Friday, July 28, 2006

சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2






ராமேச்வரம் எக்ஸ்ப்ரஸ் ராமனாதபுரத்தை விட்டுக் கிளம்பியதுமே
ரயில் பாதையை மணலும் புதர் மற்றும் முட்கள் சூழ்ந்த பரப்பு கண்ணில்பட ஆரமபித்தது.
முற்றும் புதிதான பயணம்.
உச்சிப்புளி என்று ஒரு ஸ்டேஷன்.
பின் தங்கச்சி மடம்
அதன் பின் பாம்பன்.
என் அப்பா முதலிலேயே சொல்லி வைத்து இருந்த்தால் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலும் பாலமும் வந்துவிட்டன.
காற்றோ ஆக்ரோஷமாக வீசுகிறது.
ரயிலுக்கு இரண்டுபக்கமும் கடல். அடியெ பாலத்தின் தூண்களில் மோதும் அலைகள்.
மெதுவாகப் போன ரயில் நின்றது அப்போதுதான் cantilever bridge என்று சொல்லப்படும் அந்த பாலத்தின் நடுவே இருந்த தண்டவாளங்கள் உயர்ந்து ஒரு வியாபாரக்கப்பல் சென்றது.
மூச்சு விடக்கூடத்தோன்றாமல் பார்த்தொம்.
பின்னாட்களில் வேறு எத்தனையோ அன்னிய நாடுகளில்
வித விதமான அதிசயங்களைப் பார்த்தாலும்,
அப்போது பார்த்த அந்தக் கடலும்,ரயிலும்,கப்பலும் இன்னும் எனக்கு ஆனந்தத்தைத் தருகின்றன.
ராமேச்வரமும் வந்தது. குதிரை வண்டியில் ஏறி,
போஸ்ட்மாஸ்டர்(எங்கள் அப்பா) வீட்டுக்கு வந்தொம்.
ராமெச்வரம் வீடுகள் வீதியில் ஆரம்பித்து அடுத்த வீதியில்
முடிந்தன.வீட்டிற்குள் நுழைய 7,8 படிகள் ஏறி உள்ளே போனொம்.
மஹா பழைய வீடு. இருட்டு,கொஞ்சம் வெளிச்சம் வந்தது மேலே இருக்கும் ஜன்னல்கள் வழியாகத்தான்.
அம்மாவின் சமையலறை விறகு அடுப்பு ,கரி அடுப்பு எல்லாம் சுத்தமாக இயங்கிக் கொண்டு இருந்தன.
காஸ் வராத நாள்.
கெரசினும் ரயிலில் வந்தால் உண்டு. முக்கால்வாசி வராது.
புதுவிதமான குடித்தனம் செய்து கொண்டிருந்தார் எங்காள் அம்மா.
புதிதாக வரும் காய்கறிகள் பற்றியும், வாசலில் உட்கார்ந்தால் வித விதமான மனிதர்களின் போக்குவரத்து தன்னை எப்போதும் , ஒருபுதிய உலகக்
கற்பனையைத் தூண்டும்படி இருப்பதாகவும் சொன்னார்..எல்லாவற்றையும் பாசிடிவாகப் பார்க்கும் உயர் மனம் அவளுடையது
சின்ன தம்பி அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான்.
அவ்னுக்கும் ஓயாதவேலை. சந்தோஷமாக இருந்தான். வரும் வீ.ஐ.பி நபர்களை ராமெஸ்வரத்தை சுற்றிக் கான்பிப்பான்.
எத்தனை தீர்த்தங்கள் உண்டோ அத்தனை இடங்களுக்கும் அழைத்துப் போவான்.
சங்கு, சோழி, பவளப்பாறை, கோரலால் ஆன கைப்பொருட்கள்.
எல்லாம் எங்கே குறைந்த விலையில் வாங்கலாம் என்று தெரியும் அவனுக்கு.
அவனுடன் தனுஷ்கோடி வரை போய் வந்தோம்.
1967இல் இப்போது போல் அவ்வளவு வசதி கிடையாது. நடந்துதான் போனோம்.
ராமர் கோவில் குருக்கள் மட்டுமே போய் வரும் நாட்கள்
அவை.
நாங்கள் மீண்டும் 2003 இல் மதுரையிலிருந்து காரில் பயணம் செய்தோம்.
தேவிப்பட்டினம், சேது ஸ்னானம், முடித்து அதே பாலம் வழியாக ஆனால் தரை மார்க்கமாக அந்தப் பாலத்தை வேறு கோணத்தில் பார்த்தபடி.
பழய நினைவுகளை அசை போட்டபடி....
இப்போது அதே தம்பி பெரிய வேலைக்கு வந்து விட்டதால் . தனி காட்டெஜ், கொடுக்கப் பட்டது
அதெ போல் கடைகளில்
தெரிந்த மனிதர்கள்.எலோருக்கும் வயதாகி விட்டது.
கந்தமாதனபர்வத்தில் இருக்கும் அர்ச்சகரிடம் இவன் கேட்கிறான்"சாருக்கு என்னைத் தெரிகிறதா?' என்று. அவரும் அட போஸ்ட்மாஸ்டர் வீட்டுப் பையனில்லை!!! என்ரு ஆச்சரியப் படுகிறார்.
தன் மகனும் என் தம்பியும் புயல் வந்த போது செய்த சமூக
சேவையை சொல்கிறார். இன்னும் சில நண்பர்களைப் பார்க்க முயற்சி செய்து விட்டு சிலரைப் பார்த்து முப்பத்து நான்கு வருடக் கதைகளைப் பேசிக் கோவிலுக்கும் வருகிறொம்.
ராமேஸ்வரம் மாறியது தெரிகிறது.
புது விதமான நடை உடை பாவனைகளொடு இருக்கும் அண்டை நாட்டுத் தமிழர்களின் நட்பைப் பார்க்க முடிந்தது.
அழகான குடிசைகள், அதன் வாசல்களில் கோலங்கள்
சுத்தமான சூழ்னிலையை விரும்பும் அவர்களது பான்மை
கண்கூடாகத் தெரிகிறது.
நேபாலோ, சிக்கிமோ ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் ராமேஸ்வரம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.
கேரளா சர்க்கஸ் ஒன்று கூடாரம் அடித்துக் கொண்டு இருந்தது.
அங்கே ஒரு திடலில் சிவாஜியின் கௌவுரவம் படம் கூட ஓடிக் கோண்டு இருந்தது.
புயலின் சாயல் அழியாமல் தங்கி விட்ட பூமியாகத் தனுஷ்கோடி.
மறைந்து மறைந்து ஓடி வரும் சிறிய தண்டவாளங்கள்.
பச்சை மரகதமாக ஒரு கடல்.
பழுப்பு நிறமாக இன்னோரு கடல்.
காலம் மாற்றாத வெண்மணல்.,, சிப்பிகள் ஆயிரக்கணக்கில்.
நமது ஜனாதிபதியின் எளிய வீடு., சேது பாலத்தைக் காண்பிப்பதாகக் கூவும் படகுக்காரர்கள்.
எல்லாமே இருக்கின்றன . கூடவே சமய சொற்பொழிவுகளும் அறைகூவி அழைத்தவண்ணம் இருந்தன.
நம் இந்தியா இங்கே இருக்கிறது என்ற நினைப்புடன் திரும்பினோம்.



Sunday, July 09, 2006

மென்மைப் பூக்கள்





பெண்மையும் மென்மையும் ஒன்றா/?
பெண்களைக் கடினமாக்குவது எது? வாக்குவாதம் செய்யும்,எதிர்த்துப் பேசும், சண்டைபோடக் காத்திருக்கும்
ஜீவன்களாக மாறுவது எப்போது?
நல்லது சொல்ல வருபவர்களைக்கூட
அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சிந்தையை மறைப்பது எது?
யோசிக்கும்போது வாழ்க்கையில் அவர்கள் தொடர்ந்து பெறும் அனுபவங்களே அவர்களை மாற்றுப் பாதையில் மனம் போக வைக்கின்றன என்றுதான்
எண்ணம் வருகிறது.
யாருமே பிறக்கும்போது மனசில் கறுவிக் கொண்டு பிறப்பதில்லை.


இதமான தென்றலாகத்தான், பூவாகத்தான் பிறக்கிறாள் பெண்.
இதெல்லாம் என் மனசில் எழுந்த எண்ணங்கள் ,எங்க வீட்டு குப்பு அம்மா(உதவிக்கு இருப்பவர்) ஒரு புது செய்தி சொல்லும் வரை.

;அம்மா, மினிம்மாவை மருமவ அடிச்சுப் புட்டாம்மா!'

'அட, என்னாச்சு, ஏதாவது பண விவகாரமா? அந்தப் பொண்ணு முழிச்சுக்கூடப் பாக்காதேனு" நான் சொல்ல
குப்பு இன்னும் அதிர்ச்சியில் இருந்தாள்.
அவளே தொடருவாள் என்று தெரியும்.
காப்பியை மட்டும் பக்கத்தில் வைத்துவிட்டு
உள்ளே வந்துவிட்டேன்.

எனக்குத் தெரிந்தவரை குப்புவின் தோழி மினிம்மாவும் வம்பு செய்யாத பழைய காலத்து மனுஷி.

அவளுக்கு வந்த மருமவளும் அதே வந்தவாசிக்
கூப்பிடு தூரக் கிராமத்திலிருந்து 15 வயசில் வந்தவள் தான். பேரு வனமல்லி.
புருஷன் தாமோதரன் மனசு அறிந்து, 2இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் பசங்களும் பிறந்து, பிறகு
கணவனுக்கு சங்கடம் வரவேண்டாம் என்று தானே குடும்பக் கட்டுப்பாடு (ஆபெரஷன்) செய்து கொண்டாள்.
நல்ல குடும்பமாக நடந்து வந்தது, தான்.

புது விருந்தாளி சிங்கப்பூரிலிருந்து வரும் வரை.
அவன்நம்ம குப்புவோட மச்சினன். கிட்டி என்கிற கிட்டிணசாமி .
நாலு வருஷம் முன்னால் எதோ ஏஜண்டுக்குப் பணம் கொடுத்து சிங்கப்பூர் போனவன்.
போகும்போது இருந்த பதவிசு இல்லை.

எனக்கு என்னமோ அவனைப் பார்த்தால் சிவாஜி பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதாவை கூப்பிடுவது போல் டேய், சிங்கப் பூரான் என்று கூப்பிடத் தோணியது.
அவன் வருவதற்கு முன்னாலே சென்ட் மணம் தூக்கியது.

எங்க பசங்க வெளில வரும்போது அவனை uneasy ஆகப் பார்த்துவிட்டு ஓடிவிட்டார்கள்

நான் பார்க்கும்போது அவன் உள்ளே வந்து சோfஃஆவிலும் உட்கார்ந்து விட்டான்,.


எனக்குக் கொஞசம் தயக்கமாக இருந்தாலும், என்னப்பா விஷயம் என்று ஆரம்பித்தேன்
சும்மதான்மா பாத்துட்டு கிப்ஃட் கொடுக்கலாமுனு வந்தேன். ''
என்றான்.
இவன? கிப்ஃடா// என்று நினைக்க
இரண்டு மூன்று பென்சில்,கலர் பென்சில் சாக்கலேட் என்றூ கொடுத்தான்.
பிறகு தன் வேலை, தன் வீடு எல்லாவற்றையும் வானளாவப் புகழ்ந்தான்.
அத்தோடு போயிருந்தால் சேதியே இல்லை.
நம்ம அய்யாவுக்குக் கூட இதை விட நல்ல வேலை கிடைக்குங்க,.
நான் டிரை செய்யரென்" என்று சொன்னதும்

எனக்கு சுரு சுரு என்று குடைய ஆரம்பித்தது.
அது கோபமாக மாறுவதற்கு முன்னால்

சமாளித்துக்க் கொண்டேன்.
"நாங்க ரொம்பவெ நல்லா இருக்கொம்பா
எங்களுக்கு அங்கெல்லாம் போக ஆசையில்லை.
நீங்க நல்லா இருங்கொனு சொல்லி அவனை ஒரு வழியாக அனுப்பினேன்.
//என்ன ஆச்சு, இந்தப் பையனுக்கு 4 வருஷம் இப்படி மாத்துமா ஒருத்தனை?? //
மாமியார் உள்ளேயிருந்து
'இடுப்பிலே நாலு காசு சேர்ந்தா வாயிலே நாலு வார்த்தை வரும்னு சொல்லிக் கொண்டே வந்தார்
.இது நடந்து நாலு நாட்களில் குப்பு வந்து சொன்ன சேதிதான், மினிம்மா
அடி வாங்கிய சேதி.

இந்த கிட்டி, மினியம்மா மகனையும் ஆசை
காட்டி நல்லபடியாக வேலைக்குப் போனவனை அழைத்துப்போய்ப்

பணம் பிடுங்கிக் கொண்டு சோமபானக் கடையிலே அம்போனு விட்டுப்போய் விட்டான்.
வீட்டிலே ஒன்றும் தெரியாது.

குப்புவுக்கும் மினிம்மாவுக்கும் இந்த விஷயம்அரசல் புரசலாகத் தெரியும். மல்லிக்குத் தெரியாது.

வேலைக்குப் போன புருஷனைக் காணொமேனு படாத பாடு பட்டுத் தேடி இருக்கிறாள்
அவளுக்குத் தெரிந்து(அந்த) தாமுக்குப் பழக்கம் ஏதும் கிடையாது.

ஏதோ நடந்தூவிட்டது என்று ஊருக்குச் சொல்லி அனுப்பி எல்லோரும் ஓடி வந்து
மினிம்மாவையும் குப்புவையும் விசாரித்ததில் உண்மை வெளிவர,
அதற்குள் போதையும் தெளிந்து, பசி காதை அடைக்க, கையில் பணமும் இல்லாமல் நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் தாமு..

முதலில் அவனைப் பார்த்துவிட்டு அழுது ஓய்ந்த மல்லி,
விஷயம் தெரிந்ததும் எடுத்தாள் காளி வேஷம்.
ஆற்றாமையும், கோபமும் பசியும்
அந்தப் பசுவைப் புலியாக்கி விட்டது.

'எனக்கே தெரியாமல் என் புருஷனை இப்படி செய்து விட்டியே' என்று ஆத்திரம் தாங்காமல்
போட்டாள் ஒரு போடு மினிம்மாவின் முதுகில்.

கூட்டமே வெல வெலத்துவிட்டது.
பாய்ந்து வந்து அவளை விலக்கித் ,திட்டி கடுமையான வார்த்தைகளைப் போட ஆரம்பிக்கவும்தான் ,

அவளது ஆத்திரம் அடங்கி அழுகையோடு தன்னோட தருமரை (புருஷனை)க் கெடுக்க ஒருத்தன் வந்து அதற்குத் துணையாகப் பணமும் கொடுத்த மாமியாரை என்ன சேஞ்சால் தகும் என்று பிரலாபித்து, ஒய்ந்தாள்.

மணவாளனையும், அவனைப் பெற்றவளையும் ஒன்றாக்
உட்காரவைத்து வென்னீர் சுட வைத்து,
உடம்பு பிடித்துவிட்டு,
ஆகாரம் கொடுத்தாள்.

அப்படியே அவள் தூங்கவும் போய்விட்டாளாம்.
இவ்வளவையும் சொல்லி முடித்த குப்புவும் , பின்னால் போய் நிழலாகப் பார்த்து முந்தானைத் தரையில் விரித்து படுத்து விட்டாள் அசந்து.

எனக்கு இந்தப் புது நரசிம்ம அவதாரத்தை யோசிக்கவே முடியவில்லை.
புருஷன் பேரே சொல்ல மாட்டாள்.
அவிங்கே வந்தாங்கதான்.
அப்படிப பட்டவளுக்குத் தன் சொத்தே பறி போக இருந்தது என்னும் செய்தி ஒரு பெரிய அதிர்ச்சி.
அதுவும் தனக்குத் தெரியாமல்;
நடந்தது. தன் புருஷனை இன்னோருத்தன் ஏமாற்றினானெ என்கிற கோபம் எல்லாம் அந்த க்ஷ்ண்த்தில் அவளை ஆட வைத்து விட்டன.
அதாற்கப்பறம் வனமல்லி படு ஜாக்கிரதையாகி விட்டாள்.

க்லொபல் டிடெக்டிவ் ஏஜென்சி தான்
கூப்பிடவில்லை.

அதற்கு பதில் மத்தப் பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம்
செய்து விட்டாள்.

இந்த நிகழ்ச்சிதான் என்னை இந்தப் பதிவு ஆரம்பத்தை எழுத வைத்தது. இப்போ கேட்டா கூட எல்லோரும் அசடு வழிய சிரிப்பார்கள்.


Wednesday, July 05, 2006

மரணம் உதவும்--தேன்கூடு போட்டி

தேன்கூடு-போட்டி/மரணம்--5/7/2006

அவன் அதுவரை மரணத்தைப் பற்றி பயப்படாதவன். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்தா போகும் என்ற வாக்குவாதம் வேறு. அவன் கவலைப் பட்டதெல்லாம் எஞ்சினீயராகப் படிக்கும்மகனை அடுத்த கட்டஉயர்வாக அமெரிக்காவுக்கு அனுப்புவது எப்படி என்றுதான்.

எல்லாருக்கும் உண்டான நியாயமான ஆசைதானே.
மகனும் அப்பாவை ஏமாற்றவில்லை.
ஊர் சுத்தப் போகவில்லை. வகுப்பு "கட் " செய்யலை..எல்லாவிதமான அவசியமான துணைவகுப்புகளுக்கும் போக
அப்பா உதவி செய்தார்.
அலுவலகத்திலிருந்து இதற்காகவெ 10 மைல் தூரத்திலிருந்து,தன்னுடைய ஸ்கூட்டரில் பயணம் வந்து,அது மழை நாளோ, வெய்யில் நாளோ மகன் விரும்பும் டியூஷன் வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு போனான்
அதே ஸ்கூட்டரை மகன் கையில் ஒப்படைக்க அவனுக்குமனம் இல்லை.சாலைகள் சரியில்லை. மகனைப் பாதுகாக்க வேண்டும்.பசிக்கு ஏதாவது வாங்கித் தர வேண்டும். தான் போகாத உயரத்துக்கு அவனை
செல்ல வைக்க வேண்டும்

.நான் அவனைக் கேலி செய்ததுண்டு. இப்படியாவது கஷ்டப்படாவிட்டால் என்னப்பா, நம்ம சென்னை போதாதா? இங்கே இப்போதுகிடைக்காத வேலையா?ம்ஹூம்.யாராலும் அவன் மனதை மாற்ற முடியவில்லை.இதற்காகவே தான் செய்யும் வேலையில் மற்றவர்கள் போக மறுக்கும் இடங்களுக்குப் போய்,

வெற்றிகரமாக அரசாங்கப் பணிகளை முடித்து
அவார்ட்ஸ் & ரிவார்ட்ஸ் பெற்றுக்கொண்டான்.வேலை வேலை ஓயாத வேலை.விருந்துக்கோ மருந்துக்கோ நேரமில்லை.கேட்டால் அதே சிரிப்பு.

உடம்பு ஒத்துழைக்க மறுக்கும்.முதுகு கெஞ்சும், எனக்குக் கொஞ்சம் ஸ்கூட்டரிலிருந்து விடுதலை கொடு என்று.
அப்போதெல்லாம் இருக்கவே இருக்கிறது, நண்பனின் கார்.அலுவலகத்துக்கு லீவு சொன்ன நாள் கிடையாது.
இடைப்பட்ட காலத்தில் அவன் அம்மாவும் நோய்வாய்ப் பாட்டதுதான்அவனுக்கு அதிர்ச்சி.கொஞ்ச நாட்களுக்கு அன்னையும் ஆஸ்பத்திரியுமாகக் கழித்தான்.இவ்வளவுக்கும் நடுவில் அவன் அலுத்துக் கொண்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த ஒரு சமயத்தில் தான் அவன் வருந்தி நான் பார்த்தேன்.அழுதும் விட்டான். அம்மா என்னை விட்டுப் போய் விடுவாளா என்று.நாங்கள் நானும் அவன் அம்மாவும் சேர்ந்துஅவனை மீண்டும் சரிப்படுத்தினோம்.

மற்றபடி சிரிப்பு ,சினிமா இவைகள் அவனுக்கு மிகவும் பிடித்த ,கருவிகள் .நன்றாகப் பாடுவான்.
எங்கிருந்தோ வந்தான், பாரதிப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
அதன் முடிவில் படிக்காத மேதை படத்தில்
ரங்கராவ் அவர்கள் சிவாஜி கணேசனை நினைத்து
'ரங்கா ரங்கா ' என்று பாடுவது தனக்கு மிகப் பொருத்தம் என்பான் .
.எனக்கு முதலில் இவன் மூலம்தான்ஜோக் புத்தகம் பரிசு கிடைத்தது.. அவனிடமிருந்து கேட்டதுதான் இந்த யானை,எறும்பு,என்சைகிளைப் பிடியா. முதலான கடி வகை அறுவைகள்
சரி மரணத்துக்கும் இவனுக்கும் என்ன உறவு?அவனும் மரணமும் ஒரு இரவு சந்தித்து விட்டார்கள்.இரவு அம்மாவுக்குத் துணையாகப் படுக்கச் சென்றவன் அந்த அம்மாகால் பக்கத்திலேயே உயிரையும் கொடுத்து விட்டான்.தூக்கத்தில் உயிரையே வாங்கும் sleep apnea!
அதீதமான குறட்டை விடுகிறவர்களுக்கு சில சமயம் மூச்சு தடைபடுமாம். அப்போதேமார்படைப்பு, மரணம்.
ஒரு நல்லது நடந்தது.அவன் மகன் வெளிநாடு போனான்.அவனுக்குப் போவதற்காகவும், படிப்பதற்காகவும் அந்த பல்கலைக் கழக பண உதவியும் கிடைத்தது. இவன் ஒடி ஓடி சம்பாதித்ததற்கும் ஒரு மதிப்பு கிடைத்தது. ஒரு லட்சியம் நிறைவேறவும்அவன் மரணம் உதவியது.

Wednesday, June 28, 2006

கி.இராஜநாராயணன் அய்யா--2

அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை.
எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார்.
அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான்.

எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து
அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும்,
எனக்குப் பேச்சே வரவில்லை.

இவ்வளவு பெரிய ம்னிதர்களோடுப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?

வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்..

காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ.
வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது.
கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.
அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள்.
அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு.
எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.
வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள்.
என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது

அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை.
அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான்.
அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த
இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.
எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து
இருக்கிறார்கள்!!
வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து
அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது
மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம்.
அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார்.
ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..

Sunday, June 25, 2006

டணால் தங்கவேலு

திரு என்.எஸ்.கே, டி.எ.மதுரம் தம்பதிகளின் சுத்தமான நகைச்சுவைக்குப் பிறகு எங்களைக் கவர்ந்தது டணால் தங்கவேலு என்று அறியப்பட்ட திரு கே.ஏ.தங்கவேலுவின் காமெடி தான்
Posted by Picasaஎங்களுக்குத் தெரிந்து அவரை நாங்கள் ரசித்தது கல்யாணப்பரிசு படத்தில்.
ஒரு ரொடீன் காமெடியாக இல்லாமல் டைரக்டர் ச்ரிதரின்
முயற்சியில் இந்தப் படத்தில்
எல்லோருமே நல்ல இயல்பான நடிப்பைத் தந்து இருந்தார்கள்.
கதையின் தொடக்கம், முடிவு எல்லா இடங்களிலும் தங்கவேலுவும் அவரது மனைவி சரோஜாவும் நிறைந்து இருந்தார்கள்.
எங்கள் எல்லோருக்கும் நகைச்சுவை டையலாக் அத்துப்படி ஆகி இருந்தது.
"நீங்கயாரு சார், நாங்க ராஜமன்னார் கம்பனி'
அண்ணாச்சீ, என்னாச்சி,உங்களை சந்திச்சு அனேக நாளாச்சினு கால்ல விழுந்தான், சிசிச்சீ, கால்ல விழாத,
வந்த வேலையை சொல்லு"
ஏதோ சம்திங்..னான்
அப்படியே அவனுக்கு ஒரு நூறு கொடுத்து வந்தேன் என்று அலட்டிக்கொள்ளும் நடிப்பு இனிமேல் பார்க்க முடியாது.
எழுத்தாளர்கள் இன்னாட்டு முதுகு எலும்புனு சொன்னேன் பார். தட்டினான்,தட்னான்.
யாரு உங்களையா?

ஆ.என்னை எப்படித் தட்டுவான், நாந்தான் மேடைலே இருந்தேனே.
அவ்வளா பெரிய கூட்டத்திலே இத்தனியூண்டு மாலையா போட்டாங்க?
ஆங்..அதை எடுத்து வரணும்னா ரெண்டு ,ரெண்டு!!லாரி வேணும்."

நல்லதொரு டூப் மாஸ்டராக வந்து நம்மை மகிழ வைப்பார்.
அதெபோல், அறிவாளி படத்தில் முத்துலட்சுமியுடன் வந்து செய்யும் அட்டகாசம், ஒரு இயற்கையான சுத்தமான
அக்மார்க் சிரிப்புக்கு பார்க்க வேண்டிய படம்.

மனைவிக்கு அறிவூட்ட, நாகரீகம் சொல்லித்தர முயல்வார்.
அதை அனாகரீகமாக சொல்லாமல் அழகாக பழக்குவார்.
முத்துலக்ஷிமியும் சளைக்காமல் ஈடு கொடுப்பார்.
அதில் ொரு வசனம் இதுபோல் வரும். "என் சினெகிதன் ஆளவந்தான் குடும்பத்தைப் பாரு. ,எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்கிறாங்க"

மு.லக்ஷ்மி----"இதென்ன பிரமாதம், என்னைப் பார்த்து, எங்க ஆலுங்க கூடத்தான் உஊஊனு சொல்லறாங்க"

த .. வேலு --- ஆஹா அவன் வுவுவுவ்னு ஏதாவது நாயைக் கூப்பிட்டு இருப்பான்"

அவர் நடித்த மற்றப் படங்கள், அனுபவித்துப் பார்க்க வேண்டியவை
பார்த்தால் பசி தீரும்,
பாக்கியலட்சுமி
மாயா பஜார்,
அடுத்த வீட்டுப் பெண்.
இவை எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன
எல்லாவற்றுக்கும் மேல் அவரது கொள்கை.

யாரையும் அழிவுச் சொற்களால். நகைச்சுவைக்காகக் கூடத் திட்ட மாட்டராம்.
தமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்கும்போது கெட்ட கசப்பான இயற்கைக்கு மாறான சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பாராம்.
இன்ஸ்டன்ட் விட் எனப்படும் நகைச்சுவை உணர்வு அவரிடமும், அவர் மனைவியிடமும் இருந்தது.
இரண்டு பேரும் நடத்தின மேடை நாடகங்களும் நல்ல புகழைப் பெற்றன.

திரு தங்கவேலுவின் வாழ்க்கையை ப் பற்றி நம் ஊரு ப்ஃலிம் நியூஸ் ஆனந்தன் சாரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் வாழ்க்கையிலும் தமிழ்மக்கள் வாழ்க்கையிலும் செம்மையான நகைச்சுவை கொடுத்த திருவாளர் டணால் தங்கவேலுவை எப்போதுமே மறக்க முடியாது.

Friday, June 23, 2006

அரோவானா மீனாக்ஷி

Posted by Picasa மீனாட்சி என்று பெயர் சூட்டிக்கொண்ட இந்த அரோவானா வகை fஃரண்ட் எங்க வீட்டுக்கு வந்து 4 வருடம் ஆகிறது. 4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது
எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.எவ்வளவு நாள் வாழ்வோ என்று.
ஏனெனில் அப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம் அடிக்கும் வருடம்.
மீன்கள் வரும், நீந்துவதற்குப் பதிலாக மிதக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனை உணவாக ஆகிவிடும்.
இதே போல் வாள மீன் விலாங்கு மீன் த்ிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்
பெல்லி அப் செய்வதும்
நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.
அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யேய் மீன் வரப்போரது " 'என்று வந்து பார்ப்பதும், அச்சச்சோ இதுவும் போயிடுத்தா
எண்று உச்சுக் கொட்டுவதும் வ்க்கமாகி விட்ட வேளையிலே.... எங்க வீட்டு எஜமானருடைய(நிஜமாகவே அவர்தான் எஜமானர்) உடற்பயிற்சியாளர் இந்த அரோவானா மீனை வளர்ப்பது பற்றீ ரொம்ப சிறப்பாக எடுத்து சொன்னார்.
அடக் கடவுளே இன்னோரு ஜீவனா என்று முதலில் தோன்றினாலும் அவர் சொன்ன அடுத்த நாளெ,
இந்த ஆசாமி (நம்ம மீன்டசி)ஒரு பாலிதீன் பையில் துள்ளிக்கொண்டு வந்து விட்டார்.

என்னுடைய மீன் (வேறு மாதிரிப் பார்த்த )கண்களுக்கு(ஜாண்டிஸ் eyes... சொல்லக் கூடாது) அது பரிதவிப்பதாகத் தோன்றியது.
இந்த மீனோடு வந்த உதவியாளர், அதற்கு உணவும் கொடுத்து விட்டுப் பொவார் என்ற நினைப்பில் நாங்கள் பரமரிப்பு பற்ரிய விவரங்களைக் கேட்கும் போது தான், தெரியும், வந்திருப்பவர் (arovaana)


லைவ் fish சாப்பிடுகிறவர் என்று.
சகலசைவப் பழக்கங்களையும் பின்பற்றும் வீட்டில்
உயிரொடு வாங்கித் தொட்டியில் போட்டு அது சாப்பிடுவதை வேறு பார்க்கணுமா. ,,சரிப்படாதே என்று நான் வாயைத் திறப்பதற்குள், எ-ர் சரிப்பா நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தார்.
அப்போது ஆரம்பித்தது மத்ஸ்யாவதாரப் பெருமை.
உண்மையாகவே இந்த வகை மீன் டிஸ்கவரி சானலில் வந்ததாம்.
அதன் விஸ்வரூபம் 6 அடியாம்.
வளர வளரத் தொட்டி பெரிசாக வேணுமாம்.
நான் நம்பவில்லை.
எல்லாம் ஹம்பக். சும்மா மார்க்கெடிங் பேச்சு என்ற யோசனையில், முதலில் 50 பைசா மீன் இரையாகப் போடலாம்னு நினைத்து இன்னொரு மீன்கள் விற்கும் கடைக்கு( அதாவது மீன் சாப்பிடற மீன் விற்கும் கடை. நீங்கள் வேறு ஏதாவது கற்பனை செய்ய வேண்டாம்)
போனோம்.
அவனுக்கு ஒரே குஷி.
என்ன சார் அரோனாவா. ??வீட்டுக்கு வாஸ்துப்படி நல்லது சார். !
இப்படியே தினம் 10 பொடுங்க. அப்பறம் வளந்தப்புறம்
பெரிசு போடலாம் என்று ஒரு 20 கறுப்பு கலர் மோல்லி எனும் மகிழ்ச்சியாகத் தங்களுக்கு நேரப்போவதைத் தெரியாத ஆடிக் கொண்டிருந்த ஒரு இன்ச் மீன்களைக் கொண்டுவந்தோம்.
வழி முழுவதும் இதென்னடா காலம். ஒரு வேளை இந்த அரோனா போன ஜன்மத்தில் நமக்கு விருந்தாளியோ,மாமியார்,மாமனாரோ இல்லாட்ட ஹாஸ்டலில் விடப்பட்டு சாப்பாட்டுக்கு நாம ஏங்க வைத்த பிள்ளையோ என்றெல்லாம் நாடி ஜோஸ்ய ரேஞ்சில் மனசு ஓடுகிறது.
இரண்டு வாரம் முன்னால் எங்கள் வீட்டுக்கு வந்த(பொழுது போகாமல் எல்லாருடைய சர்வ நாடியையும் ஆருடம் பார்த்து ஒரு வழி பண்ணுகிறவர்) so called சினேஹிதர்
என் கையைப் பார்த்து உங்களுக்கு 4 குழந்தைகள் பிறந்து இருக்கணுமே என்று கேட்டிருந்தார்.
சும்மா கேள்வி கேட்டாலே முழிக்கும் வகை நான்.
இந்த மாதிரி வாழ்க்கையே கேள்விக்குறி மாதிரி ஒரு குண்டு போட்டார்னால்// வெலவெலத்து விட்டது.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே.
எங்களூக்கு இந்த 3 குழந்தைகள் தான்.
வேற ஒண்ணூம் தெரியாதே என்று நான் அவஸ்தைப்பட
இவர் உள்ளுக்குள் சிரிப்பு வெளில சீரியஸாக வைத்துக் கொண்டு(ஜாதக ஜோசியமெல்லாம் நான் தான்) கவனிக்கிறார்.
என்னவெல்லாமொ நினைப்பு வருகிறது. ஒரு வேளை ' பழைய சினிமாக்கள் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்து
இருக்குமோ? இல்லையே, ஒவ்வொரு தடவையும் எல்லோரும் வரப் போகத்தானே இருந்தார்கள். இப்படி நான்
மாயமோஹினி trailer மாதிரி ரீவைண்ட் பண்ண, அவர் என் கையை இப்படித் திருப்பிப் பார்த்து ஆமாம்மா உங்களுக்கு மூன்று தான் என்று அசடு வழிந்தது,
இப்போது நினைவுக்கு வருகிரது. அதாவது feed fish வாங்கி வரும்போது.
எப்படியோ மீனும் வளர்ந்து மீனாக்ஷி என்று நாமமும் சூட்டி
நாளிரு மேனி பொழுதிரு வண்ணம் வளர்ந்து இப்போது 3 அடி நீளத்தில இருக்காங்க.
விட்டா வளருவாங்க.
எங்கே போறது அவ்வள்வு பெரிய தொட்டிக்கு.?
அப்புறம் நாங்கள் இடம் மாற வேண்டியதுதான்.
அதாவது சுவரோரம் உட்கார வேண்டி வரும்.
அவருக்கு தனி வாட்டர் purifier, air cleaner ,லைட் தனி.
அவரு தொட்டிக்கு உள்ள இருந்தே நம்மளை சர்வே பண்ணுவாரு.
வர சைவ ஆளுங்களுக்கு எல்லாம், சுத்தி வரும் குட்டி மீன்களை பெரிசோட கூட விளையாடும் என்று சொல்லுவோம company.
இப்போது எல்லோருக்கும் தெரியும். big eats small,
என்ன செய்வது!
பக்கத்தில போனா அம்மா என்கிறது.
என்னது மீனாவது குரல் கொடுப்பதாவதுனு ஒரு மாதிரி என்னைப் பார்க்க வேண்டாம்.
மீனாட்சிக்கு வேற யாரையும் தெரியாதே.
அதனாலே தன் மொழியில் என்னைக் கூப்பிடுகிறது.
அவ்வாளவுதான்.

ஆஸ்டரிக்ஸ்,ஓபிலிக்ஸ் &other gauls








மேலெ உள்ள அனைத்து உருவங்களும் எங்கள் குடும்பத்தில் ஒன்றியவை.
காசினி,உடர்சோ என்ற ப்ஃரென்ச் நண்பர்கள் உருவாக்கிய காமிக் காரெக்டர்கள் புத்தக வடிவிலும் இப்போது திரையிலும் உலா வருகிறார்கள்.
இவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் குழந்தைகளின் பள்ளிப்பருவத்தில்.
அப்போது இந்தப் புத்தகங்களின் விலை 25ரூபாய் என்று நினைக்கிறேன்.
மாதம் ஒரு புத்தகம் என்ற கணக்கில் வாங்க முடிந்தது அவ்வளவுதான்.!
லாண்ட்மார்க் வருவதற்கு முந்திய காலம்.
அதுவரை ஹிக்கின்பாதம்ஸ்,கென்னடி புக் செண்டர்,PAI&CO
என்று எங்கள் புத்தக வேட்டைகள் நடக்கும்.
பிறந்த நாள் பரிசு அனேகமாகப் புத்தகங்கள் தான்.
பிறகு வருடாந்திர விழாவாகப் புத்தகக் கண்காட்சி வரத் தொடங்கியது.
அந்தப் பத்து நாட்களும் ஒரே பரபரப்புதான்.
எல்லொருக்கும் பொருந்தி, சரிவரும் நாட்களில் மதியத்திலிருந்து இரவும் மார்கழிக்காற்றும் கூடவே பசியும் வீட்டை நினைவுக்குக் கொண்டு வரும்போது
கிளம்பி விடுவோம்.
மனம் வராமல் இனிமேல் அடுத்த வருடம்தானா என்ற ஏக்கத்தோடுதான் திரும்புவோம்.
இப்போது நிலைமை வேறு.
குழந்தைகள் வளரும் நேரம் சுவைகளும் மாறின. அவர்களுக்குப் படிப்பு கூடியபோது பொழுதுபோக்கு ,நண்பர்கள், கல்லூரி கல்ச்சுரல், என்று மாறியது.
படிக்கும் புத்தகங்களும் சுய மேம்பாடு என்று அழைக்கப்படும் வகையில் திரும்பின.
ஆனால் நாங்கள் இன்னும் விரும்பும் பல நண்பர்களில் மேலெ படத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.இவர்களைத்தவிர இம்பெடிமெண்டா,ஜீரியாடிரிக்ஸ்,

ககாfஃனிக்ஸ், எப்போதுமே சண்டை போடும் மீன் விற்பவர்,முக்கிய உறுப்பினரான போர்(பன்றி,வராகம்)........

எல்லாருடைய படங்களும் போடவில்லை.

மீண்டும் பார்க்கலாமே.

Wednesday, June 21, 2006

ராம லக்ஷ்மண ஜானகி ஜய் போலோ ஹனுமானு கி

Posted by Picasa "தசாபுக்திகளும் ராமாயண பாராயணமும்" என்ற புத்தகம் ஒன்று கிடைக்கிறது..அதில் சொல்லி இருக்கிற முறைப்படி நாம் ராமாயண காண்டங்களைப் படிக்க நமது குறைகளைப்போக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
எனக்கு இந்தப் புத்தகத்தில் பிடித்தது, எல்லா அத்தியாயங்களும் சிறியதாகப் படிக்கக் கூடியதாக இருந்ததுதான்.
ராமாயணத்தில் எல்லா விதமான பிரச்சினைளுக்கும் பதில் இருப்பதாக எனக்குத் தோன்றும்.
திருமணம் ஆகாதவர்கள் படிக்க சீதாராம விவாகம்.
குழந்தை பிறக்க ச்ரிராம் ஜனனம்.
பிரிந்தவர் ஒன்று சேர சுந்தர காண்டம்,
தேடும் பொருள் கிடைக்க, ச்ரிஹனுமான்,இலங்கையில் சீதை அம்மாவைத் தேடியது,
நியாயமான ஆசைகள் நிறைவேற ,ஹனுமன் தேவியைத் தரிசனம் செய்தது.
மனம் கலங்காமல் உறுதியோடு இருக்க,, அனுமன் பல அழகிகளை ராவணனின் பள்ளியறையில் பார்த்தபோதும் தன் ப்ரம்மச்சரிய உறுதி கலங்காமல் இருந்த ஆச்சர்யம்,
ஆபத்துக் காலங்களில் சீதை மனம் உடையாமல் ராம நாமத்தை ஜபித்தது போல்,அதை நிரூபிப்பது போல் த்ரிசடை சொப்பனம் காண்பது, அதனால் ஒரு திண்ணம் நம்பிக்கை கிடைப்பது,
இராவணனே தன் பட்ட மகிஷிகள் சூழ வந்து பயமுறுத்தி
ஆசை வார்த்தைகள் பேசினாலும் அஞ்சாமல், துணிவுக்கு அரசியாக ஒரு புல்லைக் கிழித்து தனக்கும் அவனுக்கும் இடையே போட்டு அதை பார்த்து, அற்பப்பதரே
என்று விளிக்கிறாள்.
எல்லாத் துன்பங்களுக்கும் முடிவு உண்டு என்று தெரிவிப்பதற்கு சீதையின் கைகளில் ச்ரிராம மோதிரம் வந்து சேர்கிறது.
அனுமனின் விடா முயற்சியைத் தெரிவிக்க, நமக்கு உணர வைக்க, விஸ்வரூபம் எடுத்தல்,விண்ணில் ஏகுதல்,
மைனாக மலையை ஒதுக்கி விட்டு
விரைதல்,சுரைசையின் எதிர்ப்பை சமாளித்து அவள் ஆசி பெறுதல்,
சிம்ஹிஹா என்னும் அரக்கியை வெல்ல ,அவள் இதயத்தையே கிழித்து வெளிவருதல்,
இறுதியாக லங்கை வந்ததும்
விஸ்வரூபம் ,சாமானிய சிறிய வானரம் ஆவது
என்று நம்பிக்கை ஒன்றே சாதனை புரிய வைக்கும் என்ற் உண்மையையும் பக்தி விலாசத்தையும்
காணக் கிடைக்கிறது ஒரே புத்தகத்தில்.
அனுமனே கதாநாயகன் இங்கே.
சுந்தர காண்டம் முழுவதும் அனுமனின் ஆற்றல் வெளிப்படுகிறது.
ஆனால் யாராலும் பேசப் படாமலேயே போய் விடுகிறது.
தான் சீதையைத் தேடிய கதை சொல்கிறான்.
பார்த்ததை சொல்கிறான்.
அவள் மாண்மையைப் பேசுகிறான்.
ஆனால் தான் ஒருவனாக அரக்கர்களைக் கொன்று குவித்ததையோ நூறு யோஜனை தூரத்தைத் தாண்டிய
வீரத்தையோ அவன் பேசவே இல்லை.
அதனால் தான் அவன் சுத்த சுந்தர (காண்ட)ஆஞசனேயன் ஆகிறானோ? ஆமாம், சொல்ல மறந்து விடடேனே.
திரேதாயுக ராமன் 86" உயரம்.
இந்த ராமனை சீதை இலக்குவனுடன் பார்க்கலாம்.
8' அடி உயரத்தில் எளிமையாக மரவுரியோடு காட்சி அளிக்கிறான்.,
திருவள்ளூர் பக்தவத்சலம்,செங்கமலத்தாயார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள ஏரிகாத்த ராமன் கோவிலில் இருக்கிறான்.மதுராந்தகம் போலவே இங்கெயும்
ஏரியைக் காத்ததினால் இந்தப் பெயர். மறக்காமல் தரிசனம் செய்யவும்.

Sunday, June 18, 2006

ஆனந்தம் (கோபத்திற்குப் பிறகு)



ஆனந்தம்,அனந்தம்.மஹாலக்ஷ்மியுடன் இருக்கும்போதுதான்.
தனியாக இருந்த ராமனுக்குத் தான் எத்தனை கோபம்.
நாங்கள் திருப்புல்லணை என்னும் திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதபெருமாள் கோவிலுக்குப் போனபோது தான் பார்த்தோம்.
வெறும் தரையில் புல்லால் ஆன இருக்கையில் ராமன் படுத்து இருக்கும் கோலம். கடலரசன் வருகைக்குப் ப்டுத்துத் தபம், செய்கிறான்.மூன்று நாட்களாகப்பசியோடு காத்து இருக்கிறான்.
அவன் நினவோ கடலுக்கு அந்தக் கரையில் காத்திருக்கும்,, ஜானகியிடம்.
தவிப்புடன் இருக்கும் தனது மனைவியிடம் என்று மட்டும் இல்லாமல்,"உங்கள் அரசாட்சியில் நானும் குடியிருப்பவள் இல்லையா. ராமா உனக்கு அதுகூட நினைவு இல்லையா".உன் ஆளுமைக்கு உட்பட்டவளிடம் நீ அலட்சியமாக இருக்கலாமா,?" என்று அனுமனிடம் சொல்லி அனுப்பினாளே, அவள் துயரம் தீர்க்க நான் உடனே போகவிட்டால் என்னை ஒரு கணவன் என்றோ, ஒரு அரசன் என்றொ, சொன்ன சொல் காப்பவன் என்றோ எப்படி நினைக்க முடியும் என்று பரிதவிக்கிறான்.
இயற்கையாகக் கோபத்திற்கு இடம் கொடுக்காதவன்.
அவன் கோபித்த கணங்களை எண்ணி விடலாம்.
தன்னை நம்பியவர்களை யாராவது துன்பப் படுத்தினால்,
உடனே காக்க வந்து விடுவான்.
சீதையைக் காகாசுரன் குத்திக் கிழிக்க முற்படும்போது,
அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்த ராகவன், சீற்றத்துடன் எழுந்திருக்கிறான்.
"படுத்திருந்த ஐந்து தலைக்கருநாகத்தை எழுப்பியவன் யார்' என்ற கேள்வியுடன்."/
சுற்றிப் பார்க்கிறான்.அப்போது அவன் பார்வையில் ஜயந்தன் என்ற, காக ரூபம் எடுத்தவன் (இந்திரன் மகன்) படுகிறான்.
ஆக்ரொஷத்துடன், சீதை மேலிருந்த இரத்தத்துளிகளைப் பார்த்த மறு வினாடி பறக்கிறது ஒரு புல்.ராமனின் அஸ்திரமாக. துரத்துகிறது.அவனும் எல்லா உலகத்திலேயும் அடைக்கலம் கேட்டு, தந்தையிடமும் அது கிடைக்காமல் ராமன்சீதையிடமே வந்து விழுகிறான்.
தன்னைத் துன்புறுத்தியவனிடமும் இரக்கமே
பிறக்கிறது தாய்க்கு. சீதை.
விழுந்த கிடந்த காகத்தின் தலையை இராமன் கால்கள் பக்கமாக திருப்பி விடுகிறாள். இராமன்
விடுத்த அஸ்திரம், வீணாகாமல் அந்த அசுரனின் ஒரு கண்ணை மத்திரம் வாங்கிக் கொள்கிறது. இப்படி அவளைப் போற்றிப் பாதுகாத்தவன்,
தன் சீதாவைக் காப்பாற்ற முடியாமல், கடலரசின் தாமதத்தை எப்படிப் பொறுப்பான்?
மூன்று நாட்கள் பொறுமை காக்கிறான். நான்காம் நாளும் அழைப்புக்கு வராத கடலரசனைக் குறித்து அஸ்திரம் பூட்ட,புல்லணையைவிட்டு எழுந்து, தயார் ஆகிறான்.
அவன் கம்பீரமாக நிற்கும் அழகுதான் எப்படி இருக்கிறது!
நிமிர்ந்த பார்வை, அதில் வைராக்கியம்,மூண்ட கோபம், தண்டிக்கத் தயார்நிலையில் கோதண்டம்.
கதறிக்கொண்டு சரணம் அடைகிறான், சமுத்திரராஜன்.
அவனுடன் கூட வந்த அவனது மனைவியரும் சரண் கேட்டு கை கூப்பி நிற்கின்றனர்.
தன்னிலைக்குத் திரும்பும், ராமனின் கோபம் தணிந்து
சேது அணையில் கவனம் திருப்புகிறான்.

"விபீஷணின் நட்பைக் கொண்டான்,
ராவணனை வென்றான்//
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்க செய்தான்.
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று
அயோத்தி நகர் மீண்டான்,
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான் அரசுரிமை
கொண்டான்."//
இந்தக் கடைசி வரிகள் "லவகுசா" என்னும் படத்தில் லவனும் குசனும் ராமனின் எதிரே வால்மீகியின் நூலை அரங்கேற்றம் செய்யும்போது பாடும் பாடல்.
கேட்கும்போதே நம் மனம் உருகும்.
ஆனந்த ராமனாகச் சீதையோடு எழுந்தருளி இருக்கும்
தாசரதியை வணங்குவோம்.





Sunday, June 11, 2006

தேன்கூடு போட்டி.ஆகஸ்ட்,முதுமை எப்போது ஆரம்பம்

முதுமை எப்போதுமெ இனிமை.

குழந்தைகளுக்கு , சீக்கிரமே வயசானால் படிக்க வெண்டாமே என்று தோன்றும்.

வேலைப் பளு தாங்க முடியாமல்
பொருமும் 40 வயது அம்மாக்களும்,
அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில்
நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும்
இன்னும் பிற சிலருக்கும்
முதுமை ஒரு வரம்.

தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்
தங்கள் அம்மா அப்பா
எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள்
என்ற நினைவு ஓடும்

அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும்.
மனைவிகள் சிந்தனை,மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு,
தாயார்கள் சொன்ன வார்த்தைகள் ,
மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?)
நம்மைக் கண்டுகொண்டவர்கள்,
தோழமை பேசினவர்கள்,
சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள்

இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் ஓடும்.
கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம், மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை , புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள்,
மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது,

இவைகள் ஞாபகம் வரும்
குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகள் வரும் என்று நினைக்கிறேன். இது :-))
நமக்குத் தெரியாத டாபிக்.

இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா
என்று யாரும் யோசிப்பதில்லை.
பெண்ணூக்குப் பையன் தேடும் போதும்,
பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும்
ஒரு நூதனமான சங்கடம் வரும்.
என்ன தெரியுமா?
நம்ம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ
நிலைமை மாறி,
பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும்,
இல்லை பையனோட அம்மா, அப்பவாகத்
தெரியும்போதும்,
"அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்."
வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன்.
ந்ம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.
இல்லாவிட்டால் பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்)
சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ fஃஒகஸ்
பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி,
பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து

கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும்.
'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.'
யேன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் எல்லோரும்.
சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி
கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது,
அப்போது புரியும்
ஒன்று,
நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு....
அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம்.
கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு
நாம் மனித வேடம் போட்ட பூதம்.
'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.'
இது இருக்கு பாரு, (என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்")

நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும்
அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி
அதுபோல் உலகத்தில இருக்கிற ந்அல்ல்தையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக்

காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும்
தேறாது.
பிராண்டட். மாமியார். அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை. சரி இப்போ பழைய கேஏள்விக்குப் போவோம். ந்ஈங்கள் ெல்லாம் மாடர்னா?
என்று கேட்ட அம்மாவின் தொனி
எனக்குப் புரியவில்லை.


குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது.
அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் , வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும்,
எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%)
அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.
ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்லாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்
கூடு மான மட்டும் சீக்கிரமே
ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு,
சபாவில் மெம்பராகித், தவராமல் டை (தலை) போட்டுக் கொண்டு
சிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா கோவில்,மாப்பிள்ளை இல்லாட்ட பையன் இரண்டு கார் வைத்து இருப்பது,
பெரிய வீடு வாங்கி கிரிஹபிரவேசம் செய்தது, என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள்.
வரணும்.
இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/
'அய்யோ பாவம் ந்மம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா,
அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது சத்தம் கேட்ட நினைவில்லை) எ ந்று விழுந்து விடுகிறாராம்.
ம்ம் இந்தப் பொன்னு தான் ெல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது
எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.
'இது சொந்தக் கதை இல்லை.'

இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா?












அப்படி இப்படி போயி,,


எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?

Wednesday, June 07, 2006

சந்தோஷம் இது சந்தோஷம்!!

' சந்தோஷம் இது சந்தோஷம், இந்தப் பொன்வீணை தரும் உல்லாசம்"இதே மாதிரி எத்தனையோ பாடல்கள். மனதின் நில்லாத குணத்தை ஒரு நல்ல உற்சாகமான
நிலைப்புக்கு கொண்டு வருகின்றன.ஒரு நிலைக்கு அழைக்கின்றன.
அதே போல் தான் வேறு வகையான இசையும்.அந்த இசை எந்த மொழியில் இருந்தாலும் ஒரு உலக இணைப்பாக செயல் படுவதைத்தான் நான்உணர்கிறேன்.
அதனால் தான் இளைய தலைமுறை வெஸ்டர்ன் ஜாஸ் கேட்கும்போதும், எங்கள் தலைமுறை ஹிந்தி திரைப்பாடல்களைக் கேட்டபோதும்,எனக்கு முந்திய தலைமுறை அரியக்குடி திரு ராமனுஜ ஐயங்காரின் குரல்வளத்தை அனுபவித்தபோதும்
எங்களால் சேர்ந்து ரசிக்க முடிந்ததது. .முடிகிறது.அந்த வகையில் எம்.எஸ் அம்மாவின் இசை எங்கள் எல்லோரையும் ஒரே தளத்தில் நிறுத்தியதுதான் அதிசயம்.இதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான்.
ஒரு தெய்வத்தின் குரலுக்குக் கட்டுப்படாமல் கூட இருக்க முடியுமா.?எத்தனை நாட்கள் காற்றினிலே வந்த கீதத்தைக் கேட்டுத் தூங்கி இருப்போம்!!எத்தனை வருடங்கள் திருவேங்கடத்தானைத் துயில் எழுப்பும் போதெ நம் மனத்தையும் தட்டி எழுப்பி இருக்கிறார்கள்! எத்தனையோ சிரம காலங்களில்
அந்த ஸஹஸ்ரநாமம் தானெ எங்களைக்கரையை நோக்கி அணைத்துக் கொண்டு வந்தது.ஆமாம், சுப்ரபாதத்துக்கும், ஸ்ரி அன்னமய்யா பாடல்களும், ஸஹஸ்ரநாமமும், தானாகவே தன்வசத்திலேயே நம்மை அரவணைக்கும் தன்மை கொண்டவை தான்.
ஆனால் இன்று வரை,எப்போதுமே எம்.எஸ்.அம்மா இசைத்த வண்ணம்தான் அவை நம் மனத்தில்குடியேறுகின்றன.தெலுங்கு மொழி என்ன என்று தெரியாது. ஆனால் அம்மா குரலில் பெருமாளிடமே முறையிட முடிகிறது. தாலாட்ட முடிகிறது. அன்னையின் அருள்
திருமஞ்சனம் காண முடிகிறது. மஹா பெரியவாள் கருணையை உணர முடிகிறது. காமாட்சியைக் காஞ்சிபுரம் போகாமலேயெ
வீட்டிலிருந்து என்னம்மா, என் அம்மா என்று கேட்கலாம்.என் அம்மா மாமியார் கமலம்மாவுக்கு கடைசி 4 வருடங்கள் புறக்கண் தெரியாமல் போன போது,கைப்பிடித்து நடத்தினது எம்.எஸ் அம்மாவின் குரல் தான்.ஏற்கனவே சுபாவத்தில் மிக உறுதி படைத்தவர் தான் என் கணவரின் அம்மா. இருந்தாலும்மனம் உடையாமல் பார்த்துக் கொண்டது இசைதான். ஜேசுதாஸ் சாரின் குருவாயூரப்பன் பாடல்களும், திரு பாலமுரளி கிருஷ்ணாவின் பத்ராசல ராமர்பாடல்களில் நிறைந்த பக்தி ரசமும்தான்.
இதைத்தான் எந்தரொ மஹானுபாவலு என்று இசைத்தார்களோ?அவர்களுக்கு வந்தனம்.மீண்டும் வந்தனம்

Saturday, June 03, 2006

குண்டாக இருப்பது தப்பா?

Posted by Picasaஇப்போது ஒல்லியாக,ஸ்லிம்மாக, தின்னாக,
எதையுமே தின்னக்கூடாத உடம்பு வாகுதான் கொண்டாடப்படுகிறது.
ஒரு மணியன், ஒரு சேவற்கொடியோன்,கொத்தமங்கலம் சுப்பு சார், சாவி சார் கதைகளில் வளர்ந்த எனக்கு அப்போது இருந்த வருத்தம் நாம் எப்போது அந்த மாதிரி இருப்போம் என்று ஒரே கவலை. எந்த மாதிரி? ஜயராஜ் சார் படம் போடுவாரே,, அதாவது வடிவோடு, அழகாக,பார்க்கிற மாதிரி!!
அதுவும் கோபுலு சார் போடும் படங்கள் பார்த்துவிட்டு நானும் சூடு போட்டுக்கும் பூனை போல், வரைந்து பார்த்ததில்( கை வளைந்தால் உடம்பும் வளையும் என்று யாரவது சொல்லி இருப்பார்கள்) எங்க அம்மா அப்பாவுக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்து விட்டது.
ஓஹோ நம்ம பொண்ணுக்கு சின்னக் கண்ணாக இருப்பதால் இந்த வில் போன்ற புருவம் வரைந்து மனதைத் தேற்றிக் கொள்ளுகிறாளோ, ஒட்டடை குச்சி என்று அழைக்கப்படுவதால் இந்த மிஸ் நிம்புபானி ஓவியங்கள் நோட்டுபுக் தாள்களில் நிரம்புகிறதோ என்று சீக்ரெட்டாகக் கவலை.
அப்பா அம்மாவிடம் கலந்து பேசி,
ஒரு இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் எங்கள் மூன்று பேரையும் அழைத்துப் பொதுவாக உடல் ஆரோக்கியக் குறிப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார்.
சின்னதம்பிக்கு தூக்கம் வந்தாலும் ஏதோ கதை போல என்று தலையை ஆட்டினான்.
பெரிய தம்பி அப்பாவிடம் நிறைய மரியாதை, அதனால் உன்னிப்பாக கேட்டுக்கொண்டான்.
எனக்கு as usual புரியாததால் ஜெனெரலாக ஆமாம்பா சொல்லிக் கொண்டு இருந்தேன். "ஆகையினாலே மனசு ஹெல்தியாக இருக்கணும்னால் நிறையப் படிக்கணும்,பேசணும், இதோ நீ கூட படம் வரயறே.
உனக்கு நல்ல ஓவியராக வர ஆசைனு தெரியரது. ஆனால் ஏன் கண் மாத்திரம் போடறே?" என்ற கேள்விக்குறியொடு நிறுத்தினார். ( அவரிடம் எனக்கு சொல்ல சாமர்த்தியம் போதவில்லை,, அப்பா எனக்கு கண் வரைக்கும் தான் ஒழுங்காக வரது அதுக்கு அப்புறம் கோணல் மாணலாப் போகிறதுனு)
அம்மாவும் அன்னை படத்தில் வரும் சந்திரபாபு பாட்டுப்போல்,புக்கைக் கண்டா கண்,
ஹிண்டு பேப்பரில கண்,
ஆனந்தவிகடன்லெ கண்ணு,
மளிகை சுத்தி வர பேப்பரில் கண்ணு கண்ணு
என்று பாடாத குறையாகச் சொன்னார்.
திடீரென முழித்துக் கொண்ட என் தம்பி, அப்பா அதே கண்கள் சினிமாப்பா என்றான்.
பெரியவனும் ஆமாம் மா,எல்லா கண்களும் நம்மையே பாக்கிற மாதிரி இருக்கு, ஜேம்ஸ்பாண்ட் மூவி மாதிரி.
எனக்கு வந்த கோபத்தில் ஏதாவது ரூமில் போய் விழுந்து அழலாம்னா தனி பெட் ரூம் கூட இல்லியே என்றுதான் தோன்றியது.
அப்புறம் ஒரு மாதிரி எனக்கு ஒருவிதமான கோளாறும் இல்லை என்று சாதித்து கொஞ்ச காலம் பென்சில், ரெட் பென்சில் ஒன்றும் தொடவில்லை.(அப்போதெல்லாம் கலர் கலராகப் பென்சில் வாங்கித்தர மாட்டார்கள்.)அதனால் நான் வரையும் பெண்கள் எல்லாம் சிவப்புப் புடவையும் கருப்பு டிசைனும் போட்ட ப்ளௌசுமாகத் தான் இருப்பார்கள். இவ்வளவு ஸ்தூலமான பாடிலைனைத் தேடி நான் அலைந்து மேலும். இளைத்தேன்.
இவ்வளவு கதை இப்போது எதற்கு/ தெரியுமா?
இரண்டு நாட்கள் முன்னால் நடந்த எங்க வீட்டு விழாவில் என்னைப் பார்த்த என் மாமி ஏன் நீ இளைக்கவே இல்லை?
வாக்கிங் போறியோ? சாப்பாடிலே கட்டுப்பாடு வேணும்மா.
வயசாயிடுத்து பார்த்தியா.... என்றெல்லாம் அடுக்கவும், (அவங்களுக்கும் என் வயசுதான்.அது வேற கடுப்பு. அவங்க இன்னும் ஸ்லிம் ஜேன். அதுக்கு வித்தியாசமான காரணங்கள் உண்டு.)
(அதற்காக நான் காலை எழுந்தவுடன் காப்பி, பின்பு கனிவுடன் ஆறு தோசை, மதியம் முழுதும் தூக்கம் ,இரவில் கலந்த சாதங்கள் என்று பூந்து வெள்ளாடலியே.அடடா எப்படி இருக்கும் அந்த லைஃப்?)
எனக்கு வந்த வெறியில் என் சுகர் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கே இருந்த மைசூர் பாகு, தட்டை, முறுக்கு ஜாங்கிரி எல்லாவற்றையும் கல்யாண சமையல் சாதம் பண்ண ஆசை வந்தது.
பிறகு தான் என் உரிமையான இந்த ப்ளாக் பதிவில் போட்டு மனதை சமாதானப் படுத்திக்கொண்டேன்.
48 கேஜி இருந்தவங்க 74கேஜி ஆவதற்கு 40 வருடம் ஆச்சு. அதனாலே இங்க சொல்ல வரது எல்லாம்
இப்படி இருந்தவங்க அப்படி ஆவதும் உண்டு. அப்படி இருந்தவங்க இப்படி ஆவதும் உண்டு. எல்லாம் காலம் செய்யும் கோலம். எனக்கு இப்பொ கூட ஆசை தான் கச்சேரி பண்ண,அதிர்ஷ்டம் என்னவோ டிரெட்மில் மேய்க்கறபடிதான் இருக்கு.
பரவாயில்லை நான் வெகு சந்தோஷமாகக் குண்டாகவே இருக்கிறென். யாருக்கு என்ன நஷ்டம்?

நீங்களெல்லாம் எப்படி?






Sunday, May 28, 2006

அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்-தேன்கூடு போட்டி

மலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம்? உண்டு. அசைக்க முடியாத குணம், . ,
கனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம், அது என்ன அம்மாவையும் கூட இழுக்கணும் என்று பெண்கள் யோசிக்கலாம். எப்படி இது உண்மையாகும்?உண்டும்மா உண்டு. கருத்து என்னவோ ஆதாரமாக இருந்த என் மாமியாரைப் பற்றீத்தான்.
நல்ல படிப்பாளி. அழகு, அடக்கம் என்று நிறைவான மனுஷி .
திருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு என்னை வரவேற்று அழைத்த அந்த நிமிடத்திலிருந்து
தன் சிகித்சைக்காக ஆம்புலன்சில் மாற்றப்பட்ட அந்த நிமிடம் வரை எங்களுக்கு நிழல் கொடுத்தவர் எங்கள் கமலம்மா தான்.

மாண்பு மிகுந்த மாமியார்கள் எனக்கு மிகப் பழக்கம். ...எனக்கு இரண்டு மாமியார்கள்.
அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.
ஒஹோ. பாலச்சந்தர் படம் போல் தோன்றுகிறதோ?
அதுவும் இல்லை. இவர்கள் இருவருடனும்தான் என் இல்வாழ்க்கை (கணவரும் கூட) ஒரு மங்களகரமான நாளில் ஆரம்பித்தது.

ஏன் கணவர் கூட என்று தானேசொல்ல வேண்டும்/ அவர்தானே முதலில்? அதுதான் எல்லோருக்கும் தெரியுமே.
திருமணமான புதிதில் எங்களுக்கு (அந்த காலத்தில்)
கணவர் எல்லாம் ஜுஜஜூபி. ஏனென்றால் அவர்கள் பக்கம் நாம் போவது காப்பி வேணுமா?
சாப்பிடக் கூப்பிடறங்க.
சொல்லத்தான்.

நான் சொல்வது கற்காலம் இல்லை. ஒரு 40 வருடங்கள் முன்னால்.
அவர்கள் மலை மாதிரி திடமாக இருந்து எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். ஒரு மொஃfஅசில் பெண்ணுக்கு என்ன தெரியுமொ அதைவிட ரொம்ப குறைவான அறிவுள்ள ஜீவன் நான்.
திருமணத்தன்னிக்கே " ஓ, இந்தப் பொண்ணு இவ்வளவு சிரிச்சுப் பேசறதே "என்று சொன்ன விருந்தினர் நடுவில் எனக்கு ஆதரவாகப் பக்கத்தில் நின்று கொண்டு எனக்கு பலம் கொடுதது என் அம்மாமியார் தான்.

எனக்கு அவரை அம்மா என்று கூப்பிடுவதில் தயக்கம் துளியும் வரவில்லை.
நீ எப்போ வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் போகலாம். ஒரே ஒரு வார்த்தை பாட்டி(அவங்களொட மாமியார்) கிட்டே சொல்லிட்டு போ.//
//அது அவர்களுக்குப் பழக்கமாகிப் போன வார்த்தை. அவ்வளவு மரியாதையும் தானும் அந்தப் பாட்டியிடம் வைத்து இருந்ததால் எனக்கும் வேறு நினைப்பு வரவில்லை..
எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)
பக்கத்தில் வந்து இப்படி பண்ண வேண்டாம்பா. நான் பார்த்துக்கிறென், என்று காப்பாத்துவார். ஏன் அந்த வார்த்தை?
அவருக்கும் மருமகளாக வந்த போது இருந்த சூழ்நிலை நினைவு வந்ததோ?
திருமதி எம்.எல்.வி பாடிய பாடலோடு 60 களில் ஒரு படம் வந்தது. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்ற படம்.
அதைப் பார்த்து மனம் திருந்தியவர்கள் எத்தனையோ பேர்கள்.
அதாவது இந்த மாதிரியும் நாம் இருக்கலாமே என்று நினைத்தவர்கள் இருந்தார்கள்
எங்க அம்மா ,
எங்கள் வீட்டில் எதுவுமே (personal management) பயிற்சி எடுக்காமல் தன் நல்ல குணத்தினாலேயெ எல்லோரையும் அரவணைத்து சென்றவர் எங்கள் கமலம்மா.
எந்த வித டென்ஷனாக இருந்தாலும் முகத்தில் காண்பிக்காமல் தீர்வு கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை.
ஒரு பெரிய குடும்பத்தின் ஊடல்கள் கூடல்கள் எல்லாவற்றையும் சமாளிப்பதைப் பார்த்து நான் அதிசயப்படுவேன்.
இவ்வளவையும் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டிய அவசியம்?
நானும் ஒரு மாமியாராக ப்ரொமோட் ஆகிவிட்டதால்.
குற்றம் காணாமல் குணம் மட்டும் கண்டு சிரிப்போடு வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்த என் அம்மாமியாரை இன்றும் என்றும் வணங்குகிறென் .

அவர் அவ்வளவு இல்லாவிட்டாலும் பத்து சதவிகிதம் இருந்தால் கூட போதும்.





Wednesday, May 24, 2006

வெள்ளீக்காக ஒரு பதிவு

Posted by Picasa இங்கே இருக்கும் குட்டிப் பூனையும் குட்டிப்பொண்ணும் நகல். நடக்கிற கதை நிஜம், அசல்.
சாதரணமான ஒரு நாளில், மழைப் பெய்ய வேண்டாத,மழை நின்னால் போதும் என்று தோணும் நேரத்தில் குட்டிப் பூனை அம்மாவைத் தொலைத்து விட்டது,.
அம்மா சொன்ன இடத்திலேயே இருந்து பார்தது பசி பொறுக்காமல் வெளியில் வந்துவிட்டது. அம்மாவைப் பற்றிக் கவலையில்லை, பசிதான் தாங்க முடியலையென்னு யோசிச்சு தான் இருந்த பால்கனிக்கு வெளியே எட்டிப் பார்த்தது.
பொட்டு பொட்டுனு தெரிக்கிற மழைத்துளிக்கு கொஞசம் சிலிர்த்துக் கொண்டு மேலேயும் சுத்தியும் பர்த்தது. அந்த விளிம்புக்கு கீழே இருந்த வீட்டில் ஒரு அம்மா தன்னோட குட்டிப் பொண்ணோட அவங்க வீட்டு செல்லத்தை தேடிகொண்டு இருந்தாள்." பென்னி,பென்னி'' என்று கூவியும் பென்னி வரும் வழியாகக் காணொம்.
குட்டிப்பொண்ணொ அழுகையை சுருதி கூட்டி அழைத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு பென்னி திரும்பி வருமென்று ந்ம்பிக்கையில்லை. அம்மாதான் பென்னிக்கு சிப்ஸ் கொடுக்க வேண்லாம்னு சொல்லிட்டாங்களெ, அதாலே பென்னி நிறய லே"ஸ் சிப்ஸ்
கிடைக்கிற வீட்டைத்தேடிப் போயிருக்கும்.
என்றபடி மேலே பார்த்த பொம்மிக்குப் பூனைக்குட்டி கண்ணில் பட்டது.
ஆச்சர்யத்தில் வாயை மூட மறந்து அம்ம கையைப் பிடித்து இழுத்தது பொம்மி. 'அம்ம அங்கே பாரு பூனை ''என்று குதிக்க ஆரம்பிதது. சூ சூ என்று விரட்டப் போனாள் அம்மா.அவல் விரட்டின வேகத்தில் பயந்த ந்ம்ம குட்டி அவங்க வீட்டு வராந்தாவிலேயெ விழுந்து விட்டது.
ஒரு நிமிடம் ஸ்டன் ஆகி அடுத்த நிமிடம் எழுந்துவிட்டது.
குட்டிகளுக்கே உண்டான சினேகத்தொடு பொம்மி பக்கத்திலே நின்று கொண்டு மீஈஈஇயாவ்வ் என்று இழுத்தது. சோகப்பாடலைக் கேட்ட பொம்மிக்கு பென்னி மறந்து விட்டது.
அடுத்து வந்த அரை மணி நேரத்தில் பால், படுக்கை பாஸ்கெட் என்று கொடுக்கப்பட்டு,(வெள்ளையாக இருந்ததாலும்,பொம்மியோட அம்மா தமிழ் பேசும் வித்தை அறிந்தவளாக இருந்ததாலும் ,வெள்ளி என்கிற பெயர் சூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டு பூனைகுட்டி கன கம்பீரமாக கழுத்து சிவப்பு பட்டை ரிப்பன் சகிதம் உலா வர ஆரம்பித்தது. பூனையாகவும் ஆகிவிட்டது.
அதான் மழை வந்துபோய் 6 மாதம் ஆகிவிட்டதே வெள்ளியும் பெண் பார்ப்பதாகக் கேள்வி.



Sunday, May 21, 2006

கில்லி !!

நன்றி நன்றி. திரு பாஸ்டன் பாலாவிற்கு.
அங்கீகாரம் டாப் லெவலில் இருந்து வருவது நிறைய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இதையே தம்பட்டம் அடிக்கத் தோன்றுகிறதே, இன்னும் நாலு பேரு வந்து பார்த்து காமெந்ட்ஸ் வேற போட்டுவிட்டால் கேட்கவே வேண்டாம்.
கதை நாயகன், சொன்ன பதில் தான் இன்னும் "
awesome!
paatti !did you really write abt me?"

மே மாதத் திருமணங்கள் 2 ஆம் பாகம் கீழ நத்தம்

Thursday, August 02, 2007 ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே நடுவில் கடிதங்கள் ,கேள்விகள் மாப்பிள்ளைக்கு சூட், பெண்ணுக்கு எத்தனை பட்...