான் பென்னிக்கு சிப்ஸ் கொடுக்க வேண்லாம்னு சொல்லிட்டாங்களெ, அதாலே பென்னி நிறய லே"ஸ் சிப்ஸ்
கிடைக்கிற வீட்டைத்தேடிப் போயிருக்கும்.
என்றபடி மேலே பார்த்த பொம்மிக்குப் பூனைக்குட்டி கண்ணில் பட்டது.
ஆச்சர்யத்தில் வாயை மூட மறந்து அம்ம கையைப் பிடித்து இழுத்தது பொம்மி. 'அம்ம அங்கே பாரு பூனை ''என்று குதிக்க ஆரம்பிதது. சூ சூ என்று விரட்டப் போனாள் அம்மா.அவல் விரட்டின வேகத்தில் பயந்த ந்ம்ம குட்டி அவங்க வீட்டு வராந்தாவிலேயெ விழுந்து விட்டது.
ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி அடுத்த நிமிடம் எழுந்துவிட்டது.
குட்டிகளுக்கே உண்டான சினேகத்தொடு பொம்மி பக்கத்திலே நின்று கொண்டு மீஈஈஇயாவ்வ் என்று இழுத்தது. சோகப்பாடலைக் கேட்ட பொம்மிக்கு பென்னி மறந்து விட்டது.
அடுத்து வந்த அரை மணி நேரத்தில் பால், படுக்கை பாஸ்கெட் என்று கொடுக்கப்பட்டு,(வெள்ளையாக இருந்ததாலும்,பொம்மியோட அம்மா தமிழ் பேசும் வித்தை அறிந்தவளாக இருந்ததாலும் ,வெள்ளி என்கிற பெயர் சூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு பூனைகுட்டி கன கம்பீரமாக கழுத்து சிவப்பு பட்டை ரிப்பன் சகிதம் உலா வர ஆரம்பித்தது. பூனையாகவும் ஆகிவிட்டது.
அதான் மழை வந்துபோய் 6 மாதம் ஆகிவிட்டதே வெள்ளியும் பெண் பார்ப்பதாகக் கேள்வி.



3 comments:

துளசி கோபால் said...

அட! இந்த போஸ்ட் எப்பப் போட்டீங்க? ஏன் தமிழ்மணத்துலே 'அளி'க்கறதே இல்லை?

அளிச்சாத்தானே ஆட்கள் பார்க்க முடியும்? ஓசைப்படாமப் பூனைமாதிரி
இருந்தா என்ன அர்த்தம்?

வல்லிசிம்ஹன் said...

அடப் போஙகப்பா.அளி அளின்னு அளிச்சாச்சு.பூனைனா அப்படித்தான் இருக்கும்.GK சார் எப்படி இருக்காங்க.
சரித்திரம் நாளை உண்டா? இப்போ இன்னொருதரம் டிரை செய்யறேன்.

துளசி கோபால் said...

GK நலம். நாளைக்கு சரித்திரவகுப்பு இருக்கு.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...