எங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை.
அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை.
எல்லோருடைய சுவைகள் வேறுபடும்.
ஆனால் புத்தகக் கடையில் நுழைந்தால்
அவரவருக்கு பிடித்த பகுதியில்,
நாங்கள் தொலைந்து போய், ஒன்று சேருவோம்.
இப்போது மகன்களும் மகளும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் இருக்கிறார்கள்.
ஆரம்பித்த பாடநிலைப் புத்தகங்களிருந்து,வயது வாரியாகப் புத்தகங்கள்.
என் இலாகா---, பக்தி,புராணம்,சமையல்,கலை,சினிமா
பிடித்த எழுத்தாளர்களுடைய நாவல்கள்.
முதலில் நம்ம லைபிரரி பார்க்கலாமா?
எழுத்தாளர்கள், புத்தகங்கள்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
அமரதாரா,
அலை ஒசை
கல்கி களஞ்சியம்,
கல்கி எழுதிய கடிதங்கள்,
வீணை பவானி,
கள்வனின் காதலி,
இன்னும் பல.
தி.ஜானகிராமன் அவர்களின்,
மோகமுள்,
அம்மா வந்தாள்,
அமிர்தம்,
கொட்டுமேளம்,
உயிர்,
சிவப்பு ரிக்சா,
பிடி கருணை,
மரப்பசு, செம்பருத்தி, அன்பே ஆருயிரே
அடி ..... இன்னும் சில.
பிடித்த பக்கங்கள் பல.
அதில் சில வரிகள் 'அத்துவின் முடிவு ' என்னும் கதையில்...
file:////ஐயா என்று யாரவது வாசலில் கூப்பிட்டால், யார் என்று அவள் கேட்டுக்கொண்டு வரும்போது திகைத்துத்தான் போவார்கள்.
பளீர் என்ற சிகப்பு,
கருகரு என்ற சிற்றலையிட்ட கூந்தல்,
கறுப்புப் பட்டுப் புடவை,
மத்தாப்பூவாகப் பூரிக்கும் தோடு//
அப்பாடி !!அந்த அம்மாவே வர மாதிரி அவர் எழுத்தோவியம் காண்பிக்கும்.
பிறகு
கல்கி சார் கதைகள்,
அகிலன் அவர்கள் கதைகள்,
வேங்கையின் மைந்தன், வாழ்வு எங்கே/
கல்கி,கலைமகளில் வந்த தொடர்கள்,.
கயல்விழி,வானதி,பொன்னன்,பொன்னி
சிவகாமி, நரசிம்ம பல்லவன் இவர்களுக்காகத் தூங்காமல் யோசித்து இருந்த நாட்கள்.
சிவகாமிக்காக அழுத நாட்கள்.
டி.கே.சி அவர்கள்,ராஜாஜி ,கல்கி,சிறு பெண் ஆனந்தி பரிமாறிக்கொண்ட தகவல்கள்.
அலை ஓசை படித்து நமக்கும் அந்த மாதிரி காதில் விழுகிறதோ ஒலி என்று திகைத்த நாட்கள்.
மஹேந்திர பல்லவ அரசனின் சிவனடியார் வேஷம்,
நாகநந்தியின் கொடூரக் கண்கள்,சிவகாமியின் குளம்,
மணியன் சாரின் கைவண்ணம் ஒன்றுமே மறக்கமுடியாது.
அதுபோல் சுஜாதா சாரின் புத்தகங்கள்.
அவரின் எல்லா நாவல்களும் இல்லாவிட்டாலும்
முக்கால் சதவிகிதம் இருக்கின்றன,.அதுக்குத் தனிப்பதிவு தேவை. எல்லாவற்றிலும் ஒன்றிவிடுவதால் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடுவது ப்ரம்மப் ப்ரயத்தனம்.
அப்புறம் நம்ம ராசநாராயண ஐயா.
ஒரு ஒரு பக்கமாக்ப் படிக்க வேண்டிய அரிய எழுத்துக்கள்.
மனசிலிருந்து வார்த்தைகள் பேசும் மொழிபோல் பொய்யில்லாமல் வரவேண்டும் என்று அய்யா சொல்லுவர்.
எதுக்கம்மா நாடகத் தமிழ்? இயல்பா எப்படி பேசுறீங்களொ அப்படியே எழுதணும். அப்போதான் அது படிப்பவருக்குப் போய்ச்சேரும் என்பார்.
அவர் எழுதின " கட்டுரைகளில்' இருந்து ஒரு பக்கம்.
மழை பற்றிய சொற்கள்.
1,ஊசித் தூற்றல்
2சார மழை(ஊதல் காற்றோடு பெய்யும் நுண்ணிய மழை)
3 சாரல்
4தூறல்(தூத்தல்)
5பூந்தூறல்
6,பொசும்பல்
7எறிதூரல்(பொடிக்கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)
8தூவானம்,
9பொடிதூறல்,
10, ரவைத்தூறல்
11, எறசல்
12,பறவல் மழை
13பருவட்டு மழை,(,மேலெழுந்த வாரியாகப் பெய்வது)
14அரண்ட பருவம்( கண்டும் காணாம, தேவைக்குக்காணாத மழை)
15,மழை
16,துணை மழை --முதல் மழையைத் தொடர்ந்து மறுனாளோ அதர்கு அடுத்த நாளோ பெய்வது.
துணை மழை இல்லாவிட்டால் நிறைவு தராது. சாப்பாட்டின் போது இரண்டாம் தடவை சோறு வாங்கிக்கொள்ளுவது போல.//
எளிமையாக எல்லோருக்கும் பிடிக்கும் , அப்படியே அணைத்துக் கொள்ளும் எழுத்துக்கள்.
நகைச்சுவை எங்கும் பரவிக் கிடக்கும்.
அதற்குப்பிறகு
எஸ்.ஏ.பி சார்,
அவருடைய சின்னம்மா,இன்றே இங்கே இப்போதே
நான் மனத்தில் பதித்த நூல்கள்.
பிறகு , நாங்கள் எல்லோரும் படிக்க விரும்பியது,
மணியன், சேவற்கொடியோன், கொத்தமங்கலம் சுப்பு-கலைமணி.
இவர்கள் எல்லோரும் ஆனந்த விகடன் மூலம் எங்களைக் கட்டிப்போட்டவர்கள்.
இதய வீணை,
காதலித்தால் போதுமா--ரொமான்ஸை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவை.
தொடர்ந்து சேவற்கொடியோனின் உன் கண்னில் நீர்வழிந்தால் 19 64 வருடத்தின் இதயத்துடிப்பாக இருந்தது.
சுப்பு சார் கலைக்களஞ்சியம்.
நாவல்கள், கவிதைகள்,நாட்டுப்பாடல்கள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா ,நடிப்பு என்று அவர் தொடாத துறையே கிடையாது.
பந்தநல்லூர் பாமா, தில்லானா மோகனாம்பாள்,ராவ் பகதூர் சிங்காரம் இவர்கள் எல்லொரும் எங்களோடு உலவிய காலங்கள் கிராமம்,வயல்,வரப்பு,இசை,நாட்டியம்,சதி,சூழ்ச்சி,சிருங்காரம்
எல்லை மீறிய மகிழ்ச்சி என்று மாறி மாறி எங்களை ஆட்டிப்படைத்தவர்.
அவருடைய செங்கமலம்,மோஹனா,எல்லோருமுயிரோடு உலவ உதவி செய்தவர் கோபுலு சார்.
சண்முகத்தின் அளகபாரம்,வண்டிமாடுகளின் துள்ளல்,மோஹனாவின் சுட்டும் நீண்ட விழிகள்.வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது என்று வாக்கியம் உண்டு.
அது கோபுலுவின் ஓவியங்களுக்குத் தான் பொருந்தும்..
அதையும் எழுத மிக நீண்ட பதிவு தேவை அசோகமித்திரன் சார் கதைகளுக்கும் அப்படித்தான். தேவன்,லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
எஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்.
வல்லிக்கண்னன், தமயந்தி,அருள்மொழிவர்மன்,
மும்தாஜ் யாசீன்,படுதலம் சுகுமாரன்,சுந்தர பாகவதர்,இவர்கள் புத்தகங்களும் உண்டு என் அலமாரியில்.
இன்னும் சேர்ந்து கொண்டு இருக்கின்றன. என்னுடைய (இன்னும் முற்றிய) முதுமை காலத்திற்காக சேர்க்கும் சொத்து.
கண்கள் நன்றாகத் தெரியவேண்டும்.
கீழே வரும் எழுத்தாளர்களும் அவர்கள் புத்தகங்களும்
வெவ்வேறு விதமான சுவையில் இலக்கணம்
பிறழாத தமிழில், எழுதி எப்போதாவது இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே என்று மனசார நினைக்க வைத்தவர்கள்.
பி.வீ ஆர்.
மாயாவி,
வி.ச.காண்டேகர்,கி.வா.ஜ
என்று கலைமகள் இதழில் வெளியான கதைகள்.
ஆர். சூடாமணியின் நாவல்கள்.
மனதுக்குப் பிடித்தவள்.... என்று ஒரு தொடர்.
இன்னும் மிச்சம் இருப்பவை ஆன்மீகப் புத்தகங்கள் .
முக்கூர் ெழுதிய குறையொன்றும் இல்லை -6 பாகங்களாக வந்தவை.
இராகவேந்திர மகிமை அம்மன் சத்தியநாதன் அவர்களால் எழுதப் பட்டது. அல்லல் படும் நேரம் இவைகளைப் படிப்பேன். மற்ற நேரமும் தான்"-))
அதே போல் இராமாயண, மஹாபாரதம்,பாகவதம்
திவயதேசங்கள் , ஸ்தல புராணங்கள் எண்று நிறைய
இருக்கின்றன.
படிப்பது என்னும் வழக்க்ம குறைந்தது,
பிளாகிங் ஆரம்பிததும் தான்.
நெட்டில் தான் படிக்கிறேனே,, என்று நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.
பொறுமையாக இந்தப் பதிவை வாசித்தவர்களுக்கு நன்றி.
பதிக்க சொன்ன சிவபாலனுக்கும் சேர்த்துதான்.
ஆங்கிலம் என்று பார்த்தால்
வீட்டில் இருந்து லஸ் கார்னருக்குப் போனவைகள்
1, Perry mason,
James hadley chase,
Alistair maclean,
Ian Fleming
Mills and boon,
Harvey comics--
Arthur Hailey
Irving wallace,
Robert Ludlum,
Clive Cussler,
Louis Lamour
Frederic Forsythe,
Desmond Bagley
Leon Uris
mostly light reading variety.
மீண்டும் நன்றி.
சொற்பிழை பொறுத்துக்கோள்ளவேண்டும்.

25 comments:
நிறைய நாவல்களின் வாசிப்பு உங்களிடமிருந்தாக படிக்கப் படிக்க தெரிய வருகிறது.
முன்பெலாம் தொலைக்காட்சி, கணினி போன்ற ஊடகங்கள் குறைந்திருந்த நிலையில் இது போன்ற புத்தக வாசிப்பு மிகுந்திருந்ததும் ஒரு காரணியாக இருக்குமோ.
இபொழுது பாருங்கள் இந்த கணினியின் காரணமாக உங்களின் புத்தக வாசிப்பு (தொட்டு) குறைந்திருக்கிறது, இருப்பினும் கணினியின் மூலமாக கொஞ்சம் அதிகமாகவே கலந்து வாசிக்கிறோம் என்று நினைக்கிறேன்.
நன்றி எங்களை உங்கள் நூல் நிலையத்திற்குள் அனுமதித்தற்கு.
//எஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்//
அருமையான வரிசை... எத்தனை புத்தகங்கள்... நீங்கள் கொண்ட புத்தகக் காதல் நன்றாக புரிகிறது..
இதைப் பற்றி ஒரு பதிவிடுங்கள். நிச்சயம் நன்றாக இருக்கும்.
தெ.கா, வருகைக்கு நன்றி.பாராட்டுக்கும் தான்.
இணையம் நல்லதுதான். கையில் புத்தகம் பிடித்துப் படிக்கும் சுவாரஸ்யம் தனி.
வரும் தலைமுறை படிக்கும்படி நாம் நிறைய சொல்ல வேண்டும்.
பாவம் படிப்பே நிறைய நேரம் எடுக்கிறது. அதற்குப்பிறகு தானெ மன உளைச்சல் இல்லாமல் நம் போன்று படிக்க.
நீங்கள் சொல்வது சரியான காரணம்.
விஷுவல் இருக்கும்போது மற்றது குறையும்.
சிவ பாலன் இந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி கொடுத்ததற்கு மிக மிக நன்றி.
புத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தி நாட்கணக்கு ஆகிறது.
மறு பார்வை பார்க்கும்போது தான் விட்டுப் போன நாவல்களும் கிடைத்தன.
மறுபடி எஸ்.வி.எஸ் படித்துவிட்டுப் பதிவு செய்கிறேன்.
ரொம்ப எமோஷனலா புத்தகம் படிபீங்க போல
சிவபாலன்
அவர் எஸ்.வீ.வி.
தவறி எஸ்.வி.எஸ் என்று எழுதி விட்டேன்.
மகேந்திரன்,
எமோஷனல் ஆகாம படிக்க முடியுமா?:-0))
நாவலில் வருபவர்கள் எல்லாமே நிஜம் என்று நினைத்த பருவம் அது.
ஆனால் இன்னும் சிவகாமிக்காக வருந்தும் நேரம் உண்டு.
கல்கி ஐய்யாவுக்குத் தன் பெருமை.
எப்படியோப்பா... இப்படி எல்லார் வீட்டு லைப்ரரிக்குள்ளே புகுந்து வர்றதாலே,
எனக்கு வேண்டிய புத்தகம் எங்கெங்கே இருக்குன்னு ஒரு லிஸ்ட் தயார்
செஞ்சுக்கிட்டு வரேன்.
உங்களையெல்லாம் பார்க்க வரும்போது 'இரவல்' கேப்பேன்.
மறுக்காமத் தரணும்.ஆமா:-)))
வாங்க துளசி, உங்களுக்கு இல்லாததா? எல்லாம் பண்ட மாற்றுத் தானே. உங்க புத்தகம் நீங்க கொண்டுவாங்க. அப்படியே எக்சேஞ்ஜ் பண்ணிக்கலாம். சரியா?
thekkikaattaan
உங்கள் நூலகம் பார்த்தென்,.நன்றி.
ஆஹா! கிட்டத்தட்ட மூன்றரை வருஷம் தாண்டி, உங்கள் நூலகத்திற்குள் நுழைந்ததில் கிடைத்த அனுபவம் விசித்திரமானது. புத்தகத் தலைப்புகளை மட்டுமே படித்து விட்டு
அந்த எழுத்தாளரே, அந்தந்த நாவல் நிகழ்ச்சிகளே நினைவுக்கு வந்த அற்புதத்தை என்னவென்று சொல்வேன்! கொ.சு. கதைகளுக்கு கோபுலு போட்ட சித்திரங்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மையான உண்மை.
ஒரு சந்தேகம் இவ்வளவுக்கும் இடையில்: எழுத்தாளர் மாயாவி குமுதத்தில் எழுதிய ஒரு நாவல் பற்றி அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அந்த நாவலின் முதல் அத்தியாயம் பம்பாய் கடற்கரையில் ஆரம்பிப்பதாக இருக்கும். தங்கள் நூலகத்தில் பார்த்துச் சொல்லமுடியுமா?..
எனது எழுத்தாளர் பகுதியில் 'மாயாவி'யைப் பற்றி எழுத வேண்டுமென்று இருக்கிறேன்.
வரணும் ஜீவி.
குமுதத்திலா எழுதி இருந்தார்? கலைமகள் என்றல்லவா நினைத்தேன்.
எனக்கு மிக லேசாகத் தான் நினைவு இருக்கிறது. தேடிப்பார்க்கிறேன்.
இந்தப் பதிவை எப்படி நீங்கள் படித்தீர்கள் என்று அதிசயமாக இருக்கிறது:)
மிகுந்த அக்கரையுடன் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி, வல்லிசிம்ஹன். எதையோ தேடிக் கொண்டு வந்தவன் உங்கள் பதிவில் தங்கி நெடுநேரம் இளைப்பாறினேன். ஆமாம், அந்தக் கதை குமுதத்தில் தான் தொடர்கதையாக வெளிவந்தது. நன்கு நினைவிருக்கிறது. சிரமத்திற்கு பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
ஆஹா...ராவ் பகதூர் சிங்காரம்
படித்திருக்கிறீர்களா? உயிரோட்டமான கோபுலுவின் படங்கள்!அதில் ஒரு பாட்டு வருமே..அயன்ஸ்த்ரீபார்ட் அல்லிமுத்துவைப் பார்த்து பாடிய பாடல்:
“ நாயென்றும் பேயென்றும் பேசி,
அடி நாக்கு தடித்த மவராசி..
நாயெல்லாம் விசுவாசி..
அவை முன் நீ ஒரு தூசி!! “
அது சரி..குமுதத்தில் ஒரு கதை வந்ததே “உயிரின் விலை பத்து லட்சம்” யார் எழுதியது தெரியுமா?
வரணும் ராமமூர்த்தி.
உயிரின் விலை பத்து லட்சம்............சுஜாதா?
புஷ்பா தங்கதுரை? சரியானா சாலஞ்ச்:)
அதெப்படி இந்தப் பதிவுக்கு இரண்டு மாசத்துக்கு ஒருவர் வருகிறார்கள்னு தெரியவில்லை;)
வருகைக்கு நன்றி ராமமூர்த்தி.
hello vallimma,unga collection romba super! nanum thillana mohanambal novel a moonu bagam originala vikatan la vanththathai appa bind panni vachathu padichirukken. gopulu sir oda drawings innum kannukullaye nikkudu. avaroda vetai mudinju pochu thambi veetukku vanga kavithai padichu irukkeengla? second world war la involve aana soldiers kkaga ezhudinathu. muzhu kavithayum irukravanga pagirnthukkalamey..anbudan sasikala. sasisuga203@yahoo.co.in
அன்பு சசிகலா,
முதல் வருகைக்கு நன்றி.
புத்தகங்கள் நமக்கு எப்பவுமே துணை இல்லையா. முகம் சுளிக்காத நண்பன்.
உங்கள் வலைப்பூ தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.
இவ்வளவு புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஊரில் அப்பா வீட்டில் வைத்திருந்த லைப்ரரிதான் ஞாபகத்திற்கு வருகிறது.புக் கிடைத்தால் போதும் சாப்பாடு,தண்ணி தேவையில்லையம்மா.நானும் உங்க லைப்ரரிக்குள் நுழைந்தது சந்தோஷம்.நன்றியம்மா பகிர்வுக்கு.

பின்னூட்டத் தேதிகள் தெரியாததால் எல்லோரும் எந்தக் காலத்தில் பின்னூட்டம் இட்டார்கள் என்றும் கண்டு பிடிக்க முடியவில்லை! :)))
சுவாரஸ்யமான பதிவு.
அன்பு பிரிசகி அம்மு, அப்பாவிடம் நல்ல புத்தகங்கள் இருக்கின்றனவா. மனம் பண்படப் புத்தகங்கள் போதும். நன்றி மா.
எந்தக் காலத்தில் இட்டார்கள்னு தெரியாவிட்டாலும் பதில் போடும்போது புரிந்துவிடும் ஸ்ரீராம்.நன்றி மா.அப்படி ஒரு வசதி இருந்தால் நல்லதுதான்.
அன்பு ரோஹிணி, அக்கா பதிவைப் படித்த்துக்கு தான்க்ஸ். நீங்க எல்லாம் ப்ரிபேர்டா இருக்கணும்னு தான் எழுதிட்டேன்மா.
I don't know how old is this blog. But I want to point out that Leon Uris is not a "light reading variety". I would even add Arthur Hailey, Frederick Foresythe to that.
Post a Comment