திரு என்.எஸ்.கே, டி.எ.மதுரம் தம்பதிகளின் சுத்தமான நகைச்சுவைக்குப் பிறகு எங்களைக் கவர்ந்தது டணால் தங்கவேலு என்று அறியப்பட்ட திரு கே.ஏ.தங்கவேலுவின் காமெடி தான்
எங்களுக்குத் தெரிந்து அவரை நாங்கள் ரசித்தது கல்யாணப்பரிசு படத்தில்.
ஒரு ரொடீன் காமெடியாக இல்லாமல் டைரக்டர் ச்ரிதரின்
முயற்சியில் இந்தப் படத்தில்
எல்லோருமே நல்ல இயல்பான நடிப்பைத் தந்து இருந்தார்கள்.
கதையின் தொடக்கம், முடிவு எல்லா இடங்களிலும் தங்கவேலுவும் அவரது மனைவி சரோஜாவும் நிறைந்து இருந்தார்கள்.
எங்கள் எல்லோருக்கும் நகைச்சுவை டையலாக் அத்துப்படி ஆகி இருந்தது.
"நீங்கயாரு சார், நாங்க ராஜமன்னார் கம்பனி'
அண்ணாச்சீ, என்னாச்சி,உங்களை சந்திச்சு அனேக நாளாச்சினு கால்ல விழுந்தான், சிசிச்சீ, கால்ல விழாத,
வந்த வேலையை சொல்லு"
ஏதோ சம்திங்..னான்
அப்படியே அவனுக்கு ஒரு நூறு கொடுத்து வந்தேன் என்று அலட்டிக்கொள்ளும் நடிப்பு இனிமேல் பார்க்க முடியாது.
எழுத்தாளர்கள் இன்னாட்டு முதுகு எலும்புனு சொன்னேன் பார். தட்டினான்,தட்னான்.
யாரு உங்களையா?
ஆ.என்னை எப்படித் தட்டுவான், நாந்தான் மேடைலே இருந்தேனே.
அவ்வளா பெரிய கூட்டத்திலே இத்தனியூண்டு மாலையா போட்டாங்க?
ஆங்..அதை எடுத்து வரணும்னா ரெண்டு ,ரெண்டு!!லாரி வேணும்."
நல்லதொரு டூப் மாஸ்டராக வந்து நம்மை மகிழ வைப்பார்.
அதெபோல், அறிவாளி படத்தில் முத்துலட்சுமியுடன் வந்து செய்யும் அட்டகாசம், ஒரு இயற்கையான சுத்தமான
அக்மார்க் சிரிப்புக்கு பார்க்க வேண்டிய படம்.
மனைவிக்கு அறிவூட்ட, நாகரீகம் சொல்லித்தர முயல்வார்.
அதை அனாகரீகமாக சொல்லாமல் அழகாக பழக்குவார்.
முத்துலக்ஷிமியும் சளைக்காமல் ஈடு கொடுப்பார்.
அதில் ொரு வசனம் இதுபோல் வரும். "என் சினெகிதன் ஆளவந்தான் குடும்பத்தைப் பாரு. ,எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்கிறாங்க"
மு.லக்ஷ்மி----"இதென்ன பிரமாதம், என்னைப் பார்த்து, எங்க ஆலுங்க கூடத்தான் உஊஊனு சொல்லறாங்க"
த .. வேலு --- ஆஹா அவன் வுவுவுவ்னு ஏதாவது நாயைக் கூப்பிட்டு இருப்பான்"
அவர் நடித்த மற்றப் படங்கள், அனுபவித்துப் பார்க்க வேண்டியவை
பார்த்தால் பசி தீரும்,
பாக்கியலட்சுமி
மாயா பஜார்,
அடுத்த வீட்டுப் பெண்.
இவை எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன
எல்லாவற்றுக்கும் மேல் அவரது கொள்கை.
யாரையும் அழிவுச் சொற்களால். நகைச்சுவைக்காகக் கூடத் திட்ட மாட்டராம்.
தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்கும்போது கெட்ட கசப்பான இயற்கைக்கு மாறான சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பாராம்.
இன்ஸ்டன்ட் விட் எனப்படும் நகைச்சுவை உணர்வு அவரிடமும், அவர் மனைவியிடமும் இருந்தது.
இரண்டு பேரும் நடத்தின மேடை நாடகங்களும் நல்ல புகழைப் பெற்றன.
திரு தங்கவேலுவின் வாழ்க்கையை ப் பற்றி நம் ஊரு ப்ஃலிம் நியூஸ் ஆனந்தன் சாரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் வாழ்க்கையிலும் தமிழ்மக்கள் வாழ்க்கையிலும் செம்மையான நகைச்சுவை கொடுத்த திருவாளர் டணால் தங்கவேலுவை எப்போதுமே மறக்க முடியாது.
Sunday, June 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
Rangamama-3
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...
-
முதுமை எப்போதுமெ இனிமை. ஜூலை 29 குழந்தைகளுக்கு , சீக்கிரமே பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும். வேலைப் பளு தாங்க மு...
-
எங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...
-
தேன்கூடு-போட்டி/மரணம்--5/7/2006 அவன் அதுவரை மரணத்தைப் பற்றி பயப்படாதவன். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போகும் என்ற வாக்குவாதம் வேறு. அவன் ...
9 comments:
வணக்கம்.
70 களில் எங்களூர் ( சீர்காழி,த.நா) அரசு பயணீர்விடுதியில் வருடமொருமுறை என்பது போல வந்து தங்குவார் தங்கவேலு. சம்பா அறுவடைக்காக வருவார் என்று சொல்வார்கள். திருவாலி எனும் சிற்றூரில் அவருக்கு நிலமிருந்தது.
என்னைப் போன்ற பொடியன்களுடன் கலகலப்பாக பேசுவார். வலைத்தொப்பி போன்றொரு தொப்பி போட்டிருப்பார்.
இளைஞராக இருந்த போது,வீட்டிற்கு தெரியாமல் அவர் மனைவியை சீர்காழியிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என ஊர் மக்கள் சொன்னதுண்டு ! உண்மையா கட்டுக்கதையா தெரியாது.
அவர் பிறந்த ஊர் காரைக்கால், என்னைப் போலவே ;)
என்னங்க 'டணால்'னு இந்தப் பதிவு போட்டுட்டீங்க?
இப்ப சமீபத்துலேதான் சரோஜா அவர்களைப் பற்றிப் படிச்சேன்.
எதுலேன்னு ஞாபகம் இல்லை. அவள் விகடனோ?
நல்ல நகைச்சுவைதாங்க அவுங்களது.
'சீப் காமெடி' கிடையாது. இல்லையா?
வணக்கம் வாசன்,
தங்கவேலு போன்றவர்களைப் பார்ப்பது மிகவும் அரியதாகிவிட்ட நாட்கள் இவை. ஜயா டிவி யில் வரும் தேன்கிண்ணம்(பழைய பாடல் நிகழ்ச்சி) போல் பழய காமெடிகளுக்கும் யாராவது முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். தெய்வபிறவி என்னும் படத்தில் வரும்"அட உன்னைத் தூக்கி வெயில்ல போட"
வாக்கியத்தை நாங்கள் ரொம்ப நாட்கள் உபயொகப்படுத்தி இருக்கிறொம்.
ஆமாம் அவர் திருமணம் பற்றி அன்றைய குமுதத்தில் வந்து இருக்கும்.நன்றி.
வாங்க துளசி.
எல்லாம் வயசானதோட அறிகுறி.
பழய கணக்குப் பாக்கிற வழக்கம் வந்து இருக்கிறது.
நீங்க சொன்னதுதான் சரி 'சீப் காமெடி ' இல்லை.விளயாட்டுக்ககக் கூட நாசமாப்போ அப்படினு சொல்ல மாட்டாராம். "அட நீ நாசம் அற்றுப்போக" போக என்பாராம்.இப்ப வர கேலிக் கூத்து எல்லாம் பார்க்க பழசே தேவலை.
அம்மா,
கடந்த இருவாரமாக பொதிகையில் சரோஜா அம்மாவின் பேட்டியினை போடுகிறார்கள்.
அவர்கள் தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார். அவரது பேச்சை கேட்டால் ஒரு குழந்தையின் பேச்சு போல் இருக்கிறது.
அடுத்த வாரமும் வரும் என்று நினைக்கிறேன். நேற்றும் பார்த்தேன். முடிந்தால் பாருங்கள். பழைய படங்களின் சிரிப்புகளையும் கொடுக்கிறார்கள்.
- பரஞ்சோதி
நன்றி பரஞ்ஜோதி,
எப்போது ஒளிபரப்பாகிறது/
செய்திக்கு நன்றி.திருமதி டி.பி.முத்துலக்ஷ்மியின் பேட்டி வருவதாகப் பார்த்தேன்.இப்போது இவர்களா? இரவு 9 மணிக்கு மேல் டி.வி பார்ப்பதில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சியை விடக் கூடாது.கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
மனு, அதெல்லாம் அவர் சாயல் வரக்கூடாதுனு ரொம்ப விழிப்போட இருக்கேன். வந்ததுனா உடனே சொல்லுங்க. மாத்திக்கணும். "என் வழி, தனி வழி"
அப்புறம் அந்த யோகா மாஸ்டர் அம்பத்தூரில் இருந்து உங்களுக்குச் சரியா வருமா பாருங்க? அப்புறம் விவரம் தரேன்.
"டணால்"னு பதிவு போட்டிருக்கீங்க, ரொம்ப நல்லாப் படமெல்லாம் வருது. நம்ம கம்ப்யூட்டர்தான் இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தகராறு செய்யுது. சீக்கிரம் படம் போடவும் ஆரம்பிக்கணும்., பார்க்கலாம்.
கீதா, வாருங்கள்.அம்பத்தூர் நமக்கு ஒத்து வராது.பிகாசா டௌன்லோட் பண்ணா சௌகரியமா இருக்கும். படம் போடறது எனக்கு வழக்கமாப் போய்விட்டது.அது இல்லாம எழுத முடியலை.
Post a Comment